IND vs WI Online Streaming: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் இன்று(ஆக.14) நடைபெறுகிறது.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற ஸ்வீப் செய்த இந்தியா, தற்போது ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. கயானாவில் நடக்கவிருந்த முதல் ஒருநாள் போட்டி, மழையால் முடிவின்றி பாதியில் கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில், இந்தியா DLS விதிப்படி 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில், இன்று நடக்கும் 3வது ஒருநாள் போட்டியில் வெல்லும் பட்சத்தில், இந்தியா கோப்பையைக் கைப்பற்றும்.
IND vs WI 3rd ODI Live Streaming
இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடங்கும். போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது. சோனி பிக்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் போட்டியை நேரடியாக காணலாம். அதே போல், ஆன்லைனில் SonyLIVல் போட்டியை லைவாக காணலாம்.
தவிர, நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் இப்போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டை நீங்கள் கண்டு களிக்கலாம்.