IND vs WI 1st T20: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில், இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் வெஸ்ட் இண்டீஸின் தொடர் கிளைமேக்சை நெருங்கியுள்ளது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி, தற்போது டி20 தொடரில் இண்டீசுடன் மோதுகிறது.
1st T20I. It's all over! India won by 5 wickets https://t.co/902YX5mBES #IndvWI @Paytm
— BCCI (@BCCI) 4 November 2018
டி20-ல் நடப்பு சாம்பியன் என்பதை எல்லாம் தாண்டி, இந்த குறுகிய ஓவர் கிரிக்கெட்டில், வெஸ்ட் இண்டீஸ் அபாயகரமான அணி என்பதை மறுக்க முடியாது. பந்துகளை அசால்ட்டாக சிக்ஸர்களுக்கு தூக்கி ஃபீல்டர்களுடன் விளையாடாமல், ஆடியன்ஸுடன் விளையாடுவார்கள்.
இந்நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது.
10:16 PM - முதல் டி20 போட்டியில், இந்தியா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 17.5வது ஓவரில் 110 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றிப் பெற்றது. அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 31 ரன்களும், க்ருனல் பாண்ட்யா 21 ரன்களும் எடுத்து, விக்கெட் வீழ்ச்சியை தடுத்து, வெற்றியைப் பெற்றுத் தந்தனர்.
10:10 PM - இந்திய அணி வெற்றிப் பெற 18 பந்துகளில் 10 ரன்கள் தேவை.
09:55 PM - மனீஷ் பாண்டே அவுட். 19 ரன்னில் பியரி பந்தில் அவுட்டானார்.
09:45 PM - தினேஷ் கார்த்திக், மனீஷ் பாண்டே பார்ட்னர்ஷிப் களத்தில் உள்ளது. 'மேட் ஃபார் ஈச் அதர்' பார்ட்னர்ஷிப் தான் இது. நிதானமாக ஆடக் கூடியவர்கள் இருவரும். ஸோ, என்ன நடக்குது-னு பார்க்கலாம்.
09:27 PM - லோகேஷ் ராகுல் அவுட். 16 ரன்னில் பிரத்வெய்ட் பந்தில் டீப் ஸ்கொயர் லெக்கில் நின்றிருந்த பிராவோவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இந்தியா 45-4
09:17 PM - ரிஷப் பண்ட் அவுட். 1 ரன்னில் பிரத்வெய்ட் பந்தில், புதிதாக நிறுவியுள்ள படேல் சிலை உயரத்துக்கு அடித்து கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
09:11 PM - இந்த தொடரில், தாமஸ் ஓவரை எதிர்கொண்ட தவானின் நிலைமை,
முதல் ஒருநாள்: 0.4.0.0.0.போல்ட்
ஐந்தாவது ஒருநாள்: 4.0.0.2.போல்ட்
முதல் T20I: 0.0.0.போல்ட்
09:02 PM - ஒருநாள் தொடரில், தவானை ஒவ்வொரு முறையும் அவுட்டாக்கி வெறுப்பேற்றிய தாமஸ் ஓவரில், இந்தப் போட்டியில் மிடில் ஸ்டெம்ப் சிதற அவுட்டானார் தவான். அதே ஆள்... அதே அடி.
08:55 PM - முதல் ஓவரை வீசிய தாமஸின் ஐந்தாவது பந்தில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து 6 ரன்னில் வெளியேறினார் கேப்டன் ரோஹித் ஷர்மா.
08:48 PM - இந்தியா பேட்டிங் செய்ய களமிறங்கியது. டஃப் கொடுக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
08:38 PM - 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து பவ்யத்துடன் 109 ரன்களில் சரண்டர் ஆனது வெஸ்ட் இண்டீஸ்.
08:25 PM - எட்டாவது விக்கெட்டாக ஃபேபியன் ஆலன் அவுட். 20 பந்தில் 27 ரன்கள் எடுத்த இந்த புண்ணியவான் தான் அணியின் டாப் ஸ்கோரர்.
08:20 PM - வெஸ்ட் இண்டீஸ் 100 ரன்னாவது எடுக்குமா?
08:10 PM - ஏழாவது விக்கெட்டாக கேப்டன் பிரத்வெய்ட் அவுட்.
08:00 PM - பிராவோ, பவல் அடுத்தடுத்து அவுட்.
07:53 PM - பிராவோ அவுட். குல்தீப் யாதவ் ஓவரில் இவரும் சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு, 5 ரன்களில் கேட்ச் ஆனார். வெஸ்ட் இண்டீஸ் வீழ்ச்சியை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. (சொன்னதையே திரும்ப திரும்ப சொல்ற நீ)
07:50 PM - பொல்லார்ட் அவுட். க்ருனல் பாண்ட்யா ஓவரில் இவரும் சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு, 14 ரன்களில் கேட்ச் ஆனார். வெஸ்ட் இண்டீஸ் வீழ்ச்சியை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.
Celebrations galore for @krunalpandya24 as he gets his first international wicket ????????#INDvWI pic.twitter.com/AYFsHS7Y6p
— BCCI (@BCCI) 4 November 2018
07:40 PM - அடுத்தடுத்து மூன்று விக்கெட்கள் விழுந்ததால், வெஸ்ட் இண்டீஸ் மிக நிதானமாக பேட்டிங் செய்து வருகிறது. பொல்லார்ட் 16 பந்தில் 5 ரன் எடுத்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
07: 30 PM - 'அவசரப்பட்டு அவுட்டாகிட்டியே பரட்ட' என்பது போல் வெஸ்ட் இண்டீசின் அதிரடி வீரர் ஹெட்மயர் 10 ரன்னில், பும்ராவின் ஷார்ட் பிட்ச் பந்தில், சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு வெளியேறினார்.
07:15 PM - இரண்டாவது விக்கெட். 14 ரன்னில் ரன் அவுட் ஆனார் ஷாய் ஹோப்.
07:10 PM - இதோ முதல் விக்கெட். உமேஷ் யாதவ் ஓவரில் சீனியர் வீரர் தினேஷ் ராம்தின் 2 ரன்களில் அவுட். தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ராம்தின். வெஸ்ட் இண்டீஸ் 16/1
06:50 PM - வெஸ்ட் இண்டீசும் சளைத்தது அல்ல.. மாஸ் காட்டும் வெஸ்ட் இண்டீஸ் அணி : ரோவ்மேன் பவல், டேரன் பிராவோ, ஷாய் ஹோப், ஷிம்ரான் ஹெட்மயர், தினேஷ் ராம்தின், கீரன் பொல்லார்ட், கார்லஸ் பிரத்வெய்ட் (C), கீமோ பால், ஃபேபியன் அலன், கேரி பியரே, ஓஷானே தாமஸ்
06:40 PM - இந்திய அணி வீரர்கள் விவரம்: ரோஹித் ஷர்மா (C), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட், மனீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக்(WK), க்ருனல் பாண்ட்யா, குல்தீப் யாதவ், பும்ரா, கலீல் அஹ்மது, உமேஷ் யாதவ்.
06:30 PM - டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
06:15 PM - க்ருனல் பாண்ட்யா மற்றும் கலீல் அஹ்மது ஆகியோருக்கு முதல் டி20 போட்டியில் ஆடுவதற்கான கேப் அணிவிக்கப்பட்டுள்ளது. அப்படியெனில், இருவரும் இன்றைய போட்டியில் ஆடுவது உறுதி. டாஸ் போட்ட பிறகு முழு விவரம் தெரிய வரும்.
???????? FRAMED ????????#INDvWI pic.twitter.com/W4B0YWaFLP
— BCCI (@BCCI) 4 November 2018
05:30 PM - தோனி இல்லாமல், உள்நாட்டில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் முதல் சர்வதேச டி20 போட்டி இதுவேயாகும். இதுவரை, சொந்த மண்ணில், இந்திய அணி விளையாடியுள்ள 31 டி20 போட்டிகளிலும் தோனி விளையாடியிருக்கிறார். வீ மிஸ் யூ தோனி!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.