'முதல உங்க டீமை சரிபடுத்துங்க, இந்திய அணி பத்தி அப்பறம் பேசலாம்' - ரணதுங்காவை வெளுத்து வாங்கிய ஆஸி,. வீரர் ஹாக்!
Brad Hogg comments on Arjuna Ranatunga latest interview Tamil News: இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக்.
Ind vs sl Tamil News: இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே இலங்கையில் முகாமிட்டுள்ள நிலையில், வீரர்கள் அனைவரும் தீவிர பயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisment
ஜூலை 13-ஆம் தேதி முதல் தொடங்க உள்ள இந்த தொடருக்கான கேப்டனாக அணியின் மூத்த வீரர் தவானும், பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டும் செயல்பட உள்ளர். எனவே கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. தவிர, இந்த தொடரில் விளையாடவுள்ள இளம் வீரர்களின் செயல்பாடுகள் குறித்தும் அனைவரும் ஆவலோடு உள்ளனர்.
இந்த நிலையில், இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி குறித்து பேசியுள்ள இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா, "இலங்கைக்கு வந்துள்ள இரண்டாம் தர அணி இங்கு வந்து விளையாடுவது எங்கள் அணியை அவமதிப்பது போன்ற ஒரு செயலாகும். ஏனெனில் முதன்மை அணியை தவிர்த்து இரண்டாம் கட்ட அணியை எங்களுடன் விளையாட வைத்து அவர்கள் வருமானம் பார்க்கின்றனர்" என்று குறிப்பிட்டிருந்தார்.
அதோடு, "இந்திய பி அணியோடு இலங்கை அணி விளையாட உள்ளது" என்றும் குற்றம் சாட்டி இருந்தார் ரணதுங்கா. இது வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரணதுங்காவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக்.
"இலங்கையில் உள்ள இந்திய அணியை பார்க்கும்போது அது இரண்டாம் தர அணி போன்று எனக்கு தெரியவில்லை. நிச்சயம் உலகின் எந்த ஒரு அணிக்கும் சவால்விடும் வகையில் தான் தற்போதைய இந்திய அணி உள்ளது. இதில் இலங்கை புகார் கூறும் அளவிற்கு ஒன்றும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. தொடரில் இலங்கை அணிக்கு தான் சிக்கல் உள்ளது. டி20 மற்றும் ஒருநாள் தொடரை இரண்டையும் இந்திய அணி எளிதாக வென்று விடும்
இலங்கை அணியின் தற்போது உள்ள நிலைமையைப் பார்க்கையில் அவர்கள் தான் அவர்களது அணியை சரி செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு இந்திய அணியை குற்றம் சாற்றலாம்" என்று ஹாக் கருத்து தெரிவித்துள்ளார்.

Follow Us

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.