முதல் ஒருநாள் போட்டி: 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி

Ind Vs Wi : டி20 கிரிக்கெட் போட்டிகளில் மூன்றில் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது

By: Updated: December 15, 2019, 10:42:06 PM

Ind Vs Wi first ODI Chennai Chepauk: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய கிரிக்கெட் அணியுடனான போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ளது மேற்கிந்திய தீவுகள் அணி. ஏற்கனவே மூன்று டி20 போட்டிகள் முடிவுற்ற நிலையில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் முதல் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ளனர் இரண்டு அணியினரும். டி20 கிரிக்கெட் போட்டிகளில் மூன்றில் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த முதல் போட்டி பகல் இரவு ஆட்டமாக இன்று மதியம் 01:30 மணிக்கு துவங்குகிறது. மூன்று ஒருநாள் போட்டிகளில் இரண்டாவது போட்டி 18ம் தேதியும், மூன்றாவது போட்டி 22ம் தேதியும் நடைபெறுகிறது.

ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், விராத் கோலி, லோகேஷ் ராகுல், யோஹித் சர்மா, ரிஷப் பாண்ட் ஆகியோர் இன்றைய அணியில் இடம் பெறுகின்றனர். ஷிகர் தவானுக்கு பதிலாக மயங்க் அகர்வால் மற்றும் புவனேஷ்குமாருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் ஆகியோருக்கு அழைப்புவிடப்பட்டுள்ளது.

பொல்லார்ட் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியில் நிகோலஸ் பூரன், ஹெட்மயர், ஷாய் ஹோப், ரோஸ்டன் சேஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 20 ஓவர் போட்டியின் போது காயம் அடைந்த இவின் லீவிஸ் இன்றைய போட்டியில் பங்கேற்பாரா என்று தெரியவில்லை.

டாஸை வென்றது மேற்கிந்திய  தீவுகள் அணி

தற்போது டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது மேற்கிந்திய தீவுகள் அணி. சரியாக 01:30 மணிக்கு இந்திய பேட்டிங்கில் இந்த போட்டி துவங்க உள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார் ஷிவம் துபே

இன்றைய போட்டியில் இந்தியா சார்பில் விளையாட இருக்கும் வீரர்களில் ஷிவம் துபேவின் முதல் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இதுவாகும்

கே.எல். ராகுல் மற்றும் விராட் கோலி அவுட்

6.2 ஓவர்களில் ஷெல்டன் கோட்ரெல் பந்தில் அவுட்டானர் கே.எல்.ராகுல். அந்த பந்தினை கேட்ச் பிடித்தது சிம்ரோன் ஹெட்ம்யேர். 6 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார் ராகுல்.  6வது ஓவரின் கடைசி பந்தில் விராட் கோலி 4 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Ind vs wi first odi chennai chepauk live scorecard

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X