ICC Women’s T20 World Cup, AUS-W vs IND-W 1st Semi-Final, 2023 Tamil News: 8-வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தென் ஆப்பிரிக்க மண்ணில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தற்போது இந்தத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், குரூப் 1ல் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளும், குரூப் 2ல் இருந்து இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இதில் நாளை நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் மோத உள்ளன.
இந்த அரையிறுதியானது மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (எம்சிஜி) கடந்த 2020 ஆம் ஆண்டில் நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நினைவூட்டுகிறது. மிகவும் பரபரப்பாக நடந்த அந்த ஆட்டத்தில் இந்தியாவை 85 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. இதன்பிறகு, 2022 ஆம் ஆண்டில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு பெண்கள் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இவ்வ்விரு அணிகள் மோதின. அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை, நடப்பு டி20 உலக கோப்பையில் நடந்த அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றியை ருசித்த கையுடன் களமாடுகிறது. அதே நேரத்தில் குரூப் 2ல் முதல் இடத்தில் இருக்கும் இந்தியா இங்கிலாந்திடம் தோல்வியடைந்துள்ளது. டிசம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும், இந்த மாத தொடக்கத்தில் முடிவடைந்த முத்தரப்புத் தொடரிலும் இந்திய அணியினர் ஸ்ட்ரைக் ரொட்டேஷன் செய்ய போராடியுள்ளனர். இது இங்கிலாந்து மற்றும் அயர்லாந்துக்கு எதிரான குரூப் 2 ஆட்டங்களில் முறையே 51 மற்றும் 41 டாட் பால்களை இந்தியா சாப்பிட்டதால் சிக்கலில் இருந்தது. எனினும், இந்திய அணியினர் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த நம்பிக்கையுடன் ஆடுவார்கள் என்று நம்பலாம்.
இந்தியா vs ஆஸ்திரேலியா லைவ் ஸ்ட்ரீமிங்:
இந்தியா பெண்கள் vs ஆஸ்திரேலியா பெண்கள் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 அரையிறுதி எப்போது நடைபெறும்?
இந்தியா பெண்கள் மற்றும் ஆஸ்திரேலியா பெண்கள் அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டி நாளை (பிப்ரவரி 23 வியாழன்) நடைபெறும்.
இந்தியா பெண்கள் vs ஆஸ்திரேலியா பெண்கள் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 அரையிறுதி எந்த நேரத்தில் தொடங்கும்?
இந்தியா பெண்கள் மற்றும் ஆஸ்திரேலியா பெண்கள் அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டி, இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு தொடங்குகிறது. டாஸ் மாலை 6 மணிக்கு போடப்படும்.
இந்தியா பெண்கள் vs ஆஸ்திரேலியா பெண்கள் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 அரையிறுதியை இந்தியாவில் எந்த சேனல்கள் ஒளிபரப்பும்?
இந்தியா பெண்கள் மற்றும் ஆஸ்திரேலியா பெண்கள் அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டி இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரலையில் பார்க்கலாம்.
இந்தியா பெண்கள் vs ஆஸ்திரேலியா பெண்கள் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 அரையிறுதிப் போட்டியை லைவ் ஸ்ட்ரீமிங் பார்ப்பது எப்படி?
இந்தியா பெண்கள் மற்றும் ஆஸ்திரேலியா பெண்கள் அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டியை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணையதளம் மற்றும் செயலியில் நேரலை ஸ்ட்ரீமிங்கிற்குக் கிடைக்கும்.
ஐசிசி மகளிர் டி-20 உலகக் கோப்பை 2023 அரையிறுதிப் போட்டி, இந்தியா பெண்கள் vs ஆஸ்திரேலியா பெண்கள் உத்தேச லெவன்:
இந்தியா:
ஸ்மிருதி மந்தனா, ஷெபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தேவிகா வைத்யா, தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், ஷிகா பாண்டே, ராஜேஸ்வரி கயக்வாட், ரேணுகா தாக்கூர் சிங்
ஆஸ்திரேலியா:
பெத் மூனி (விக்கெட் கீப்பர்), எலிஸ் பெர்ரி, மெக் லானிங் (கேப்டன்), ஆஷ்லீ கார்ட்னர், தஹ்லியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ், ஜார்ஜியா வேர்ஹாம், அனாபெல் சதர்லேண்ட், அலனா கிங், மேகன் ஷட், டார்சி பிரவுன்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil