Australia vs India Women T20 World Cup Semi Final Tamil News: 8-வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தென் ஆப்பிரிக்க மண்ணில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்தத் தொடரில், இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியானது இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு தொடங்குகிறது. டாஸ் மாலை 6 மணிக்கு போடப்படும்.
நடப்பு தொடருக்கான லீக் சுற்றில் ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியை சந்திக்காத அணியாக ஆஸ்திரேலியா வலம் வருகிறது. மேலும் அதே நம்பிக்கையுடன் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேற ஆர்வமாக உள்ளது. மறுபுறம், லீக் சுற்றில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மட்டும் தோல்வியை சந்தித்த இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த நம்பிக்கையுடன் களம் இறங்க உள்ளது.
இந்திய அணியைப் பொறுத்தவரை, பேட்டிங்கில் மந்தனா ஃபார்முக்கு திரும்பியுள்ளது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. பந்து வீச்சில் ரேனுகா நம்பிக்கை அளிக்கிறார். இதுவரை ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்லாத இந்தியா, 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை சாய்த்து முன்னேறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதனால், இவ்விரு அணிகள் மோதும் நாளைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தற்போது இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், ஆலிசா ஹீலி, பீத் மூனி ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர். இந்த ஜோடி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7.3 ஓவர்களில் 52 ரன்கள் சேர்த்த நிலையில், ஆலிசா ஹீலி 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய மெக் லானிங், பீத் மூனியுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த வீராங்கனைகளின் பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்ட பீத் மூனி அரைசதம் கடந்த 54 ரன்களில் வெளியேறினார். தற்போதுவரை 12 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கார்டுனர் அதிரடியாக விளையாடி 18 பந்துகளில், 5 பவுண்டரியுடன் 31 ரன்களும், கிரேஷ் ஹாரிஸ் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்துள்ளது. கடைசி வரை களத்தில் இருந்த கேப்டன் மேக் லானிங் 34 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 49 ரன்களுடனும், எல்லின் பெர்ரி 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்திய அணி தரப்பில், ஷிகா பாண்டே 2 விக்கெட்டுகளும், தீப்தி ஷர்மா, ராதா யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 173 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், தொடகக் வீராங்கனை, ஷபாலி வர்மா 9 ரன்களிலும், ஸ்மிரிதி மந்தனா 2 ரன்களிலும், யாஷிகா பாட்யா 4 ரன்களிலும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் இந்திய அணி 28 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
இதனையடுத்து 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜெமிமா – கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். சற்று முன்வரை இந்திய அணி 9 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடி அரைசதத்தை நெருங்கிய ஜெமிமா 24 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 43 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம் கடந்த நிலையில், 52 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 6 பவுண்டரியும் ஒரு சிக்சரும் அடங்கும்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ரிச்சா கோஷ் 14 ரன்களிலும், ரானா 11 ரன்களிலும், ராதா யாதவ் ரன் கணக்கை தொடங்காமலும் வெளியேறினர். கடைசி 2 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவை என்ற நிலையில், இந்திய அணி 14 ரன்கள் மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இதனால் மகளிர் உலககோப்பை தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணியில் தீப்தி சர்மா 17 பந்துகளில் 20 ரன்களுடன் களத்தில் இருந்தார்,
ஐசிசி மகளிர் டி-20 உலகக் கோப்பை 2023 அரையிறுதிப் போட்டி, இந்தியா பெண்கள் vs ஆஸ்திரேலியா பெண்கள்
இரு அணிகளின் உத்தேச லெவன்:
இந்தியா:
ஸ்மிருதி மந்தனா, ஷெபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தேவிகா வைத்யா, தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், ஷிகா பாண்டே, ராஜேஸ்வரி கயக்வாட், ரேணுகா தாக்கூர் சிங்
ஆஸ்திரேலியா:
பெத் மூனி (விக்கெட் கீப்பர்), எலிஸ் பெர்ரி, மெக் லானிங் (கேப்டன்), ஆஷ்லீ கார்ட்னர், தஹ்லியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ், ஜார்ஜியா வேர்ஹாம், அனாபெல் சதர்லேண்ட், அலனா கிங், மேகன் ஷட், டார்சி பிரவுன்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil