தொடரும் இழுபறி... மறுக்கும் இந்தியா; சாம்பியன்ஸ் டிராபி நடத்துவதில் பாகிஸ்தானுக்கு மீண்டும் சிக்கல்!

ஐ.சி.சி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி) ஹைப்ரிட் மாடலை முற்றிலும் நிராகரித்துள்ளது என்பதை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் புரிந்துகொள்கிறது.

ஐ.சி.சி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி) ஹைப்ரிட் மாடலை முற்றிலும் நிராகரித்துள்ளது என்பதை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் புரிந்துகொள்கிறது.

author-image
WebDesk
New Update
India and Pakistan disagree Champions Trophy ICC Meeting Tamil News

ஐ.சி.சி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி) ஹைப்ரிட் மாடலை முற்றிலும் நிராகரித்துள்ளது என்பதை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் புரிந்துகொள்கிறது.

வெங்கடகிருஷ்ணா பி - Venkata Krishna B

2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த தொடர் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி தொடங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் தொடருக்கான அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதற்கு முக்கிய காரணம் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என பி.சி.சி.ஐ., சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி) தெரிவித்துள்ளது.

Advertisment

மேலும், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களை பொதுவான இடமான துபாய்க்கு மாற்ற வேண்டும் என்றும், அதிலும் குறிப்பாக, இந்தியாவின் மூன்று போட்டிகள், ஒரு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் ஹைப்ரிட் மாடலில் பொதுவான இடத்தில் நடக்க வேண்டும் என்றும் பி.சி.சி.ஐ.கேட்டுக்கொண்டுள்ளது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: No deal: India and Pakistan continue to disagree over Champions Trophy

ஆனால், அதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் வரவில்லை என்றால் போட்டியை நடத்துவதை கைவிடுவதுடன், போட்டியில் இருந்து விலகுவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி) சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி) தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.  

ஆலோசனை 

Advertisment
Advertisements

இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) வாரியக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாததால், சாம்பியன்ஸ் டிராபியின் எதிர்கால இடம் குறித்த இழுபறி இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஐ.சி.சி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் பங்கேற்றன. 15 நிமிடங்களுக்கும் குறைவாக நடந்த இக்கூட்டத்தின் முடிவில், ​​பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி) ஹைப்ரிட் மாடலை முற்றிலும் நிராகரித்துள்ளது என்பதை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் புரிந்துகொள்கிறது.

மேலும், சாம்பியன்ஸ் டிராபி நடைபெறும் இடம் தொடர்பாக அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஃபார்முலாவை முன்வைக்குமாறு பி.சி.பி மற்றும் பி.சி.சி.ஐ-க்கு ஐ.சி.சி. தரப்பில் கூறப்பட்டது. எந்த ஃபார்முலா முன்வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டாலும், அதை இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு அரசுகளும் அனுமதிக்க வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஐசிசி மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் (பி.சி.சி.ஐ) நம்பத்தகுந்த தீர்வுக்கு வருவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு (பி.சி.பி) கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சில மாற்று இடங்கள் குறித்து நாளை சனிக்கிழமை மாலையில் நடைபெறக்கூடிய அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழுப் போட்டியும் பாகிஸ்தானில் நடைபெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் வலுவாக உள்ள பாகிஸ்தானைத் தவிர, ஹைப்ரிட் மாடல் இன்னும் மிகவும் விரும்பப்படும் ஒன்றாக உள்ளது என்பது புரிந்து கொள்ளப்படுகிறது.

பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டை மாற்றாத வரை, ஹைப்ரிட் மாடல் மிகவும் சாத்தியமற்றதாகத் தெரிகிறது. ஆனால் இரண்டு அரசாங்கங்களும் சம்பந்தப்பட்டிருப்பதால், கடந்த ஆண்டு ஆசிய கோப்பையின் போது பாகிஸ்தான் ஏற்றுக்கொண்ட ஹைப்ரிட் மாடல் இந்த முறை நடக்காது என்ற அச்சம் ஐ.சி.சி வட்டாரங்களில் உள்ளது.

பாகிஸ்தான்  ஹைப்ரிட் மாடலை நிராகரித்து, அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் மாதிரி வரவில்லை என்றால், முழு சாம்பியன்ஸ் டிராபியையும் பாகிஸ்தானுக்கு வெளியே நகர்த்துவதற்கான விருப்பத்தை ஐ.சி.சி ஆராய வாய்ப்புள்ளது. ஐ.சி.சி இதுவரை வேறு எந்த நாட்டிற்கும் போட்டியை மாற்றுவது குறித்து இன்னும் முடிவு  எடுக்கவில்லை என்பது புரிந்து கொள்ளப்படுகிறது, ஆனால் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் தற்போது விருப்பமான இடங்களாக இருப்பதால் மாற்று விருப்பங்களை ஐ.சி.சி தேர்ந்தெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, போட்டிகள் ஒளிபரப்பப்படும் நேரம் ஒளிபரப்பாளர்களுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு அந்த முடிவு எட்டப்பட உள்ளது. 

ஐக்கிய அரபு அமீரகம் என்றால், பிப்ரவரி-மார்ச் மாதங்களில் வெப்பநிலை பொதுவாக நன்றாக இருக்கும் என்பதால் வானிலை கவலைக்குரியதாக இருக்காது. தென் ஆப்பிரிக்கா கோடை காலத்தின் இறுதியில் வரக்கூடும் என்பதால், அதுவும் ஒரு சாத்தியமான இடமாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bcci India Vs Pakistan Champions Trophy Icc

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: