Advertisment

India vs West Indies 2nd T20: இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் லைவ் ஸ்கோர் கார்டு

India vs West Indies 2nd t20 live streaming: சைனியின் Raw Pace வெஸ்ட் இண்டீஸை இன்றும் அச்சுறுத்தும் என எதிர்பார்க்கலாம். அவரது இண்டன்ட் இன்றும் தொடர்ந்தால், நிச்சயம் இது சாத்தியம் தான்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
ind vs wi 2nd t20 india vs west indies live streaming

ind vs wi 2nd t20 india vs west indies live streaming

India vs West Indies 2nd T20I Live Streaming: ஒரு லோ ஸ்கோரிங் கேமை தட்டுத் தடுமாறி ஒருவித பீதியுடன் வென்றிருக்கும் இந்திய அணி, இன்று வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் விளையாடுகிறது.

Advertisment

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில், முதல் போட்டி நேற்று(ஆக.3) அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் நடைபெற்றது. ஸ்டேடியத்தில் Dibbly dobbly சூழலை யாரோ சூனியம் செய்து வைத்திருப்பார்கள் போல... முதலில் பேட்டிங் செய்த டி20 காட்டாறு வெஸ்ட் இண்டீஸ், இந்தியாவின் பந்துவீச்சில் 20 ஓவர்களில் 95-9 என்று அடங்கிக் கொண்டது. அவர்களால் சுத்தமாக அடிக்க முடியவில்லை. பிட்ச் வேகப்பந்து வீச்சுக்கு சப்போர்ட் செய்கிறதா, ஸ்பின்னுக்கு சப்போர்ட் செய்கிறதா என்று அனைவரையும் குழப்பம் அடைய வைத்துவிட்டது. சில பந்துகள் மொக்கையாக வந்தாலும், அதை மெகா ஹிட்டர்களால் கூட பெரிய ஷாட்டாக மாற்ற முடியவில்லை.

மணிக்கு 150 கி.மீட்டர் வேகத்திற்கும் அதிகமாக பந்துவீசும் நவ்தீப் சைனி, தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை சாய்த்து ஆச்சர்யப்பட வைத்தார். அதுவும் ரன்கள் கொடுப்பதற்கு முன்பே. இதைவிட மிரட்டலான சம்பவம் என்னவெனில், அவர் வீசிய கடைசி ஓவர் மெய்டன்.

மேலும் படிக்க - அறிமுக வீரர் சைனியின் அட்டகாச ஆரம்பத்தால் அதிர்ந்தது வெஸ்ட் இண்டீஸ்

உலகளவில், டி20 போட்டியில் கடைசி ஓவரை மெய்டனாக வீசிய இரண்டாவது வீரர், முதல் இந்திய வீரர் எனும் பெருமையை சைனி பெற்றது கவனிக்கத்தக்கது.

தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியும், விக்கெட்டுகளை வரிசையாக இழந்து தடுமாற, ஒருவழியாக 17.2 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றிப் பெற்றது.

இந்நிலையில், இன்று(ஆக.4) இரண்டாவது டி20 போட்டி நடைபெறுகிறது.

சைனியின் Raw Pace வெஸ்ட் இண்டீஸை இன்றும் அச்சுறுத்தும் என எதிர்பார்க்கலாம். அவரது இண்டன்ட் இன்றும் தொடர்ந்தால், நிச்சயம் இது சாத்தியம் தான்.

அதேசமயம், டி20 கிரிக்கெட்டில் Destroyers-களாக வலம் வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஈகோ நேற்று சுக்கு நூறாக உடைப்பட்டதால், தங்களது ஆட்டத்தின் தீவிரத்தில் இன்று அதிகபட்ச Fuel ஊற்றி ஆடுவார்கள் என்பதையும் மறந்துவிட வேண்டாம்.

இரண்டாவது டி20 போட்டியை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

இன்று(ஆக.4) அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள Central Broward Regional Park Stadium-ல், இந்திய நேரப்படி இரவு எட்டு மணிக்கு இரண்டாவது டி20 போட்டி தொடங்குகிறது. 7.30 மணிக்கு டாஸ் போடப்படும். சோனி பிக்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் போட்டியை நேரடியாக காணலாம். அதே போல், ஆன்லைனில் SonyLIVல் போட்டியை லைவாக காணலாம்.

தவிர, நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் இப்போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டை நீங்கள் கண்டு களிக்கலாம்.

India Vs West Indies
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment