Advertisment

தொடர்ந்து 8-வது வெற்றி: புள்ளிகள் பட்டியலில் அசைக்க முடியாத முதல் இடத்தில் இந்தியா

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடரில், இந்திய அணி தொடர்ந்து 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் அசைக்க முடியாத அளவில் முதல் இடத்தில் உள்ளது.

author-image
WebDesk
New Update
India Team

தொடர்ந்து 8-வது வெற்றி: புள்ளிகள் பட்டியலில் அசைக்க முடியாத முதல் இடத்தில் இந்தியா

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடரில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 243 வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து 8-வது வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் அசைக்க முடியாத அளவில் முதல் இடத்தில் உள்ளது.

Advertisment

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள்  இடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 37-வது லீக் ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், தொடர்ந்து 8 போட்டிகளில் வெற்றி பெற்று நடப்பு உலகக் கோப்பை தொடரில் அசைக்க முடியாத அணியாக இந்தியா வலம் வருகிறது. 

ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா என்று 8 அணிகளை வெற்றி பெற்றுள்ளது. அது மட்டுமல்ல இந்திய அணி முதல் அணியாக அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

cwc 2023 points



தற்போது உலகக் கோப்பை தொடரில் புள்ளிப் பட்டியலில் இந்தியா 8 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 

தென்னாப்பிரிக்கா 8 போட்டிகளில் விளையாடி 6 ஆட்டங்களில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. 

ஆஸ்திரேலியா 7 போட்டிகளில் விளையாடி 5 ஆட்டங்களில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. 

நியூசிலாந்து 8 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.

பாகிஸ்தான் 8 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகள் பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் 5-வது இடத்தில் உள்ளது.

ஆப்கானிஸ்தான் 7 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகள் பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் 6-வது இடத்தில் உள்ளது.

இலங்கை 7 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது.

நெதர்லாந்து 7 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகள் பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் 8-வது இடத்தில் உள்ளது.

வங்கதேசம் 7 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டும் வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது.

இங்கிலாந்து 7 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டும் வெற்றி பெற்று 2 புள்ளிகள் பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் 9-வது இடத்தில் உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

World Cup
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment