scorecardresearch

IND vs ZIM 2nd ODI: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்தியா!

India vs Zimbabwe Live Streaming online score 2nd ODI Tamil News: ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒரு நாள் தொடரை எளிதில் கைப்பற்றியுள்ளது இந்திய அணி.

IND vs ZIM 2nd ODI Live SCORE updates in tamil
India vs Zimbabwe 2nd ODI Live Telecast at 12:45PM: Team India bagged a phenomenal win against Zimbabwe in the first match of the ODI series. Credit :(Twitter)

India vs Zimbabwe (IND vs ZIM), 2nd ODI Match Live Score: ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒரு நாள் தொடரை எளிதில் கைப்பற்றியுள்ளது இந்திய அணி.

ஜிம்பாப்வே மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில், கடந்த 18ம் தேதி நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால், 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1- 0 என்கிற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று பிற்பகல் 12:45 மணிக்கு ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

இந்த நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி ஜிம்பாப்வே அணி பேட்டிங்

செய்ய களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கைடானோ டகுட்ஸ்வானாஷே 7 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் சாம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் இன்னசென்ட் கையா 16 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

தொடர்ந்து சீரான இடைவெளியில் ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்களை பறிகொடுத்தனர். கேப்டன் ரெஜிஸ் சகாப்வா மற்றும் வெஸ்லி மாதேவெரே தலா 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தனர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் சீன் வில்லியம்ஸ் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தார்.

அவர் 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தீபக் ஹூடா பந்துவீச்சில் ஷிகர் தவானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் ஒருநாள் போட்டியை போலவே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஜிம்பாப்வே வீரர்கள் திணறினர். பின்னர் வந்த வீரர்களில் ரியான் 39 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில், 38.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த ஜிம்பாப்வே அணி 161 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் சர்த்துல் தாகூர் 3 விக்கெட்களையும், சிராஜ், கிருஷ்ணா, அக்சர், குல்தீப், ஹூடா தலா 1 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

தற்போது 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் களமிறங்கினர். கேப்டன் கே.எல்.ராகுல் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்தார் ஷுப்மன் கில். இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரினை உயர்த்தினர். ஷிகர் தவான் மற்றும் கில் தலா 33 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். இஷான் கிஷன் 6 ரன்களில் விக்கெட்டினை பறிகொடுத்தார்.

பின்னர் தீபக் ஹூடா மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. தீபக் ஹூடா 25 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். சஞ்சு சாம்சன் 43 ரன்களுடனும், அக்ஸர் படேல் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றியுள்ளது.

இந்தியா பிளேயிங் லெவன்:

ஷிகர் தவான், ஷுப்மான் கில், இஷான் கிஷன், கேஎல் ராகுல்(கேப்டன்), தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.

ஜிம்பாப்வே பிளேயிங் லெவன்:

இன்னசென்ட் கையா, டகுட்ஸ்வானாஷே கைடானோ, வெஸ்லி மாதேவெரே, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, ரெஜிஸ் சகப்வா(கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரியான் பர்ல், லூக் ஜாங்வே, பிராட் எவன்ஸ், விக்டர் நியுச்சி, தனகா சிவாங்கா

இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்:

இந்திய அணி

கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அக்சர் படேல், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் , தீபக் சாஹர்.

ஜிம்பாப்வே அணி:

ரியான் பர்ல், ரெஜிஸ் சகாப்வா (கேப்டன்), தனகா சிவாங்கா, பிராட்லி எவன்ஸ், லூக் ஜாங்வே, இன்னசென்ட் கையா, டகுட்ஸ்வானாஷே கைடானோ, கிளைவ் மடண்டே, வெஸ்லி மாதேவெரே, தடிவானாஷே என்சரா, டோனிசரா நகர்வானி, ஜான்னிசரா நகர்வானி, சிக்கந்தர் ராசா, மில்டன் ஷும்பா, டொனால்ட் டிரிபானோ.

இரு அணி உத்தேச வீரர்கள் பட்டியல்:

இந்திய அணி

சுப்மான் கில், ஷிகர் தவான், இஷான் கிஷன், கே.எல். ராகுல் (கேப்டன்), தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.

ஜிம்பாப்வே அணி

இன்னசென்ட் கையா, தடிவானாஷே மருமணி/தகுத்ஸ்வனாஷே கைடானோ, வெஸ்லி மாதேவெரே, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, ரெஜிஸ் சகப்வா, ரியான் பர்ல், லூக் ஜாங்வே, பிராட் எவன்ஸ், ரிச்சர்ட் ங்கராவா, விக்டர் நியாச்சி.

India in Zimbabwe, 3 ODI Series, 2022Harare Sports Club, Harare   11 June 2023

Zimbabwe 161 (38.1)

vs

India   167/5 (25.4)

Match Ended ( Day – 2nd ODI ) India beat Zimbabwe by 5 wickets

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Ind vs zim 2nd odi live score updates in tamil