India vs Zimbabwe, 1st ODI Cricket Score Streaming Online Tamil News: ஜிம்பாப்வே மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு மோதும் முதலாவது ஒருநாள் போட்டி, ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் புதன்கிழமை பகல் இரவு ஆட்டமாகத் தொடங்கியது..
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களும், மிடில் ஆடரில் களமாடிய பேட்ஸ்மேன்களும் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அந்த அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் ரெஜிஸ் சகப்வா 35 ரன்களும், ரிச்சர்டு என்கிராவா 34 ரன்களும் எடுத்தனர். இறுதியில் ஜிம்பாப்வே அணி 40.3 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
ஜிம்பாப்வே ஒருநாள் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல்:
கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அக்சர் படேல், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் , தீபக் சாஹர்.
ஜிம்பாப்வே அணி:
ரியான் பர்ல், ரெஜிஸ் சகாப்வா (கேப்டன்), தனகா சிவாங்கா, பிராட்லி எவன்ஸ், லூக் ஜாங்வே, இன்னசென்ட் கையா, டகுட்ஸ்வானாஷே கைடானோ, கிளைவ் மடண்டே, வெஸ்லி மாதேவெரே, தடிவானாஷே என்சரா, டோனிசரா நகர்வானி, ஜான்னிசரா நகர்வானி, சிக்கந்தர் ராசா, மில்டன் ஷும்பா, டொனால்ட் டிரிபானோ.
இரு அணி சார்பில் களமிறங்கும் வீரர்கள் பட்டியல்:
இந்தியா
ஷிகர் தவான், ஷுப்மான் கில், இஷான் கிஷன், கே.எல். ராகுல் (கேப்டன்), தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.
இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிமையான இலக்குடன் இந்திய அணி விளையாடியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், ஷிகர் தவனும், சுப்மன் கில் இருவரும் தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தினர். இவ்விரு பேட்ஸ்மேன்களையும் அவுட்டாக்க ஜிப்பாப்வே அணி எவ்வளவும் முயற்சி செய்து பலனளிக்க வில்லை.
இதைத் தொடர்ந்து, இந்திய அணி ஒரு விக்கெட்கூட இழக்காமல் 30.5 ஓவர்களில் இலக்கை கடந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷிகர் தவன் 81 ரன்களுடனும், சுப்மன் கில் 82 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
ஜிம்பாம்ப்வேக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil