India vs West Indies, 2nd ODI : வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் போட்டியில் 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி இன்று வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 2 வது போட்டியில் மோதுகிறது. 2வது போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி விளையாடியது.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 3 ரன் வித்தியாசத்தில் பரபரப்பான வெற்றி பெற்றது.
இதையடுத்து, இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே குயீன்ஸ் பார்க் ஓவல் மையதானத்தில் 2வது ஒரு நாள் போட்டி நடைபெற்றது.
கடந்த போட்டியில், ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவான் சிறப்பாக விளையாடினார்கள். அதே போல, பந்துவீச்சில் முகமது சிராஜ் அற்புதமாகப் பந்து வீசினார். இந்திய அணியின் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி முதலாவது போட்டியில் 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளனர். 2வது போட்டியிலும் வெற்றி பெற்றால் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றும். இதனால், இந்திய அணியின் ரசிகர்கள் இந்தியா இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
அதே நேரத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணி சொந்த மண்ணில் விளையாடுவதால், ரசிகர்களின் உற்சாகத்தில், 2வது போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற சமன் செய்து 3வது மற்றும் இறுதிப்போட்டியை மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளாக்குமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணியில், ஷாய் ஹோப், கைல் மேயெர்ஸ், ஷர்மார் ப்ரூக்ஸ், பிராண்டன் கிங், நிகோலஸ் பூரண் (கேப்டன்), ரோவ்மன் பவெல், அகீல் ஹோசெய்ன், ரோமரியோ ஷெபர்ட், ஹெய்டன் வால்ஷ் ஜூனியர், அல்சாரி ஜோசப், ஜெய்டன் சீல்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணியில், ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், முஹமது சிராஜ், ஆவேஷ் கான் ஆகியோர் இடம்பெறுள்ளனர்.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. அந்த அணியின் தொடர் தொடக்க விரர்கள் ஷாய் ஹோப், கைல் மேயெர்ஸ் நிதானமாக விளையாடினார்கள்.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் மேயர்ஸ் 39 ரன்னில் ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த ஷமார் புரூக்ஸ் 35 ரன்களில் அவுட் அனாஅர். பிரான்டன் கிங் டக் அவுட் ஆகி வந்த வேகத்திலேயே நடையை கட்டினார். 4-வது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப்புடன், கேப்டன் நிகோலஸ் பூரண் கைகோர்த்து அணியை வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றனர். பூரண் 74 ரன்கள் (77 பந்து, ஒரு பவுண்டரி, 6 சிக்சர்) அடித்தார். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய ஷாய் ஹோப் யுஸ்வேந்திர சாஹலின் பந்து வீச்சில் சிக்சர் அடித்து தனது 13-வது சதத்தை பதிவு செய்தார்.
ஷாய் ஹோப்க்கு இது 100-வது ஒரு நாள் போட்டி என்பதால் சதமடித்ததால் அவருக்கு சிறப்பான நாளாக அமைந்தது. இதன் மூலம், 100-வது ஆட்டத்தில் செஞ்சுரி அடித்த 10-வது வீரராக சாதனை பட்டியலில் இணைந்தார். ஷாய் ஹோப் 115 ரன்கள் (135 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார்.
முடிவில் அகேல் ஹூசைன் 6 (4) ரன்களும், ரோமோரியோ ஷெப்பர்டு 15 (11) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 50 ஒவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளும், தீபக் ஹூடா, அக்சர் படேல் மற்றும் சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதன் மூலம், இந்திய அணி 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கேப்டன் ஷிகார் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
ஷிகார் தவான் 13 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக சுப்மன் கில்லுடன் ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் நிதான ஆட்டத்தால் அணியின் ரன்ரேட் மெல்ல உயர்ந்தது. சுப்மன் கில் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 9 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார்.
அடுத்ததாக ஷ்ரேயாஸ் அய்யர் உடன் ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் சிறப்பாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
ஷ்ரேயாஸ் ஐயர் - சஞ்சு சாம்சன் ஜோடி அரைசதத்தை பதிவு செய்து விளையாடிக்கொண்டிருந்தபோது ஷ்ரேயாஸ் ஐயர் 63 (71) ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சனும் அரைசதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 54 (51) ரன்களில் ரன் அவுட் ஆனார். அவரைத்தொடர்ந்து களமிறங்கி ரன் குவிப்பில் ஈடுபட்ட தீபக் ஹூடா 33 ரனக்ளில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
அவரைதொடர்ந்து களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் 3 ரன்களும், அவேஸ் கான் 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆனாலும், மறுமுனையில் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்ட அக்ஷர் பட்டேல் தனது அரை சதத்தை பதிவு செய்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். கடைசி ஓவரில் வெற்றி பெற 8 ரன்கள் தேவைப்பட்டநிலையில் 2 ரன்கள் ஓடி எடுத்தார். கடைசி 2 பந்துகள் மீதம் இருந்தநிலையில் அக்ஷர் பட்டேல் சிக்சர் அடித்து அணியை வெற்றிபெற செய்தார்.
அக்ஷர் பட்டேலின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 49.4 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அக்ஷர் பட்டேல் 35 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.