Advertisment

IND vs WI: 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி; தொடரை வென்றது

LIVE Stream India vs West Indies match Online Tamil News: மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 2 ஆவது ஒரு நாள் போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றியது இந்திய அணி

author-image
WebDesk
New Update
Ind vs wi 2nd ODI Tamil News: Live Cricket Score and latest updates tamil

India vs West Indies 2nd ODI Live Cricket Score Updates Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் கடந்த ஞாயிற்று கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. இதனால், தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Advertisment

இந்நிலையில், இவ்விரு அணிகளும் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி அதே மைதானத்தில் இன்று புதன்கிழமை நடக்கிறது. ஞாயிற்று கிழமை நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா வெஸ்ட் இண்டீசை 176 ரன்னில் சுருட்டி இருந்து. மேலும், 177 ரன்கள் கொண்ட இலக்கை 22 ஓவர்கள் மீதம் வைத்து எட்டிப்பிடித்தது.

publive-image

இந்திய அணியின் சுழல் சூறாவளிகள் யுஸ்வேந்திர சாஹலும், வாஷிங்டன் சுந்தரும் கூட்டாக 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினர். கேப்டன் ரோகித் சர்மாவின் அரைசதம் அணிக்கு இலக்கை எட்ட வலு சேர்த்தது. ஆனால் முன்னாள் கேப்டன் விராட் கோலி 8 ரன்னில் ஷாட்பிட்ச் பந்து வீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்திருந்தார். எனினும், இன்றைய ஆட்டத்தில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.

100வது ஒருநாள் போட்டியில் கோலி

publive-image

விராட் கோலி தனது 13 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் உள்நாட்டில் மொத்தம் 99 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இன்று அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான களமிறங்கும் போட்டி அவருக்கு 100வது ஒருநாள் போட்டியாகும்.

இதன் மூலம் கோலி, சொந்த மண்ணில் 100 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 36வது கிரிக்கெட் வீரராகவும், இந்தியாவில் இருந்து ஐந்தாவது வீரராகவும் இருக்கிறார். மேலும், வரலாற்று பட்டியலில் அவர் நட்சத்திர வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் எம்எஸ் தோனி போன்றவர்களுடனும் இணைகிறார்.

publive-image

விராட் கோலி 99 ஒருநாள் போட்டிகளில், 96 இன்னிங்ஸில் 19 சதங்கள் மற்றும் 25 அரை சதங்களுடன் 5002 ரன்களைக் குவித்துள்ளார். அவரது சராசரி 59.64 ஆக உள்ளது. தவிர, சொந்த மண்ணில் 99 ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கோலி முதலிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் ஜாம்பவான் வீரர் சச்சின் 13 சதங்களுடன் 2வது இடத்தில். உள்ளார்.

மீண்டும் அணிக்கு திரும்பும் ராகுல்

இந்திய அணியின் துணை கேப்டன் லோகேஷ் ராகுல் அணியில் இணைய தயாராக உள்ளார். அவர் அணியில் தொடக்க வீரராக சேர்க்கப்படும் பட்சத்தில் தொடக்க வீரர் இஷான் கிஷன் வெளியேற்ற வேண்டியிருக்கும். ராகுல் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய விரும்பினால், புதுமுக வீரர் தீபக் ஹூடா விளையாட வாய்ப்பில்லை. எவ்வாறாயினும், இந்த இருவரில் ஒருவர் வெளியே அமர வேண்டிய நிலை ஏற்படும்.

மூத்த தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தனிமைப்படுத்துதலுக்கு பிறகு அவர்கள் நேற்று லேசான பயிற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், அவர்கள் உடனடியாக இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான ஆடும் லெவன் அணியில் சேர்க்கப்படுவது சாத்தியமில்லை.

50 ஓவர்கள் முழுமையாக பேட் செய்ய வேண்டும் - கேப்டன் பொல்லார்ட்

வெஸ்ட்இண்டீஸ் அணியை பொறுத்தவரை, ஒவ்வொரு ஆட்டத்திலும் 50 ஓவர்கள் முழுமையாக பேட் செய்ய விரும்புவதாக அந்த அணியின் கேப்டன் பொல்லார்ட் தெரிவித்து உள்ளார். இந்திய அணிக்கெதிரான முதல் ஆட்டத்தில் அந்த அணி 43.5 ஓவர்களில் ஆல்-அவுட் ஆகியது. தவிர, அந்த கடைசியாக விளையாடிய 7 ஆட்டங்களில் 6-ல் ஆல்-அவுட் ஆகி இருக்கிறது.

டி-20 போட்டிகளில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வெஸ்ட்இண்டீஸ் அணி ஒரு நாள் போட்டியில் கோட்டையை விட்டு விடுகிறது. இதற்கு பரிகாரம் தேடும் வகையில் இன்றைய ஆட்டத்தில் தொடர் முயற்சிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் சொந்த மண்ணில் தனது ஆதிக்கை தொடரவே இந்தியா விரும்பும்.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பூரான் பந்துவீச்சை தேர்வு செய்தார். இப்போட்டியில் காயம் காரணமாக கேப்டன் கெய்ரன் பொல்லார்ட் விளையாடவில்லை. இந்திய அணியில் இஷான் கிஷன் நீக்கப்பட்டு கே எல் ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார்.

களமிறங்கும் இரு அணி வீரர்கள் பட்டியல் பின் வருமாறு:

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல் , விராட் கோலி, ரிஷாப் பண்ட், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா.

வெஸ்ட் இண்டீஸ்: ஷாய் ஹோப், பிரான்டன் கிங், டேரன் பிராவோ, ஷமார் புரூக்ஸ், நிகோலஸ் பூரன்(கேப்டன்), ஜாசன் ஹோல்டர், ஓடியன் ஸ்மித், அகேல் ஹூசைன், பாபியன் ஆலென், அல்ஜாரி ஜோசப், கெமார் ரோச்.

இந்தியா பேட்டிங்

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் மற்றும் ரிஷப் பண்ட் களம் இறங்கினர். ரோஹித் 5 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். ரோச் பந்தில் ஹோப்பிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ரோஹித். பின்னர் களமிறங்கிய கோலி, பண்ட் உடன் சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் இருவரும் தலா 18 ரன்களில் வெளியேறினர். இருவரது விக்கெட்களையும் ஒடியன் ஸ்மித் வீழ்த்தினார்.

அடுத்ததாக களமிறங்கிய ராகுல் மற்றும் சூர்யகுமார் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ராகுல் அதிரடியாக ஆட, சூர்யகுமார் நிதானமாக ஆடினார். அரை சதத்தை நெருங்கிய நிலையில் ராகுல் ரன் அவுட் ஆகி வெளியேறினார். ராகுல் 48 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் சேர்த்தார். நிதாமான ஆடிய சூர்யகுமார் 64 ரன்களில் அவுட் ஆனார்.

அடுத்ததாக களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் மற்றும் தீபக் ஹூடா ஜோடி நிலைத்து நின்று ஆடி ரன் குவிக்க முனைந்தது. இருப்பினும் வாஷிங்டன் சுந்தர் 24 ரன்களிலும், தீபக் ஹூடா 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கியவர்களில் தாக்கூர் 8 ரன்கள், சிராஜ் 3 ரன்கள் மற்றும் சஹால் 11 ரன்களும் எடுத்தனர். இதனால், இந்திய அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 237 ரன்கள் மட்டுமே எடுத்தது. மேற்கு இந்திய தீவுகள் பந்து வீச்சில் ஜோசப் மற்றும் ஸ்மித் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

மேற்கு இந்திய தீவுகள் பேட்டிங்

அடுத்ததாக களம் இறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கிய ஹோப் மற்றும் ப்ரெண்டன் கிங் ஜோடி 32 ரன்கள் சேர்த்த நிலையில், ப்ரெண்டன் கிங் அவுட் ஆனார். அடுத்து வந்த டேரன் ப்ராவோ 1 ரன்னில் வெளியேறினார். இருவரும் ப்ரசித் கிருஷ்ணா பந்தில் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினர். அடுத்து ஹோப்புடன் ஜோடி சேர்ந்த ப்ரூக்ஸ் நிதானமாக விளையாடினார்.

இந்தநிலையில் ஹோப் 27 ரன்களில் அவுட் ஆனார். அடுத்த களமிறங்கிய பூரன் 9 ரன்களிலும், ஹோல்டர் 2 ரன்களிலும் அவுட் ஆக, வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அடுத்து களமிறங்கிய ஹோசேன் சற்று நிலைத்து ஆடினார். ஆலன் 13 ரன்களிலும் ஸ்மித் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தாலும், ஒரு பக்கம் ஹோசேன் நிதானமாக ஆடி வந்தார். இருப்பினும் அவர் 34 ரன்கள் எடுத்திருந்தபோது, தாக்கூர் பந்தில் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ரோச் டக் அவுட் ஆக வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அந்த அணி 46 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்கள் மட்டுமே எடுத்தது.  

இதனையடுத்து இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. மேலும் 2-0 என்ற கணக்கில் தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sports Cricket Indian Cricket Team Indian Cricket India Vs West Indies
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment