India vs Sri Lanka Live Score: இந்தியா vs இலங்கை போட்டியை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

India vs Sri Lanka Live Score: இந்தியா vs இலங்கை போட்டியை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

India vs Sri Lanka Live Score: இந்தியா vs இலங்கை போட்டியை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India vs Sri Lanka Live streaming

India vs Sri Lanka Live streaming

India vs Sri Lanka Match Live Score Updates: உலகக் கோப்பை 2019 தொடரில், இன்று(ஜூலை.6) லீட்ஸ் நகரின் ஹெட்டிங்லே ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், டிமுத் கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும் மோதுகின்றன.

Advertisment

இரு அணிகளுக்கும் இதுவே கடைசி லீக் போட்டியாகும். 13 புள்ளிகளுடன் ஏற்கனவே அரையிறுதிக்கு இந்திய அணி தகுதிப் பெற்றுவிட்ட நிலையில், 8 புள்ளிகளுடன் இலங்கை உலகக் கோப்பையில் இருந்து வெளியேறி இருக்கிறது.

ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி விட்டதால், இன்றைய போட்டியின் முடிவுகளால் யாருக்கும் எந்த பாதிப்பு ஏற்படாது. இருப்பினும், முதலிடத்துக்கு முன்னேற, இந்தப் போட்டியின் வெற்றி இந்திய அணிக்கு உதவலாம்.

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

Advertisment
Advertisements

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் போட்டியை லைவாக கண்டு களிக்கலாம். ஆன்லைனில் ஹாட் ஸ்டார் மூலம் போட்டியைக் காணலாம். உங்கள் மொபைலில் ‘ஷேர் இட்’ ஆப் வைத்திருந்தால், அதன் வாயிலாக, ஹாட்ஸ்டார் மூலம் போட்டியை காணலாம்.

தவிர, நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் லைவ் ஸ்கோர் கார்டு மற்றும் பிரத்யேக லைவ் கமெண்ட்ரியை நேயர்கள் காணலாம்.

மழைக்கான வாய்ப்பு – 96%

ஈரப்பதம் – 73%

காற்று – 18 km/h

அதிகபட்ச வெப்பநிலை – 20 டிகிரி செல்சியஸ்

குறைந்தபட்ச வெப்பநிலை – 11 டிகிரி செல்சியஸ்

இன்றைய ஆட்டத்தின், மழை பெய்வதற்கான வாய்ப்பு மிக அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

World Cup

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: