‘தொட்டுவிட்டோம் சென்னையை’: முதல் ஒருநாள் போட்டிக்கு கெத்தாக வந்து சேர்ந்த ‘கோலி அன் கோ’
India vs West Indies Chennai Cricket: சென்னையில் முதல் ஒருநாள் போட்டியை முன்னிட்டு சேப்பாக்கம் மைதானத்தில் பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.
India vs West Indies Chennai Cricket: சென்னையில் முதல் ஒருநாள் போட்டியை முன்னிட்டு சேப்பாக்கம் மைதானத்தில் பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.
ind vs wi, ind vs wi Chennai, ind vs wi chennai cricket, ind vs wi chennai cricket news, சென்னை, சேப்பாக்கம், கிரிக்கெட்
IND vs WI Chennai Cricket News: இந்தியா- மேற்கு இந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டிக்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சென்னைக்கு வந்து சேர்ந்தது. ‘தொட்டுவிட்டோம் சென்னையை’ என உற்சாகமாக பதிவு செய்திருக்கிறார் விராட் கோலி.
மேற்கு இந்திய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இந்திய அணியுடன் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான டி 20 தொடரை 2-1 என இந்திய அணி வென்றது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற இருக்கிறது.
Advertisment
Advertisements
முதல் ஒருநாள் போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடக்கிறது. இதில் பங்கேற்க இந்திய வீரர்கள் விராட் கோலி தலைமையில் இன்று (12-ம் தேதி) மாலையில் சென்னை வந்து சேர்ந்தனர்.
இதையொட்டி விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோருடன் இருக்கும் படத்தை வெளியிட்டு, ‘டச் டவுன் சென்னை’ என குறிப்பிட்டிருக்கிறார். டி 20 தொடரை வென்ற முனைப்புடன் ஒருநாள் தொடரை எதிர்கொள்ள உற்சாக மன நிலையில் வீரர்கள் வந்து சேர்ந்திருக்கிறார்கள். இதேபோல மேற்கு இந்திய தீவு வீரர்களும் சென்னை வந்தனர்.
சென்னையில் முதல் ஒருநாள் போட்டியை முன்னிட்டு சேப்பாக்கம் மைதானத்தில் பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. எனவே மைதானத்தில் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கலாம்.