IND vs SL 3rd T20 Match 2022 highlights in tamil: இந்தியா வருகை தந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில், மும்பையில் நடந்த முதல் டி20 போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும், புனேயில் நடந்த 2-வது போட்டியில் 16 ரன் வித்தியாசத்தில் இலங்கையும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி குஜராத்
இந்த ஜோடியில் இஷான் கிஷன் ஒரு ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். இதன்பிறகு வந்த ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடினர். அவர் 16 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த சூரியகுமார் தொடக்க வீரர் கில் உடன் ஜோடி அமைத்தார். அதிரடியாக ரன்களை சேர்த்து வந்த இந்த ஜோடியில் சூரியகுமார் அரைசதம் அடித்தார். கில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கையில் அவர் 2 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இதன்பிறகு வந்த கேப்டன் பாண்டியா 4 ரன்னிலும், ஹூடா 4 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் இந்தியா வலுவான ரன்களை குவித்துக் கொண்டிருந்தது. அதற்கு முக்கிய காரணமாக சூரியகுமார் இருந்தார். அவர் தனது அதிரடியான ஆட்டத்தால் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தார். மேலும், தனது 360 டிகிரி ஷாட்களை அடித்து சிக்ஸர் மழை பொழிந்தார்.
இவரது அதிரடியான ஆட்டம் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர உதவியது. ராஜ்கோட் மைதான மூலை முடுக்கெல்லாம் பந்துகளை விரட்டிய சூரியகுமார் 45 பந்துகளில் தனது 3வது சர்வதேச டி20 சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அதிரடியைக் கைவிடாத அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 51 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் எடுத்தார்.
𝓢𝓮𝓷𝓼𝓪𝓽𝓲𝓸𝓷𝓪𝓵 𝓢𝓾𝓻𝔂𝓪 👏👏
— BCCI (@BCCI) January 7, 2023
3⃣rd T20I ton for @surya_14kumar & what an outstanding knock this has been 🧨 🧨#INDvSL @mastercardindia pic.twitter.com/kM1CEmqw3A
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 228 ரன்களை குவித்தது. இலங்கை அணி தரப்பில் தில்ஷன் மதுஷங்க 2 விக்கெட்டையும், கசுன் ராஜித, வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்னே தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
A mighty batting display from #TeamIndia with Suryakumar Yadav dominating the show with an outstanding 1⃣1⃣2⃣* 🙌 🙌
— BCCI (@BCCI) January 7, 2023
Sri Lanka innings underway.
Scorecard 👉 https://t.co/hTaQA8AHr4 #INDvSL pic.twitter.com/x8TsVLOwGd
தொடர்ந்து 229 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு தொடக்க சிறப்பானதாக இருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்காளான பாத்தும் நிசாங்க – குசல் மெண்டிஸ் பவுண்டரி, சிக்ஸர்களை விரட்டினர். எனினும், இந்திய பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்னில் அவுட் ஆகி வெளியேறினர். அந்த அணியில் எந்த வீரரும் 30 ரன்களுக்கு மேல் எடுக்கவில்லை. இந்திய வீரர்களின் வேகம் மற்றும் சுழல் வலையில் சிக்கிய வீரர்கள் தங்களின் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணியினர் 137 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
இதனால், 91 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை இந்தியா வீழ்த்தியது. மேலும், 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி தரப்பில் தரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், உம்ரான் மாலிக், ஹர்திக் பாண்டியா, யுஸ்வேந்திர சாஹல் தலா 2 விக்கெட்டையும், அக்சர் படேல்
Arshdeep Singh picks up the final wicket of the innings as #TeamIndia win by 91 runs and clinch the series 2-1.
— BCCI (@BCCI) January 7, 2023
This is also India's 25th bilateral series win against Sri Lanka in India.#INDvSL @mastercardindia pic.twitter.com/AT7UyqA6hf
இலங்கைக்கு எதிராக ஆட்டநாயகன் விருதை சூரியகுமார் யாதவும், தொடரின் நாயகன் விருதை அக்சர் படேலும் வென்றனர்.
No surprises there as @surya_14kumar is adjudged Player of the Match for his scintillating unbeaten century in the 3rd T20I. 👏🏾🫡⭐️
— BCCI (@BCCI) January 7, 2023
Details – https://t.co/AU7EaMxCnx #INDvSL #TeamIndia @mastercardindia pic.twitter.com/bbWkyPRH4m
Sri Lanka in India, 3 T20I Series, 2023Saurashtra Cricket Association Stadium, Rajkot 02 June 2023
India 228/5 (20.0)
Sri Lanka 137 (16.4)
Match Ended ( Day – 3rd T20I ) India beat Sri Lanka by 91 runs
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 229 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இலங்கை அணி 137 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 229 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது இலங்கை. அந்த அணி 11 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்களை எடுத்துள்ளது.
இலங்கையின் வெற்றிக்கு 54 பந்துகளுக்கு 132 ரன்கள் தேவை.
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்களை குவித்துள்ளது.
சிக்ஸர் மழை பொழிந்த சூரியகுமார் 45 பந்துகளில் சதம் விளாசினார். அவர் 51 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் எடுத்தார்.
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. தற்போது 17 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்தியா 194 ரன்களை எடுத்துள்ளது.
ஒரு பவுண்டரியை விரட்டிய ஹூடா 4 ரன்னில் அவுட் ஆனார்.
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. தற்போது 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்தியா 178 ரன்களை எடுத்துள்ளது.
சிக்ஸரை பறக்கவிட முயன்ற கேப்டன் பாண்டியா 4 ரன்னில் அவுட் ஆனார்.
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. தற்போது 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்தியா 164 ரன்களை எடுத்துள்ளது.
மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் கில் 46 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. தற்போது 13 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்தியா 132 ரன்களை எடுத்துள்ளது.
அரைசதம் விளாசிய சூரியகுமார் 58 ரன்களுடனும், கில் 34 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. தற்போது 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்தியா 92 ரன்களை எடுத்துள்ளது.
சூரியகுமார் 25 ரன்களுடனும், கில் 28 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் – சுப்மான் கில் ஜோடி களமிறங்கினர். இந்த ஜோடியில் இஷான் கிஷன் ஒரு ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.
அதிரடியாக விளையாடி வந்த கில் – திரிபாதி ஜோடியில் 16 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ராகுல் திரிபாதி ஆட்டமிழந்தார். பவர் பிளே முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்தியா 53 ரன்களை எடுத்துள்ளது.
சூரியகுமார் – கில் ஜோடி களத்தில் உள்ளனர்.
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் – சுப்மான் கில் ஜோடி களமிறங்கினர். இந்த ஜோடியில் இஷான் கிஷன் ஒரு ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.
இந்தியா:
இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், ராகுல் திரிபாதி, ஹர்திக் பாண்டியா(கேப்டன்), தீபக்
இலங்கை:
பாத்தும் நிசாங்க, குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), அவிஷ்க பெர்னாண்டோ, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, தசுன் ஷனக (கேப்டன்), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்னே, மஹீஷ் தீக்ஷனா, கசுன் ராஜித, தில்ஷன் மதுஷங்க
இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இலங்கை:
பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ்(விக்கெட் கீப்பர்), தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்க, பானுக ராஜபக்ச, தசுன் ஷனக(சி), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷன, கசுன் ராஜித, டில்ஷான் மதுஷங்க.
இந்தியா:
இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், ராகுல் திரிபாதி, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, அக்சர் படேல், சிவம் மாவி, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் அல்லது ஹர்ஷல் படேல், யுஸ்வேந்திர சாஹல்
இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி தொடர்பான தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ‘இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.