சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஜூலை 6-ம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில்ல் 13 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது.
ஆங்கிலத்தில் இந்தியா - ஜிம்பாப்வே 2வது டி20 போட்டி லைவ் ஸ்கோர்: India vs Zimbabwe 2nd T20I 2024 Live Score:
இந்நிலையில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி ஹராரேவில் ஜூலை 7-ம் தேதி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா களம் இறங்கினர். சுப்மன் கில் 2 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த, அபிஷேக் சர்மாவுடன் கெய்க்வாட் ஜோடி சேர்ந்தார். இதில் கெய்க்வாட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுபுறம் அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். ஜிம்பாப்வேயின் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய அபிஷேக் சர்மா சதம் அடித்து அசத்தினார். அபிஷேக் சர்மா 47 பந்தில் 100 ரன்களில் அவுட் ஆனார்.
இதையடுத்து ரிங்கு சிங் களம் இறங்கினார். மறுபுறம் நிதான ஆட்டத்தை வெளிபடுத்திய கெய்க்வாட் 38 பந்தில் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த பின் கெய்க்வாட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரிங்கு சிங்கும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி விளையாடி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“