/indian-express-tamil/media/media_files/2025/08/19/india-asia-cup-2025-squad-announcement-tamil-news-2025-08-19-15-03-14.jpg)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் காத்திருப்பு வீரர்களாக பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரல் உள்ளிட்ட வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பைக்கு ஆசிய அணிகள் தயாராகும் பொருட்டு இந்த தொடர் டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் நிலையில், அந்த அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
‘ஏ’ பிரிவில் இந்தியா, ஓமான், பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்டம்பர் 10 ஆம் தேதி துபாயில் சந்திக்கிறது. இதைத்தொடர்ந்து பரம போட்டியாளரான பாகிஸ்தானை செப்டம்பர் 14 ஆம் தேதி துபாயிலும், ஓமனை செப்டம்பர் 19 ஆம் தேதி அபுதாபியிலும் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி செப்டம்பர் 28 ஆம் தேதி துபாயில் அரங்கேறுகிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்
இந்நிலையில், ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமை பயிற்சியாளர் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அகர்கர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் கலந்தாலோசித்து அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளனர். இந்த அணியில் யார்-யாரெல்லாம் இடம்பெற போகிறார்கள்? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் நிலவியது.
அதன்படி, ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார். 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியில் நட்சத்திர வீரர்களாக ஜொலித்த ஜஸ்பிரித் பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளனர். ஒரு வருடத்திற்குப் பிறகு அவர்கள் அணியில் திரும்ப சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இந்தியாவின் காத்திருப்பு வீரர்களாக பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரல் உள்ளிட்ட வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டு இருப்பது குறித்து அஜித் அகர்கர் பேசுகையில், "சுப்மன் கில்லை தேர்வு செய்திருப்பதன் மூலம் தொடக்க வீரர்களுக்கான பரிசீலனையில் மேலும் ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது. சில மாதங்களாக சுப்மன் கில் அபார பார்மில் உள்ளார். இந்திய அணி துபாய் சென்றதும், எதிரணி மற்றும் சீதோஷ்ண நிலையை பொறுத்து ஆடும் லெவன் அணியை கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள் முடிவு செய்வார்கள். குறிப்பிட்ட சமயத்தில் சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் டி20 அணித்தேர்வுக்கு தயாராக இல்லாதபோதுதான் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக ஆடினார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்" என்று அவர் கூறினார்.
கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசுகையில், "டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு நாங்கள் விளையாடும் முதல் பெரிய போட்டி இது. நாங்கள் மூன்று அல்லது நான்கு இருதரப்பு தொடர்களில் விளையாடினோம், ஆனால் இது நம்மை நாமே சோதித்துப் பார்க்க ஒரு நல்ல போட்டி. இதற்குப் பிறகும் பல டி20கள் உள்ளன. இது ஆசியக் கோப்பையுடன் தொடங்குகிறது.
தயாரிப்பு என்பது வெளிப்படையானது. கடந்த உலகக் கோப்பைக்குப் பிறகு, நாங்கள் எந்த வழியில் செல்லப் போகிறோம் என்பது குறித்து எங்களுக்கு ஒரு சிறிய யோசனை இருந்தது. ஆனால் நீங்கள் நெருங்கி வரும்போது, உங்கள் 16-17-18 பேர் யார் என்பது உங்களுக்குத் தெரியும். உலகக் கோப்பைக்குள் நுழையும் போது அவர்களுக்கு சிறந்த நிலையில் இருக்க சிறந்த வாய்ப்பை வழங்க முயற்சிக்க விரும்புகிறீர்கள் என்பது தான். ஆமாம், அது இப்போது தொடங்குகிறது." என்று அவர் கூறினார்.
ஆசிய கோப்பை 2025 தொடருக்கான இந்திய டி20 அணி: சூரியகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சகரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us