Advertisment

2-வது பதக்கம் வெல்வாரா நீரஜ் சோப்ரா? ஹாக்கி அணிக்கு வெண்கலம் வெல்லும் வாய்ப்பு - இன்றைய போட்டி முழு விவரம்

பாரிஸ் ஒலிம்பிக் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியின் தகுதி சுற்றில் தனது முதல் முயற்சியிலேயே 89.34 மீட்டர் வீசி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India at Paris Olympics 2024 Day 13 schedule Neeraj Chopra eyes historic 2nd medal mens hockey team Tamil News

பிற்பகல் 2:05 மணிக்கு நடக்கும் பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டம் ரெபிசேஜ் சுற்றில் இந்தியாவின் ஜோதி யர்ராஜி களமிறங்குகிறார்.

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 28 ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 வீரர் - வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Paris Olympics 2024 India, Day 13 Live Updates

2-வது பதக்கம் வெல்வாரா நீரஜ் சோப்ரா?

இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியின் தகுதி சுற்றில் தனது முதல் முயற்சியிலேயே 89.34 மீட்டர் வீசி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா. 2020 டோக்கியோ  ஒலிம்பிக்கில் அவர் 87.58 மீட்டர் தூரம் வரை எறிந்து தங்கம் வென்று சாதனை படைத்தார். அதனை மீண்டும் ஒருமுறை நிகழ்த்துவாரா? என்கிற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

ஆடவருக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி இன்று இரவு 11:55 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: India at Paris Olympics 2024, Day 13 schedule

வெண்கலம் வெல்லுமா ஹாக்கி அணி 

ஆடவருக்கான ஹாக்கி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் அரைஇறுதியில் ஜெர்மனியிடம் தோல்வியுற்ற இந்தியா மற்றொரு அரைஇறுதியில் நெதர்லாந்திடம் தோற்ற ஸ்பெயின் அணியுடன் மோதுகிறது. இந்தப் போட்டியானது மாலை 5:30 மணிக்கு தொடங்குகிறது. 

2020 டோக்கியோ  ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கலம் வென்ற நிலையில், அதனை தக்க வைக்க கடுமையாக போராடும். 

பிற்பகல் 12:30: கோல்ஃப் - பெண்களுக்கான தனிநபர் ஸ்ட்ரோக் ஆட்டம் அதிதி அசோக் மற்றும் திக்ஷா தாகர் சுற்று 2.

பிற்பகல் 2:05: தடகளம் - பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டம் ரெபிசேஜ் சுற்றில் ஜோதி யர்ராஜி.

பிற்பகல் 2:30: மல்யுத்தம் - 16 ஆடவர் 57 கிலோ எடைப் போட்டியில் வடக்கு மாசிடோனியாவின் விளாடிமிர் எகோரோவ் - அமன் செஹ்ராவத்.

பிற்பகல் 2:30: மல்யுத்தம் - பெண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவு 16 போட் போட்டியில் அன்ஷு மாலிக் vs அமெரிக்காவின் ஹெலன் மரூலிஸ்.

மாலை 5:30: ஹாக்கி - ஆடவர் ஹாக்கி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா vs ஸ்பெயின்.

மற்ற முக்கியமான பதக்க  போட்டிகள்

காலை 11 மணி: மாரத்தான் நீச்சல் - பெண்களுக்கான 10 கி.மீ.

மாலை 6:30: டைவிங் - ஆண்களுக்கான 3மீ ஸ்பிரிங்போர்டு இறுதிப் போட்டி.

இரவு 8:30: ஆண்கள் கால்பந்து - எகிப்து vs மொராக்கோ.

இரவு 10:30: ஆண்கள் ஹாக்கி - ஜெர்மனி vs நெதர்லாந்து.

இரவு 11:30 : தடகளம் - பெண்களுக்கான நீளம் தாண்டுதல் இறுதிப் போட்டி.

வெள்ளிக்கிழமை அதிகாலை 12 : தடகளம் - ஆண்களுக்கான 200மீ இறுதிப் போட்டி.

வெள்ளிக்கிழமை அதிகாலை 12:55: தடகளம் - பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டம் இறுதிப் போட்டி.

வெள்ளிக்கிழமை அதிகாலை 1:15: தடகளம் - ஆண்களுக்கான 110மீ தடை ஓட்டம் இறுதிப் போட்டி.

வெள்ளிக்கிழமை அதிகாலை 2:04 : குத்துச்சண்டை - ஆண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் பிரான்சின் பிலால் பென்னாமா மற்றும் உஸ்பெகிஸ்தானின் ஹசன்பாய் டுஸ்மடோவ் மோதல். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Paris 2024 Olympics Neeraj Chopra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment