/indian-express-tamil/media/media_files/2025/10/10/ind-vs-wi-2nd-test-live-score-india-vs-west-indies-test-series-2025-2025-10-10-10-35-17.jpg)
India vs West Indies 2nd Test Match 2025 Live Score: இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ், 2-வது டெஸ்ட் - நேரடி கிரிக்கெட் ஸ்கோர், அருண் ஜெட்லி மைதானம், டெல்லி.
IND vs WI LIVE Score, 2nd Test: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் போட்டி இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 1-0 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (வெள்ளிக்கிழமை - அக்டோபர் 10) முதல் டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
முதல் நாள் ஆட்டம் - டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கே.எல்.ராகுல் ஜோடி களம் புகுந்தனர். அணிக்கு வலுவான தொடக்கம் கொடுக்க நினைத்து சிறப்பாக மட்டையைச் சுழற்றி வந்த இந்த ஜோடியில், ராகுல் 38 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த சாய் சுதர்சன் ஜெய்ஸ்வாலுடன் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். இவர்களின் ஜோடியை உடைக்க வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் திணறினர். நிதானமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
தொடர்ந்து தங்களது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திக் கொண்டிருந்த இந்த ஜோடியில் ஜெய்ஸ்வால் 145 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் ஜெய்ஸ்வால் விளாசும் 7-வது சதம் இதுவாகும். கிட்டத்தட்ட 200 ரன்களுக்கு மேல் குவித்த இந்த ஜோடியில் 165 பந்துகளில் 12 பவுண்டரிகளை விரட்டிய சாய் 87 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் சுப்மன் கில் தொடக்க வீரரான ஜெய்ஸ்வாலுடன் ஜோடி அமைத்தார். இருவரும் மாறி மாறி பவுண்டரிகளை விரட்டி அடிக்க, முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 90 ஓவரில் 2 விக்கெட்டை இழந்த இந்திய அணி 318 ரன்கள் குவித்தது.
2-ம் நாள் ஆட்டம் - இந்தியா பேட்டிங்
இந்தியா தரப்பில் ஜெய்ஸ்வால் 173 ரன்னுடனும், சுப்மன் கில் 20 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2ம் நாள் ஆட்டம் நடந்த நிலையில், ஆட்டம் தொடங்கிய சிறுது நேரத்திலேயே ஜெய்ஸ்வால் 175 ரன்களுக்கு ரன் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் நிதிஸ் ரெட்டி - கில் ஜோடி இணைந்து சிறப்பாக ஆடினர். குறிப்பாக, கேப்டன் கில் நிலைத்து நின்று ஆடி 177 பந்துகளில் சதம் அடித்து மிரட்டினார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் இது அவரின் 10-வது சதமாகும்.
அவருடன் ஜோடியில் இருந்த நிதிஸ் ரெட்டி 43 ரன்களுக்கும், பின்னர் வந்த துருவ் ஜுரேல் 44 ரன்களுக்கும் அவுட் ஆகி வெளியேறினர். இதையடுத்து, இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. கேப்டன் கில் 129 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஜோமெல் வாரிக்கன் 3 விக்கெட்டையும், கேப்டன் ரோஸ்டன் சேஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்
தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜான் கேம்ப்பெல் - டேஜெனரைன் சந்தர்பால் ஜோடியில், ஜான் கேம்ப்பெல் 10 ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பிறகு களத்தில் இருந்த டேஜெனரைன் சந்தர்பால் - அலிக் அதானாஸ் ஜோடியில் டேகனரின் சந்தர்பால் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில் அவருடன் இருந்த அலிக் அதனேஸ் 41 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த கேப்டன் ரோஸ்டன் சேஸ் ரன் எதுவும் எடுக்காமல் டக்-அவுட் ஆகி வெளியேறினார். இறுதியில் 2வது நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து இந்திய அணியை விட 378 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷாய் ஹோப் 31 ரன்களுடனும், டெவின் இம்லாக் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டையும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
3-வது நாள் ஆட்டம்
இன்று தொடங்கிய 3-வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து பேட் செய்த ஹோப் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், இம்லாக் 21 ரன்கள் குவித்து வெளியேறினார். அடுத்து வந்த க்ராவிஸ் 17, கைரி பிராரி 23, வாரிகன் 1, சீல்ஸ் 13 ஆகியோர் தங்கள் பங்குக்கு ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 81.5 ஓவர்களில் 248 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பிலிப் 93 பந்தகளில் 24 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.
இந்திய அணி தரப்பில், குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளும், ஜடேஜா 3 விக்கெட்டுகளும், சிராஜ், பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதனிடையே 270 ரன்கள் பின்தங்கி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்திய அணி ஃபாலோன் கொடுத நிலையில், மீண்டும் அந்த அணி 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்ய தொடங்கியது. அடுத்தடுத்து முதல் 2 விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், 3-வது விக்கெட்டுக்கு இணைந்த கெம்பல் - ஹோப் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. 3-வது நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு, 173 ரன்கள் எடுத்துள்ளது.
இன்னும் 97 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், கெம்பல் 87 ரன்களுடனும், ஹோப் 66 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில், வாஷிங்டன் சுந்தர், சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 4-வது நாள் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.
இரு அணிகளின் விளையாடும் வீரர்களின் விபரம்
வெஸ்ட் இண்டீஸ்: ஜான் கேம்ப்பெல், டேஜெனரைன் சந்தர்பால், அலிக் அதானாஸ், ஷாய் ஹோப், ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), டெவின் இம்லாச் (விக்கெட் கீப்பர்), ஜஸ்டின் க்ரீவ்ஸ், ஜோமெல் வாரிக்கன், காரி பியர், ஆண்டர்சன் பிலிப், ஜெய்டன் சீல்ஸ்
இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், ஷுப்மன் கில் (கேப்டன்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.