IND vs WI 3rd T20 score update in tamil: 165 ரன்கள் இலக்கை 19வது ஓவரில் எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்து வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், கடந்த 29ம் தேதி நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு நடந்த 2-வது டி-20 ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது.
இதனால், தொடர் 1-1 என்ற கணக்கில் உள்ள நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி-20 ஆட்டம், பாசட்டரேவில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. இப்போட்டி இந்திய நேரப்படி 8:00 மணிக்கு பதிலாக இரவு 9.30 மணிக்கு தொடங்கும் என்று கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் வாரியம் அறிக்கை வெளியிட்டது.
அந்த அறிக்கையில், “திங்கட்கிழமை தாமதமாக தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, வீரர்கள் போதுமான ஓய்வு பெறுவதையும், செயின்ட் கிட்ஸில் மீண்டும் மீண்டும் போட்டிகளுக்கு நேரத்தை மீட்டெடுப்பதையும் உறுதிசெய்ய, மூன்றாவது தங்கப் பதக்க டி20 கோப்பை போட்டியை பின்னர் தொடங்க அணிகள் ஒப்புக்கொண்டன. புளோரிடாவில் மீண்டும் போட்டிகள் நடக்கவுள்ளன” என்று கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் தெரிவித்து இருந்தது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியினர் பேட்டிங் செய்ய களமாடினர். அந்த அணியில் அதிகபட்சமாக கெய்ல் மேயர்ஸ் 73 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 வெக்கெடுளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 164 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார் 2 வெக்கெடுளை கைப்பற்றினார்.
Innings Break!
— BCCI (@BCCI) August 2, 2022
West Indies post 164/5 on the board.
Over to #TeamIndia batters now. 👍 👍
Scorecard ▶️ https://t.co/RpAB69ptVQ #WIvIND pic.twitter.com/lfS6Mg0Ph9
தொடர்ந்து 165 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணியில், கேப்டன் ரோகித் சர்மா 11 (5) ரன்கள் எடுத்திருந்தநிலையில் தசைபிடிப்பு காரணமாக வெளியேறினார். இதனால், பின்னர் வந்த ஸ்ரேயாஸ் அய்யர் தொடக்க வீரர் சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் 24 (27) ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவருடன் ஜோடியில் இருந்த சூர்யகுமார் யாதவ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். மேலும், அவர், 76 (44) ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பின்னர் வந்த ஆல்ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்ட்யா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ரிஷப் பண்ட் (33 ரன்கள்) தீபக் ஹூடா (10 ரன்கள்) ஜோடி அணியின் வெற்றியை உறுதி செய்தது. மேலும், 165 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை 19 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து எட்டிப்பிடுத்தது.
இதனால் இந்திய 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய சூர்யகுமார் யாதவ் ஆட்டத்தின் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த அசத்தலான வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது.
7⃣6⃣ off 4⃣4⃣! 👍 👍@surya_14kumar set the stage on fire 🔥 🔥 & bagged the Player of the Match award as #TeamIndia win the third #WIvIND T20I to take 2-1 lead in the series. 👏 👏
— BCCI (@BCCI) August 2, 2022
Scorecard ▶️ https://t.co/RpAB69ptVQ pic.twitter.com/gIM7E2VbKU
வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா அணிகள் மோதும் 4வது ஆட்டம் வருகிற சனிக்கிழமை (6 ஆம் தேதி) புளோரிடாவின் லாடர்ஹில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியத்தில் நடக்கிறது.
இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்:
வெஸ்ட் இண்டீஸ் அணி
கைல் மேயர்ஸ், ஷமர் ப்ரூக்ஸ், ஜேசன் ஹோல்டர், நிக்கோலஸ் பூரன்(கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரோவ்மேன் பவல், ஷிம்ரோன் ஹெட்மியர், அகேல் ஹொசைன், ஒடியன் ஸ்மித், கீமோ பால், அல்சாரி ஜோசப், ஓபேட் மெக்காய், டெவோன் தாமஸ், பிராண்டன் ஷெப்பர் கிங், ரோமர், ரோமர் , டொமினிக் டிரேக்ஸ், ஹேடன் வால்ஷ்
இந்திய அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், இஷான் கிஷன், அவேஷ் கான், அக்சர் படேல் , குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்ஷல் படேல், தீபக் ஹூடா
India in West Indies, 5 T20I Series, 2022Warner Park, Basseterre, St Kitts 10 June 2023
West Indies 164/5 (20.0)
India 165/3 (19.0)
Match Ended ( Day – 3rd T20I ) India beat West Indies by 7 wickets
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil