/tamil-ie/media/media_files/uploads/2018/10/D483.jpg)
India vs west indies 1st odi 12 men squad
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரில், நாளை(அக்.21) நடைபெறும் முதல் ஆட்டத்துக்கான 12 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதல் போட்டி நாளை குவஹாத்தியில் நடைபெறுகிறது. நாளை பிற்பகல் 2.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. இப்போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, எம்.எஸ் தோனி(வி.கீ), ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், மொஹம்மத் ஷமி, கலீல் அஹ்மது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
Announcement: #TeamIndia announce the 12 for the 1st ODI in Guwahati against West Indies #INDvWIpic.twitter.com/j32SXgSFTT
— BCCI (@BCCI) 20 October 2018
முன்னதாக, இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து தோனி நீக்கப்படுவார் என்றும் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பரவலாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஆனால், தோனி, பண்ட் ஆகிய இருவருமே அணியில் சேர்க்கப்பட்டனர். தோனி விக்கெட் கீப்பராக அணியில் தொடர, ரிஷப் பண்ட் பேட்ஸ்மேனாக சேர்க்கப்பட்டார்.
இது ரிஷப் பண்ட்டின் முதல் ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.