33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக தொடங்ககியது. இதில், முதல் நாளான இன்று மொத்தம் 14 தங்கப்பதக்கங்களுக்கு போட்டிகள் நடக்கின்றன. இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் முதல் தங்கத்தை வென்று சீனா அசத்தியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India at Paris Olympics 2024 Day 1 Live Updates
10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு பிரிவில் சீனாவின் ஹுவாங் யுடிங், ஷெங் லிஹாவ் ஜோடி, கொரியா அணியை வீழ்த்தி தங்கத்தை வென்றது. இதன் மூலம் பாரீஸ் ஒலிம்பிக்கில் தனது முதல் தங்கப்பதக்கத்தை வென்ற சீனா, ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் நாடு என்கிற பெருமையையும் பெற்றது.
2-வது தங்கத்தையும் வென்ற சீனா
தொடர்ந்து, பாரீஸ் ஒலிம்பிக்கில் தனது இரண்டாவது தங்கப்பதக்கத்தையும் சீனா வென்றது. பெண்களுக்கான டைவிங் ஸ்பிரிங்போர்டு போட்டியில் சீனா தங்கபதக்கத்தை வென்றது. சீனா பல ஆண்டுகளாக டைவிங்கில் அசத்தி வருகிறது, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டோக்கியோவில் எட்டு தங்கப் பதக்க போட்டிகளில் ஏழு பதக்கங்களை வென்றுள்ளது.
ஏமாற்றம்
10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு பிரிவில், இந்திய அணி தரப்பில் ரமிதா-அர்ஜூன் பாபுதா மற்றும் இளவேனில்-சந்தீப்சிங் ஆகிய ஜோடிகள் களம் இறங்கின. இந்த தகுதி சுற்றில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே பதக்கங்களுக்கான போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், இந்தியாவின் ரமிதா-அர்ஜூன் பாபுதா இணை 6-வது இடத்தையும், இளவேனில்-சந்தீப்சிங் ஜோடி 12-வது இடத்தையும் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.
இதேபோல், ஆண்கள் பிரிவில் துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதி சுற்று இன்று நடைபெற்ற நிலையில், இந்த போட்டியில் இந்திய வீரர்கள் சரப் ஜோத், அர்ஜீன் களம் கண்டனர். இதில், சரப் ஜோத் 9வது இடமும்(577 புள்ளிகள்) , அர்ஜுன் 18வது இடமும் (577 புள்ளிகள்) (பிடித்தனர். முதல் 8 இடங்களை பிடித்தவர்கள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இந்திய வீரர்கள் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்
தகுதி
மகளிர் தனிநபர் பிரிவு துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதி சுற்று இன்று நடந்த நிலையில், இந்திய வீராங்கனை மனு பாக்கர் கலந்துகொண்டார். இதில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீராங்கனை அவர் 580 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்தார். இதனால் அவர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். நாளை மறுநாள் (திங்கள்கிழமை) மகளிர் தனிநபர் பிரிவு துப்பாக்கி சுடுதல் இறுதிச்சுற்று நடைபெற உள்ளது.
இந்திய வீரர், வீராங்கனைகள் இன்று விளையாடும் போட்டிகள்.
டென்னிஸ் (ஆண்கள் இரட்டையர் பிரிவு ): போபண்ணா - பாலாஜி (இந்தியா) - பேபியன் - வாசெலின் (பிரான்ஸ்) , மாலை 4.30 மணி.
பேட்மிண்டன் (ஆண்கள் ஒற்றையர் பிரிவு) : லக்ஷயா சென் (இந்தியா) - கோர்டான் (கவுதமாலா) , இரவு 7.10 மணி.
டேபிள் டென்னிஸ் (ஆண்கள் ஒற்றையர் பிரிவு): ஹர்மீத் தேசாய்(இந்தியா ) - ஜாய்த் அபோ (ஜோர்டான்) (ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று), இரவு 7.15 மணி.
பேட்மிண்டன் (ஆண்கள் இரட்டையர் பிரிவு): சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி(இந்தியா)-லூகாஸ் கோர்வீ-ரோனன் லபார் (பிரான்ஸ்), , இரவு 8 மணி.
டேபிள் டென்னிஸ் (ஆண்கள் ஒற்றையர் பிரிவு): ஹர்மீத் தேசாய்(இந்தியா ) - அபோ யமான் (ஜோர்டான்) (ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று), இரவு 7.15 மணி.
ஆக்கி (ஆண்கள் அணி ) : இந்தியா- நியூசிலாந்து : இரவு 9 மணி
பேட்மிண்டன் (பெண்கள் இரட்டையர் பிரிவு): அஸ்வினி பொன்னப்பா - கிரஸ்டோ (இந்தியா)-கோங் ஹீ யோங்-கிம் சோ யோங் (தென்கொரியா), இரவு 11.50 மணி.
குத்துச்சண்டை (பெண்கள் 54 கிலோ எடைப்பிரிவு ): பிரீத்தி பவார்(இந்தியா) - வோ தி கிம் அன் (வியட்நாம்), (பெண்கள் 54 கிலோ எடைப்பிரிவு), நள்ளிரவு 12 மணி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.