/tamil-ie/media/media_files/uploads/2019/09/z1866.jpg)
Ind vs wi 2nd test - India Won
India vs West Indies, 2nd Test Day 4: இந்தியா நிர்ணயித்த 468 ரன்கள் இலக்கை நோக்கி(?) ஆடி வரும் வெஸ்ட் இண்டீஸ், நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 13 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் சேர்த்துள்ளது.
கிங்ஸ்டன் சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் எடுக்க, வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்ஸில் 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 168-4 என்ற நிலையில் டிக்ளேர் செய்ய, 468 ரன்கள் இலக்கு விண்டீசுக்கு நிர்ணயிக்கப்பட்டது. சேஸிங்கை கையிலெடுத்த வெஸ்ட் இண்டீஸ், 45 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழக்க, வெற்றிக்கு இன்னும் 423 ரன்கள் தேவைப்படுகிறது, இன்னும் 2 நாட்கள் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில் கையில் 8 விக்கெட்டுகள் இருக்கின்றன. ஆடுகளம் கடைசி இரு நாட்கள் வேகப்பந்துவீச்சுக்கும், ஸ்விங் பந்துவீச்சுக்கும் நன்கு ஒத்துழைக்கும் என்பதால், இன்று நடைபெறும் 4-வது நாள் ஆட்டத்தில் முடிவு தெரிவதற்கு வாய்ப்பு உண்டு.
டேரன் பிராவோ தற்போது களத்தில் நிற்க, ஹாமில்டன், ஹெட்மயர் ஆகிய இரு முக்கிய பேட்ஸ்மேன்கள் வெளியில் இருக்கின்றனர். இவர்கள் மூவரில், இருவர் எப்படியாவது நின்று சதமடித்துவிட்டால் போட்டியை டிரா செய்ய லைட்டாக முயற்சிக்கலாம். ஆனால், 90 சதவிகிதம் இதற்கு வாய்ப்பில்லை!
இந்திய நேரப்படி இன்று இரவு ஏழு மணிக்கு நான்காவது நாள் ஆட்டம் தொடங்குகிறது. நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் லைவ் ஸ்கோர் கார்டை நீங்கள் காணலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.