scorecardresearch

வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா அபார வெற்றி… ஒயிட் வாஷ் செய்து அசத்தல்!

India vs West Indies 3rd ODI score updates in tamil: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டியையும் கைப்பற்றி இந்திய அணி ஒயிட் வாஷ் செய்துள்ளது.

ind vs wi 3rd odi live score updates in tamil
India vs West Indies 3rd ODI

India vs West Indies, 3rd ODI – Cricket scorecard Tamil News: வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் மூத்த வீரர் தவான் தலைமையிலான இந்திய ஒருநாள் அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில், முன்னதாக நடந்த 2 ஆட்டங்களில் இந்திய அணி வெற்றியை சுவைத்து, தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதிய 3வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் போர்ட் ஆப் ஸ்பெயின் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் ஜோடி களமிறங்கினர். இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்தனர். தொடர்ந்து அணிக்கான ரன்களை சேர்த்து 100 ரன்கள் பாட்னர்ஷிப்பை அமைத்த இந்த ஜோடியில், கேப்டன் தவான் 58 ரன்கள் எடுத்திருந்த போது வால்ஷ் பந்துவீச்சில் பூரனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் ஷ்ரேயஸ் ஐயர் களமிறங்கினார். இந்திய அணி 24 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. இதனால் போட்டி தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. நீண்ட நேரம் போட்டி பாதிக்கப்பட்டதால் மழை நின்ற பின் போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

பிறகு ஆட்டம் தொடர்ந்த நிலையில், இந்திய வீரர்கள் பேட்டிங்கில் அதிரடி காட்டினர். பவுண்டரிகளாக விளாசி வந்த ஷ்ரேயஸ் ஐயர் 34 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஒரு முனையில் விக்கெட்கள் சரிந்தாலும் மறுமுனையில் சுப்மன் கில் அதிரடியை கைவிடாமல் சதம் அடிக்க நெருங்கி வந்தார்.

ஆனால், இந்திய அணி 36 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால், சுப்மன் கில் 98 ரன்களுடன் களத்தில் இருந்தார். மேலும் தொடர்ந்து ஆட்ட நேரம் மழையால் பாதிக்கப்பட்டதால் இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிவு (36 ஓவர்களில் 225 ரன்கள்) அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. எனவே, டி.எல்.எஸ் விதிப்படி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற 35 ஓவர்களில் 257 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து 258 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியில், தொடக்க வீரர்களாக ஷாய் ஹோப் ,கைல் மேயெர்ஸ் களமிறங்கினர். தொடக்கத்தில் கைல் மேயெர்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும் ,பின்னர் வந்த ப்ரூக்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும் சிராஜ் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் பிராண்டன் கிங் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார் .மறுபுறம் ஷாய் ஹோப் 22 ரன்களில் அவுட் ஆனார்.

ஒரு முனையில் கேப்டன் நிக்கோலஸ் பூரன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். பிராண்டன் கிங் 42 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். கேப்டன் பூரன் 42 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் வந்த வீரர்களும் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில், அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் இந்திய அணி வெற்றி 119ரன்கள் வித்தியாசத்தில் பெற்றது. மேலும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என இந்திய அணி கைப்பற்றியது அசத்தியது. இந்திய அணி தரப்பில் சாஹல் 4 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர் மற்றும் முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

கேப்டனாக தவான் சாதனை

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்திய மூத்த வீரர் ஷிகர் தவான், ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீசை ஒயிட் வாஷ் செய்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையையும் சாதனையும் பெற்றுள்ளார்.

India in West Indies, 3 ODI Series, 2022Queen's Park Oval, Port of Spain, Trinidad   10 June 2023

West Indies 137 (26.0)

vs

India   225/3 (36.0)

Match Ended ( Day – 3rd ODI ) India beat West Indies by 119 runs (D/L method)

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Ind vs wi 3rd odi live score updates in tamil

Best of Express