ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அந்த அணியை சமாளிக்க ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா, இந்திய அணியில் நிச்சயம் தேவை என ஆஸி அணியின் முன்னாள் வீரர் இயான் சேப்பல் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி, இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஒருநாள், டுவென்டி20 என 2021 ஜனவரி வரை இந்திய அணி அங்கேயே தங்கி விளையாட உள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டராக திகழும் ஹர்திக் பாண்ட்யா, காயம் காரணமாக 2018ம் ஆண்டிற்குப்பிறகு, டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். இந்நிலையில், இயான் சேப்பல் ஈஎஸ்பிஎன் கிரிக்இன்போ இணையதளத்தில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளதாவது, விரைவில் துவங்க உள்ள ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், ஹர்திக் பாண்ட்யா இடம்பெறும் பட்சத்தில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு அவர் உதவிகரமாக இருப்பார். அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளருக்கு ஓய்வு அளிக்கும்பட்சத்தில், ஹர்திக் பாண்ட்யா சிறந்த தேர்வு ஆக விளங்குவார்.
காயம் காரணமாக கடந்தாண்டில் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பது என்பது சவாலானதாக இருக்கும். டெஸ்ட் போட்டிகளிலும் எனது திறமையை விரைவில் நிரூபிக்க வேண்டும் என்று ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
ஆஸி, டெஸ்ட் தொடர், ஹர்திக் பாண்ட்யாவுக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. அணியில் இவர் இடம்பெறும் பட்சத்தில், மூன்றாவது முக்கிய பவுலராக ஜொலிப்பார் என்று இயான் சேப்பல் குறிப்பிட்டுள்ளார். பேட்டிங்கில், ரிஷப் பண்ட்டிற்கு முன்னதாக அதாவது 7வதாக ஹர்திக் இறங்கினால், அவரது வானவேடிக்கையை ரசிக்கவும் வாய்ப்புண்டு.
இந்திய அணியில் அஸ்வின், குல்தீப் யாதவ், ரவிந்திர ஜடேஜா என நிறைய ஸ்பின் பவுலர்கள் உள்ளநிலையில், அவர்களில் யாரை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்தில் அணி வீரர்கள் தேர்வு நிர்வாகம் தொடர்ந்து திணறி வருகிறது.
அஸ்வின் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், ஆஸ்திரேலியாவில் அவரின் செயல்பாடு சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை. ரவீந்திர ஜடேஜா ஆல்ரவுண்டராக திகழ்ந்த போதிலும், அவர் தனது பவுலிங் திறனை இன்னும் மெருகேற்றிக்கொள்ள வேண்டும்.
ஆஸி., மண்ணில் குல்தீப் யாதவின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. அவர் இக்கட்டான தருணங்களில் முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளார். எனவே இவர்களில் யாரை தேர்ந்தெடுப்பது என்பது வீரர்கள் தேர்வுக்குழுவுக்கு மிகுந்த சவாலாகவே அமையும்.
ஆஸ்திரேலிய அணியில், டேவிட் வார்னர், ஸ்டீபன் ஸ்மித் என பலமான பேட்டிங் வரிசை, இந்திய அணிக்கு கடும் சவாலாக அமையப்போகிறது.
பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக, ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களான வார்னர், ஸ்மித்திற்கு ஓராண்டு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், இளம் வீரர் மார்னஸ் லாபஸ்சாக்னேவின் வருகை குறிப்பிடத்தக்க வகையில் இருந்தது. ஆஸி., அணியின் வெற்றிக்கு லாபஸ்சாக்னேவின் பங்கு குறிப்பிடத்தக்க வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸி., அணியில் பேட் கும்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசல்வுட், ஜேம்ஸ் பேட்டின்சன் வேகப்பந்து வீச்சில் கலக்கிக்கொண்டிருக்கும்போது, ஸ்பின் பவுலிங்கில் நாதன் லியான் சிறப்பாக செயல்படுவார்.
2018-19ம் ஆண்டில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, ஆஸி., மண்ணில் தொடரை வென்று சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்திய அணியின் கோலி மற்றும் புஜாராவின் விக்கெட்டை, ஆஸ்திரேலிய வீரர்கள் எளிதில் கைப்பற்றும் பட்சத்தில், வெற்றி பெறுவது எளிதாகும்.
கடந்த தொடரில், இந்திய அணி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்ற இவர்களின் பங்கு அதிமுக்கியமாக இருந்த்தாக இயான் சேப்பல் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.