/indian-express-tamil/media/media_files/2025/11/01/ind-vs-aus-womens-world-cup-world-cup-final-live-score-updates-india-vs-australia-icc-womens-world-cup-live-scorecard-online-streaming-in-tamil-2025-11-01-20-34-20.jpg)
IND W vs SA W Womens World Cup Final Live Score updates: ஐ.சி.சி மகளிர் உலகக் கோப்பை 2025: இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, இறுதிப் போட்டி
India vs South Africa ICC Womens World Cup Score updates: இந்தியாவில் நடைபெற்று வரும் 13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தத் தொடருக்கான அரையிறுதி ஆட்டங்களின் முடிவில் இதுவரை உலகக்கோப்பையை வெல்லாத இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறின.
இந்நிலையில், இறுதிப் போட்டியில், தங்களது முதலாவது உலகக் கோப்பைக்காக இந்தியா-தென் ஆப்ரிக்க அணிகள் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்தியது. அதில், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் கோப்பை முத்தமிட்டு சாதனை படைத்தது.
இதனிடையே நவிமும்பையில் மழைபெய்ததன் காரணமாக இந்த போட்டிகான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது மழை நின்றதை அடுத்து 3 மணிக்கு தொடங்க வேண்டிய இந்த ஆட்டம் ஏறக்குறைய 1.5 மணிநேரம் காலதாமதமாக தொடங்கப்பட்டது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வால்வார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 298 ரன்கள் எடுத்தது.
பின்னர் இறுதிப்போட்டியில் இதுவரை யாரும் விரட்டிப்பிடிக்காத ஒரு இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்க அணி ஆடியது. தஸ்மின் பிரிட்ஸ் (23 ரன்), அன்னெகே பாஷ் (0), சுனே லுஸ் (25 ரன்), மரிஜானே காப் (4 ரன்), விக்கெட் கீப்பர் சினலோ ஜாப்தா (16 ரன்) ஆகியோர் குறிப்பிட்ட இடைவெளியில் நடையை கட்டினர். ஆனால் தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான லாரா வோல்வார்ட் நங்கூரம் பாய்ச்சியது போல் நிலை கொண்டு மிரட்டினார். இந்தியாவின் சுழல் ஜாலத்தை திறம்பட சமாளித்த அவர் சதத்தை நோக்கி துரிதமாக பயணித்தார். இதனால் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது மதில் மீது பூனையாக தெரிந்தது. 6-வது விக்கெட்டுக்கு அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த அன்னெரி டெர்க்சென்னை 35 ரன்னில் தீப்தி ஷர்மா வீழ்த்தினார். ஆனால் இந்திய பவுலர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த லாரா வோல்வார்ட் தனது 11-வது சதத்தை எட்டினார். அவர் அரைஇறுதியிலும் சதம் அடித்தது நினைவிருக்கலாம்.
சதம் அடித்த கையோடு வோல்வார்ட் 101 ரன்களில் (98 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) சிக்கினார். அவர் தூக்கியடித்த பந்தை அமன்ஜோத் கவுர் தட்டுத்தடுமாறி பிடித்தார். அவர் வீழ்ந்ததும் ஒட்டுமொத்த ஸ்டேடியமும் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பால் அதிர்ந்தது. அப்போதே உலகக் கோப்பை கைக்கு வந்தது போல் கொண்டாடினர். எஞ்சிய விக்கெட்டையும் நமது பவுலர்கள் கபளீகரம் செய்து தென்ஆப்பிரிக்காவை 45.3 ஓவர்களில் 246 ரன்களில் சுருட்டினர். இதன் மூலம் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக உலகக் கோப்பையை தட்டித்தூக்கியது. 52 ஆண்டு உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய பெண்கள் அணி உலகக் கோப்பையை உச்சிமுகர்வது இதுவே முதல் முறையாகும்
இரு அணிகளின் வீராங்கனைகள் பட்டியல்:
இந்திய அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், ரேணுகா சிங் தாக்கூர், தீப்தி சர்மா, சினே ராணா, கிராந்தி கவுட், ஸ்ரீ சரணி, ராதா யாதவ், அமன்ஜோத் கவுர், அருந்ததி ரெட்டி, உமா செட்ரி, ஷஃபாலி வர்மா.
தென் ஆப்பிரிக்கா அணி: லாரா வோல்வார்ட் (கேட்ச்), அயபோங்கா காக்கா, க்ளோ ட்ரையோன், நாடின் டி க்ளெர்க், மரிசான் கேப், டாஸ்மின் பிரிட்ஸ், சினாலோ ஜஃப்டா, நோன்குலுலெகோ மலாபா, அன்னேரி டெர்க்சன், அன்னேக் போஷ், மசபடா கிளாஸ், சுனே லூஸ், கரபோ மெசோ, துமி செகுகுனே, நோண்டுமிசோ ஷங்கசே
- Nov 03, 2025 07:05 IST
இந்திய மகளிர் அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். திறமை, அமைதி மற்றும் குழுப்பணியின் அற்புதமான வெளிப்பாட்டிற்காக இந்திய மகளிர் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்; அடுத்த தலைமுறையினரை ஊக்குவிக்கும் வரலாற்று வெற்றி என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- Nov 03, 2025 00:27 IST
ஐ.சி.சி மகளிர் உலகக் கோப்பை: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி சிறந்த பந்துவீச்சாளர் பரிசு பெற்றார் தீப்தி சர்மா
ஐ.சி.சி மகளிர் உலகக் கோப்பையில், 9 போட்டிகளில் 22 விக்கெட்டுகள் வீழ்த்திய தீப்தி சர்மா அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி சிறந்த பந்துவீச்சாளர் பரிசு பெற்றார்.
- Nov 03, 2025 00:12 IST
5 விக்கெட்டுகள் வீழ்த்தினார் தீப்தி சர்மா
இந்திய அணியில் சிறப்பாக பேட்டிங் செய்து 58 ரன்கள் எடுத்த தீப்தி சர்மா, பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சதமடித்த வால்வார்ட் விக்கெட்டையும் வீழ்த்தினார்.
- Nov 03, 2025 00:11 IST
ஐ.சி.சி மகளிர் உலகக் கோப்பையை வென்றது இந்திய அணி! ரசிகர்கள் கொண்டாட்டம்
ஐ.சி.சி மகளிர் உலகக் கோப்பையை வென்றது இந்திய அணி! ரசிகர்கள் கொண்டாட்டம்
இந்திய அணி ஐ.சி.சி மகளிர் உலகக் கோப்பையை வென்றதால், மைதானத்தில் இந்திய அணியின் வீராங்கனைகள், ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
India beat South Africa in a tense finale to become the #𝐂𝐖𝐂𝟐𝟓 𝐖𝐢𝐧𝐧𝐞𝐫𝐬 🏆🇮🇳#INDvSA 📝: https://t.co/6Vok7HLZskpic.twitter.com/62p6cUwnJo
— ICC (@ICC) November 2, 2025 - Nov 03, 2025 00:07 IST
தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி மகளிர் உலகக் கோப்பையை வென்றது இந்திய அணி!
தென் ஆப்பிரிக்கா அணி 45.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்திருந்தபோது, நாடின் டிகிளெர்க், தீப்தி சர்மா பந்தில் ஹர்மன்பிரீத் கவுர் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி ஐ.சி.சி மகள்ர் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது.
- Nov 03, 2025 00:00 IST
அடித்து ஆடிய டிகிளெர்க் அவுட்
தென் ஆப்பிரிக்கா அணி 44.6 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்திருந்தபோது, அடித்து ஆடி வந்த டிகிளெர்க் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுடதது, மிளபா பேட்டிங் செய்ய வந்தார்.
- Nov 02, 2025 23:49 IST
4 விக்கெட்டுகள் வீழ்த்தினார் தீப்தி சர்மா
இந்திய அணியில் சிறப்பாக பேட்டிங் செய்து 58 ரன்கள் எடுத்த தீப்தி சர்மா, பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
- Nov 02, 2025 23:46 IST
டிரைலான் அவுட்
தென் ஆப்பிரிக்கா அணி 41.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்திருந்தபோது, ட்ரைலான் - டி கிளெர்க் களத்தில் இருந்தனர். இதில் டிரைலான் 9 (8) ரன்களில் தீப்தி சர்மா பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். அடுத்து, அயபோங்கா காகா வந்தார்.
- Nov 02, 2025 23:42 IST
வால்வார்ட் அவுட்; இந்திய அணி உற்சாகம்
தென் ஆப்பிரிக்கா அணி 41.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்திருந்தபோது, தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய வால்வார்ட் சதம் அடித்த நிலையில், தீப்தி சர்மா பந்தில் அமன்ஜோத் கவுர் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனால், இந்திய அணி வீராங்கனைகள் உற்சாகத்தில் உள்ளனர்.
- Nov 02, 2025 23:35 IST
சதம் விளாசினார் வால்வார்ட்
தென் ஆப்பிரிக்கா அணி 39.6 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்திருந்தபோது, தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய வால்வார்ட் 96 பந்துகளில் 100 ரன்கள் விளாசினார். தொடர்ந்து அவர் களத்தில் உள்ளார்.
- Nov 02, 2025 23:34 IST
டெர்க்சென் அவுட்
தென் ஆப்பிரிக்கா அணி 39.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்திருந்தபோது, டெர்க்சென் 37 பந்துகளில் 35 ரன்க எடுத்து தீப்தி சர்மா பந்தில் போல்ட் அவுட் ஆனார்.
- Nov 02, 2025 23:30 IST
200 ரன்களைக் கடந்தது தென் ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்கா அணி 38 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய வால்வார்ட் 94 பந்துகளில் 98 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவருக்கு துணையாக டெர்க்சென் அதிரடியாக விளையாடி வருகிறார்.
- Nov 02, 2025 23:19 IST
நிலைத்து நின்று ஆடும் வால்வார்ட்... விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறும் இந்தியா!
தென் ஆப்பிரிக்கா அணி 35 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய வால்வார்ட் 86 பந்துகளில் 85 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவருக்கு துணையாக டெர்க்சென் அதிரடியாக விளையாடி வருகிறார்.
- Nov 02, 2025 22:55 IST
ஜாஃப்டா அவுட்
தென் ஆப்பிரிக்கா அணி 29.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்திருந்தபோது, ஷினாலோ ஜாஃப்டா 29 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து, தீப்தி சர்மா பந்தில், ராதா யாதவ்விடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து டெர்க்சென் பேட்டிங் செய்ய வந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி வருகிறார். வால்வார்ட் 75 (72) ரன்களுடன் களத்தில் உள்ளார்.
- Nov 02, 2025 22:31 IST
காப் அவுட்
தென் ஆப்பிரிக்கா அணி 22.1ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்திருந்தபோது, காப் 4 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து, ஷஃபாலி வெர்மா பந்தில் ரிச்சா கோஷிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து ஜாஃப்டா பேட்டிங் செய்ய வந்தார்.
- Nov 02, 2025 22:27 IST
சூன் லஸ் அவுட்
தென் ஆப்பிரிக்கா அணி 20.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்திருந்தபோது, சூன் லஸ் 31 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து, ஷஃபாலி வெர்மா பந்தில் காட் அண்ட் போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்து காப் பேட்டிங் செய்ய வந்தார். வால்வார்ட் 65 ரன்களுடனும் காப் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
- Nov 02, 2025 22:11 IST
அரைசதம் விளாசினார் வால்வார்ட்
தென் ஆப்பிரிக்கா அணி 16.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்திருந்தபோது, தொடக்க ஆட்டக்காரர் வால்வார்ட் பவுண்டரி அடித்து 45 பந்துகளில் 51 ரன்கள் விளாசி அரைசதத்தைப் பதிவு செய்தார். வால்வார்ட் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
- Nov 02, 2025 22:04 IST
வந்த வேகத்தில் வெளியேறிய போச்
தென் ஆப்பிரிக்கா அணி 11.5 ஓவர்களில் 62 ரன்கள் எடுத்திருந்தபோது, அன்னெகே போச் 6 பந்துகளை சந்தித்து ஒரு ரன்கூட எடுக்காத நிலையில், அவரை நல்லப்புரெட்டி சரணி எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆக்கி வெளியேற்றினார். அடுத்து சூன் லஸ் பேட்டிங் செய்ய வந்தார்.
- Nov 02, 2025 21:42 IST
முதல் விக்கெட்டை இழந்தது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்கா அணி 9.3 ஓவர்களில் 51 ரன்கள் எடுத்திருந்தபோது, டாஸ்மன் பிரிட்ஸ் 35 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவரை அமன்ஜோத் கவுர் ரன் அவுட் செய்து வெளியேற்றினார். அடுத்து, அன்னெகே போச் பேட்டிங் செய்ய வந்தார்.
- Nov 02, 2025 21:17 IST
299 ரன்கள் இலக்கு... தென் ஆப்பிரிக்கா நிதான ஆட்டம்!
299 ரன்கள் எடுத்தால் என்ற இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வால்வார்ட் மற்றும் பிரிட்ஸ் பேட்டிங் செய்ய களமிறங்கினர். இந்திய வீராங்கணைகளின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நிதானமாக ஆடி வருகின்றனர்.
தென் ஆப்பிரிக்க அணி 5 ஓவர்களில் 18 ரன்கள் எடுத்துள்ளது. வால்வார்ட் 8 (13) ரன்களுடனும் பிரிட்ஸ் 6 (15) ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
- Nov 02, 2025 20:26 IST
ஷஃபாலி வெர்மா, தீப்தி சர்மா அரை சதம்... 299 இலக்கு நிர்ணயித்தது இந்தியா!
இந்திய அணி இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் குவித்தது. தீப்தி சர்மா கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். இதன் மூலம் இந்திய அணி 299 ரன்கள் என வலுவான இலக்கை நிர்ணயித்துள்ளது.
- Nov 02, 2025 20:21 IST
ரிச்சா கோஷ் அவுட்
இந்திய அணி இந்திய அணி 48.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 292 ரன்கள் எடுத்திருந்தபோது, அதிரடியாக விளையாடிய ரிச்சா கோஷ் 34 (24) எடுத்திருந்தபோது, அயபோங்கா காகா பந்தில் அன்னெரி டெர்க்சென் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
- Nov 02, 2025 20:13 IST
தீப்தி சர்மா அரை சதம்
இந்திய அணி இந்திய அணி 47.6 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்திருந்தபோது, நிலைத்து நின்று விளையாடி வந்த தீப்தி சர்மா 53 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். மறுபுறம் ரிச்சா கோஷ் 19 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடி வருகிறார்.
- Nov 02, 2025 19:56 IST
அதிரடி காட்டிய அமன்ஜோத் கவுர் அவுட்
இந்திய அணி இந்திய அணி 43.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்திருந்தபோது, அதிரடியாக விளையாடிய அமன்ஜோத் கவுர் 14 பந்துகளில் 12 ரன்கள் எடுத்திருந்தபோத, நாடின் டி கிளெர்க் பந்தில் காட் அண்ட் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ரிச்சா கோஷ், தீப்தி சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார்.
- Nov 02, 2025 19:46 IST
தீப்தி சர்மா கேட்ச்சை தவறவிட்ட நான்குலுலேகோ மிளபா
அதிரடியாக விளையாடிவரும் தீப்தி சர்மா தூக்கி அடித்த பந்தை தென் ஆப்பிரிக்க வீராங்கணை நான்குலுலேகோ மிளபா பாய்ந்து பிடிக்க முயன்றபோது தவறவிட்டார். தீப்தி சர்மா 40 ரன்களுடனும் அமன்ஜோத் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
- Nov 02, 2025 19:38 IST
ஹர்மன் பிரீத் கவுர் போல்ட் அவுட்
இந்திய அணி 39 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்திருந்தபோது, நிதானமாக விளையாடி வந்த ஹர்மன்பிரீத் கவுர் 29 பந்துகளில் 20 ரன்கள் எடுத்திருந்தபோது, நான்குலுலேகோ மிளபா பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த அமன்ஜோத் கவுர், தீப்தி சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார்.
- Nov 02, 2025 19:34 IST
அதிரடி காட்டும் தீப்தி சர்மா
இந்திய அணி 38 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்துள்ளது. தீப்தி சர்மா 31 (30) ரன்களுடனனும் ஹர்மன்பிரீத் கவுர் 19 (26) ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முன்னதாக ஸ்மிரிதி மந்தனா 45 ரன்கள், ஷஃபாலி வர்மா 87 ரன்கள், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 24 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள்.
- Nov 02, 2025 18:51 IST
அதிரடியாக விளையாடிய ஷஃபாலி வர்மா ஆட்டமிழந்தார்
இந்தியா: 166/2 (27.5 ஓவர்கள்) இந்திய அணியின் அதிரடி வீராங்கனை ஷஃபாலி வர்மாவின் அபாரமான இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அவர் 87 ரன்களில் ஆட்டமிழந்தார். தென்னாப்பிரிக்க வீராங்கனை காகா (Khaka) வீசிய 27.5 ஓவரில், ஷஃபாலி வர்மா 'மிட்-ஆஃப்' திசைக்கு மேலாக பந்தை உயர்த்தி அடிக்க முயற்சித்தார். ஆனால், பந்து நேராக அங்கு நின்றிருந்த ஃபீல்டர் சுனே லூஸின் (Luus) கைகளுக்குள் சென்றது. இதன் மூலம் ஒரு அற்புதமான இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. ஷஃபாலி வர்மா c லூஸ் b காகா - 87 (78 பந்துகள்)
- Nov 02, 2025 18:40 IST
ரன்கள் குவித்து அதிரடி காட்டும் ஷஃபாலி வர்மா!
ஆட்டத்தின் 25-வது ஓவரை சுனே லூஸ் (Sune Luus) வீசினார். அந்த ஓவரின் 4வது பந்தை ஷஃபாலி வர்மா ரன் ஏதும் எடுக்காமல் (dot ball) எதிர்கொண்டார். ஆனால், 5வது பந்தை சுனே லூஸ் சற்று மிதக்கவிட்டு (nicely tossed up) வீசினார். உடனடியாக சுதாரித்துக்கொண்ட ஷஃபாலி வர்மா, இறங்கி வந்து (dancing down the track) பந்துவீச்சாளரின் தலைக்கு மேல் நேராக ஒரு அபார சிக்ஸரை (SIX) விளாசினார். ஓவரின் கடைசிப் பந்தில் 1 ரன் எடுத்து, அடுத்த ஓவரின் 'ஸ்ட்ரைக்கை'யும் அவர் தக்க வைத்துக் கொண்டார். இந்த சிக்ஸரின் மூலம், ஷஃபாலி வர்மா ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் (ODI) தனது அதிகபட்ச ஸ்கோரை (Highest ODI Score) கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
ஸ்கோர் விவரம் (25 ஓவர் முடிவில்): இந்தியா: 151/1
ஷஃபாலி வர்மா: 78* (68 பந்துகளில்)
ஜெமிமா ரோட்ரிக்ஸ்: 18* (24 பந்துகளில்)
- Nov 02, 2025 18:26 IST
கேட்ச் வாய்ப்பை தவறவிட்ட தென்னாப்ரிக்காவின் போஷ்
இந்திய வீராங்கனை ஷஃபாலி வர்மா 56 ரன்கள் எடுத்திருந்தபோது கொடுத்த சுலபமான கேட்ச் வாய்ப்பை தென்னாப்பிரிக்க ஃபீல்டர் அனெக் போஷ் (Anneke Bosch) தவறவிட்டார். சுனே லூஸ் (Sune Luus) வீசிய பந்தை ஷஃபாலி வர்மா (55 பந்துகளில் 56 ரன்கள்) தூக்கியடித்தார். பந்து 'டீப் ஸ்கொயர் லெக்' திசையில் நின்றிருந்த அனெக் போஷை நோக்கிச் சென்றது. இது பிடிப்பதற்கு மிகவும் எளிதான (routine catch) ஒரு கேட்ச் ஆகும், ஆனால் அவர் பந்தைக் கையில் பிடித்து நழுவ விட்டார். இதை சற்றும் எதிர்பாராத பந்துவீச்சாளர் சுனே லூஸ், ஏமாற்றத்திலும் அதிர்ச்சியிலும் தனது 2 கைகளையும் தலைக்கு மேல் வைத்துக்கொண்டு விரக்தியை வெளிப்படுத்தினார். இந்திய மகளிர் அணி: 134/1 (23 ஓவர்கள்)
- Nov 02, 2025 18:23 IST
ஷஃபாலி வர்மா அரைசதம் விளாசல்
இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா-ஷஃபாலி வர்மா ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்து அபாரமான தொடக்கத்தை அளித்தனர். 58 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்திருந்த ஸ்மிருதி மந்தனா, ட்ரையான் வீசிய பந்தில் 'கேட்ச்-பிஹைண்ட்' (caught-behind) ஆகி ஆட்டமிழந்தார்.
- Nov 02, 2025 18:11 IST
ஸ்மிருதி மந்தனா 45 ரன்களில் ஆட்டமிழப்பு
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா, 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சோல் ட்ரையான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சோல் ட்ரையான் வீசிய பந்தை மந்தனா அடிக்க முயற்சித்தபோது, பந்து விக்கெட் கீப்பர் சினாலோ ஜஃப்தாவிடம் கேட்ச் ஆனது. 58 பந்துகளைச் சந்தித்த மந்தனா, 8 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் குவித்து வெளியேறினார்.
- Nov 02, 2025 18:07 IST
அதிக ரன்கள் குவித்து ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை!
இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2025 மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில், இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் முக்கிய சாதனையை முறியடித்துள்ளார். ஓ.டி.ஐ. உலக கோப்பையின் ஒரு தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீராங்கனை மிதாலி ராஜின் சாதனையை ஸ்மிருதி மந்தனா முறியடித்துள்ளார்.
உலகக் கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீராங்கனைகள்:
ஸ்மிருதி மந்தனா: 410 ரன்கள் (9 இன்னிங்ஸ்) (2025)*
மிதாலி ராஜ்: 409 ரன்கள் (9 இன்னிங்ஸ்) (2017)
பூனம் ராவத்: 381 ரன்கள் (9 இன்னிங்ஸ்) (2017)
ஹர்மன்ப்ரீத் கவுர்: 359 ரன்கள் (8 இன்னிங்ஸ்) (2017)
ஸ்மிருதி மந்தனா: 327 ரன்கள் (7 இன்னிங்ஸ்) (2022)
- Nov 02, 2025 16:46 IST
டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா பவுலிங்; இந்தியா பேட்டிங்
இந்திய மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க மகளிர் அணி முதலில் பந்துவீச்சை செய்துள்ளது. இதனால், இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
- Nov 02, 2025 15:50 IST
நவி மும்பையில் தொடரும் கனமழை
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி நடைபெறும் நவி மும்பையில் கனமழையால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் போட்டி தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது
- Nov 02, 2025 15:04 IST
உலக கோப்பை இறுதிப் போட்டி – மழையால் டாஸ் தாமதம்
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது
- Nov 02, 2025 14:03 IST
கணிக்கப்பட்ட ப்ளேயிங் எலவன்
இந்திய அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், ரேணுகா சிங் தாக்கூர், தீப்தி சர்மா, சினே ராணா/ ராதா யாதவ், கிராந்தி கவுட், ஸ்ரீ சரணி, அமன்ஜோத் கவுர், ஷஃபாலி வர்மா.
தென் ஆப்பிரிக்கா அணி: லாரா வோல்வார்ட் (கேட்ச்), அயபோங்கா காக்கா, க்ளோ ட்ரையோன், நாடின் டி க்ளெர்க், மரிசான் கேப், டாஸ்மின் பிரிட்ஸ், சினாலோ ஜஃப்டா, நோன்குலுலெகோ மலாபா, அன்னேரி டெர்க்சன், அன்னேக் போஷ்/மசபடா கிளாஸ், சுனே லூஸ்,
- Nov 02, 2025 12:30 IST
தென் ஆப்பிரிக்கா அணி வீரர்களின் பட்டியல்
லாரா வோல்வார்ட் (கேட்ச்), அயபோங்கா காக்கா, க்ளோ ட்ரையோன், நாடின் டி க்ளெர்க், மரிசான் கேப், டாஸ்மின் பிரிட்ஸ், சினாலோ ஜஃப்டா, நோன்குலுலெகோ மலாபா, அன்னேரி டெர்க்சன், அன்னேக் போஷ், மசபடா கிளாஸ், சுனே லூஸ், கரபோ மெசோ, துமி செகுகுனே, நோண்டுமிசோ ஷங்கசே
- Nov 02, 2025 12:29 IST
இந்திய அணி வீரர்களின் பட்டியல்
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், ரேணுகா சிங் தாக்கூர், தீப்தி சர்மா, சினே ராணா, கிராந்தி கவுட், ஸ்ரீ சரணி, ராதா யாதவ், அமன்ஜோத் கவுர், அருந்ததி ரெட்டி, உமா செட்ரி, ஷஃபாலி வர்மா.
- Nov 02, 2025 12:29 IST
உலக கோப்பை இறுதிப் போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பு உள்ளதாக கணிப்பு
மகளிர்உலககோப்பைஇறுதிப்போட்டிநடைபெறும்நவிமும்பையில்இன்றுமழைபெய்ய 63% வாய்ப்புஉள்ளதாகவானிலைஆய்வுமையம்தெரிவித்துள்ளது. மழையால்தடைப்பட்டால்ஆட்டம்நாளைக்குஒத்திவைக்கப்படும், நாளையும்ஆட்டம்மழையால்பாதிக்கப்பட்டால்இந்தியாமற்றும்ஆர். எஸ். ஏஅணிகளுக்கு 50 ஓவர்உலககோப்பைபகிர்ந்துதரப்படும்.
- Nov 02, 2025 12:09 IST
போட்டி தொடங்கும் நேரம்
இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நவிமும்பை மைதானத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில், தங்களது முதலாவது உலகக் கோப்பைக்காக இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் கோப்பை முத்தமிட்டு சாதனை படைக்க துடிக்கும். அதற்கு முட்டுக்கட்டை போட்டு கோப்பையுடன் நாடு திரும்ப லாரா வால்வார்ட் தலைமையிலான தென் ஆப்ரிக்கா முயலும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இறுதிப் போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
- Nov 02, 2025 12:09 IST
இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள்
இந்தியாவில் நடைபெற்று வரும் 13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தத் தொடருக்கான அரையிறுதி ஆட்டங்களின் முடிவில் இதுவரை உலகக்கோப்பையை வெல்லாத இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறின.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us