Advertisment

IND vs WI 1st T20I Score: முதல் டி20: மெகா ஸ்கோரை விரட்டிப் பிடித்து வென்ற இந்தியா

India vs West Indies 1st T20I Full Scorecard: இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IND vs WI 1st T20I Live Score

IND vs WI 1st T20I Live Score

IND vs WI T20 Online Streaming: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

Advertisment

டி20 களில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனித்துவம் வாய்ந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். அணியின் 11 வீரர்களும் ஹிட்டர்களாக இருப்பதால் தான் தனித்துவம் என்ற இந்த அடையாளம். அப்படியொரு ஸ்பெஷலிஸ்ட் அணி,

டி20 தொடரில் இந்திய அணியை இந்திய மண்ணில் எதிர்கொண்டால்?

அதுவும் கோலி தலைமையிலான இந்திய அணியை எதிர்கொண்டால்?

அதுவும், முதல் பேட்டிங்கில் டி20ல் சொதப்பும் இந்திய அணியை எதிர்கொண்டால்....?

அந்த தொடர் எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும்..!! அப்படியொரு தொடர் தான் இன்று நடைபெற்றது.

விறுவிறுப்பு, பரபரப்பு, கரகரப்பு என்று எதற்கும் இங்கே பஞ்சம் கிடையாது. யார் பங்கம் ஆவப் போவது என்பதே ஹைலைட்டாக இருந்தது.

 

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ், 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது, பிறகு, இந்திய கேப்டன் விராட் கோலியின் 94 ரன்கள் பாய்ச்சலில் இந்திய அணி, 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்து வென்றது.

Live Blog

India vs West Indies 1st T20I Score, Rajiv Gandhi International Stadium, Hyderabad : இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20














Highlights

    22:28 (IST)06 Dec 2019

    இந்தியா வெற்றி

    18.4வது ஓவரில், இந்திய அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து மெகா வெற்றிப் பெற்றது. கேப்டன் விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 94 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். 

    இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், 1-0 என இந்தியா முன்னிலையில் உள்ளது.

    22:14 (IST)06 Dec 2019

    சல்யூட் வாங்கிய ரிஷப் பண்ட்

    நம்ம ஷெல்டன் காட்ரெல் விக்கெட் எடுத்தால் ராயல் சல்யூட் வைப்பாப்ள... இன்றைய போட்டியில் அவருக்கு சல்யூட் வைக்க இதுவரை வாய்ப்பே கிடைக்காமல் இருந்த நிலையில், ரிஷப் பண்ட் 'நான் இருக்கிறேன்' என்று ஆதரவு கரம் கொடுத்திருக்கிறார். 

    காட்ரெல் ஓவரில் 18 ரன்களில், ரிஷப் பண்ட் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    22:03 (IST)06 Dec 2019

    கோலி அரை சதம்

    வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த இலக்கை இந்தியா எட்டிவிடுமா என்று தெரியவில்லை. முக்கியமான கட்டத்தில், லோகேஷ் ராகுல் 62 ரன்களில் கேட்ச்சாக, விராட் கோலி அரைசதம் அடித்துள்ளார்.

    21:48 (IST)06 Dec 2019

    லோகேஷ் ராகுல் அரைசதம்

    13வது ஓவர் முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்துள்ளது. லோகேஷ் ராகுல் அரைசதம் அடித்துள்ளார். 

    21:05 (IST)06 Dec 2019

    ஏமாந்த ரோஹித்....

    ஸ்பின்னர் பியரி ஓவரில் இறங்கி வந்து லெக் சைடில் தூக்கி அடித்த ரோஹித், 8 ரன்களில் ஹெட்மயரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினர். 

    ஹிட்மேனுக்கு கரெக்டா ஆள நிக்க வச்சு தூக்கிட்டானுங்களே!!

    20:52 (IST)06 Dec 2019

    டி20ல் இந்தியாவின் அதிகபட்ச சேஸிங்

    207 v SL மொஹாலி 2009
    202 v Aus ராஜ்கோட் 2013
    199 v Eng பிரிஸ்டோல் 2018
    198 v Aus சிட்னி 2016

    இந்தியாவுக்கு எதிராக டி20ல் ஒரு அணி அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள்

    21 WI லாண்டர்ஹில் 2016
    16 Aus பிரிட்ஜ்டவுன் 2010
    15 WI ஹைதராபாத் 2019 *

    இந்தியாவுக்கு எதிராக இந்திய மண்ணில் அடிக்கப்பட்ட அதிகபட்ச டி20 ஸ்கோர்

    215 SL நாக்பூர் 2009
    207 WI ஹைதராபாத் 2019 *
    206 SL மொஹாலி 2009
    201 Aus ராஜ்கோட் 2013
    200 SA தரம்சாலா 2015

    டி20ல் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்த இந்திய பவுலர்கள்

    64 சாஹல் v SA செஞ்சூரியன் 2018
    57 ஜோகிந்தர் சர்மா v Eng டர்பன் 2007
    56 தீபக் சாஹர் v WI ஹைதராபாத் 2019 *

    20:45 (IST)06 Dec 2019

    ரோஹித் - ராகுல் களத்தில்...

    208 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய ஓப்பனர்கள் ரோஹித் ஷர்மா - லோகேஷ் ராகுல் களமிறங்கியுள்ளனர். 

    சேஸ் செய்யுமா இந்தியா?

    20:34 (IST)06 Dec 2019

    208 ரன்கள் இலக்கு

    20 ஓவர்கள் முடிவில், வெஸ்ட் இண்டீஸ், 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது.

    வெஸ்ட் இண்டீஸ் தரத்துக்கு ஒரு 20 ரன்கள் கம்மி தான்...

    20:22 (IST)06 Dec 2019

    பொல்லார்ட் அவுட்

    காற்று இந்தியா பக்கம் வீசுகிறதே!!

    சாஹலின் அதே ஓவரில், கீரன் பொல்லார்ட் 37 ரன்களில் போல்ட் ஆனார். 

    20:20 (IST)06 Dec 2019

    ஹெட்மயர் அவுட்

    சாஹல் ஓவரில், 56 ரன்களில் ஹெட்மயர் அவுட்டாகி வெளியேறினார். 

    வெஸ்ட் இண்டீஸ் 17.1 ஓவரில் 172-4

    20:11 (IST)06 Dec 2019

    ஹெட்மயர் 50

    கடந்த ஐபிஎல் சீசனில் ஒரு போட்டியில் கூட ஆர்சிபி அணிக்கு உருப்படியாக ஆடாத ஹெட்மயர், தன் தாய் நாட்டுக்காக சிறப்பாக இன்று ஆடியுள்ளார். 35 பந்துகளில் அரைசதம் அடித்து களத்தில் நிற்கிறார். 

    19:48 (IST)06 Dec 2019

    கிங் அவுட்

    அவன் தான் மணிக்கு ஸ்பின்னுலயே மணிக்கு 500 கி.மீ வேகத்துல போடுறான்ல... இறங்கி வந்து ஆடலாமா?பிழைக்க தெரியாத பிள்ளையா இருக்குறீரே!!

    ஜடேஜா ஓவரில், கிங் 31  ரன்களில் ஸ்டெம்பிங் ஆனார்.

    19:30 (IST)06 Dec 2019

    லெவிஸ் அவுட்

    ஒருவழியாக எவின் லெவிஸ் வாஷிங்டன் சுந்தர் ஓவரில் அவுட்டானார். 17 பந்துகளில் 40 ரன்களை விளாசித் தள்ளி அடங்கியிருக்கிறது இந்த எவின் புயல்.

    19:27 (IST)06 Dec 2019

    இந்திய பவுலர்களை டரியலாக்கும் வெ.இ.,

    தீபக் சாஹர் வீசிய 2வது ஓவரில் இரண்டு சிக்ஸர், ஒரு பவுண்டரி என பிரித்து எடுக்கப்பட்டது. லெவிஸ், கிங் தலா ஒரு சிக்ஸரை அந்த ஓவரில் பறக்கவிட்டனர். சாஹர் மட்டுமல்லாது புவனேஷ் குமார் ஓவரையும் வெஸ்ட் இண்டீஸ் சாத்தி வருகிறது. 

    5 ஓவர்கள் முடிவில் 57-1

    19:07 (IST)06 Dec 2019

    சிம்மன்ஸ் அவுட்

    வாஷிங்டன் சுந்தர் வீசிய முதல் ஓவரில், எவின் லெவிஸ் சிக்ஸர் பறக்கவிட்ட நிலையில், தீபக் சாஹர் வீசிய இரண்டாவது ஓவரில், சிம்மன்ஸ் 2 ரன்களில் ஸ்லிப்பில் கேட்ச்சாகி வெளியேறினார்.

    18:53 (IST)06 Dec 2019

    வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் XI

    லென்டி சிம்மன்ஸ், எவின் லெவிஸ், பிரண்டன் கிங், ஷிம்ரோன் ஹெட்மயர், கீரன் பொல்லார்ட்(c), தினேஷ் ராம்தின்(w), ஜேசன் ஹோல்டர், கேரி பியர், ஷெல்டன் காட்ரெல், கெஸ்ரிக் வில்லியம்ஸ், ஹெய்டன் வால்ஷ்

    18:37 (IST)06 Dec 2019

    இந்தியா பிளேயிங் XI

    விராட் கோலி(c), ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(w), ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ் குமார், தீபக் சாஹர், யுவேந்திர சாஹல்.

    18:33 (IST)06 Dec 2019

    வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்

    டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். சேஸிங் எங்களது பலம் என்பதால் பவுலிங் தேர்வு செய்கிறோம் என்று கோலி தெரிவித்துள்ளார். 

    18:14 (IST)06 Dec 2019

    சேப்பாக்கத்தில் கிரிக்கெட் மேட்ச்

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் 15-ம் தேதி நடக்க உள்ளது. நீண்ட நாளுக்கு பிறகு சென்னையில் இந்திய அணி விளையாடும் போட்டி நடக்க உள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில், இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 8-ம் தேதி தொடங்குகிறது. குறைந்தபட்சம் ரூ.1200 ரூபாயிலிருந்து 12 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் விற்பனை செய்யப்படவுள்ளது.

    1200, 2400, 4800, 6500,12000 ரூபாய் ஆகிய தொகைகளுக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

    17:32 (IST)06 Dec 2019

    Virat Kohli India Vs West Indies Bcci
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment