இந்தியாவின் பெரிய ஹாக்கி மைதானம்: எங்கே தெரியுமா?

ஒடிஷாவில் உள்ள ரூர்கேலா எனுமிடத்தில் இந்தியாவிலே மிக பெரிய ஹாக்கி மைதானம் அமையவுள்ளதாக அம்மாநில முதல்வர் நவீன்பட் நாயக் அறிவித்துள்ளார்.

indias biggest hockey stadium - இந்தியாவிலே மிக பெரிய ஹாக்கி மைதானம்

ஒடிஷா  முதல்வர் நவீன்பட் நாயக்  (நேற்று) வியாழக்கிழமை,  20,000 ஆயிரம் இருக்கைகளை கொண்ட இந்தியாவிலே மிக பெரிய ஹாக்கி மைதானம் அமையவுள்ளதாக அறிவித்துள்ளார். ஒடிஷாவில் உள்ள ரூர்கேலாவில் அமைந்துள்ள இந்த  மைதானத்தில் 2023- க்கான ஹாக்கி உலக கோப்பையை நடத்த உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

வீடியோ குறுஞ்செய்தி மூலம் அவர் கூறியதாவது:

“2023- க்கான உலக ஹாக்கி கோப்பை போட்டியை  தலைநகர் புவனேஸ்வரிலும், சுந்தர்கர் மாவட்டத்திலும் நடத்த உள்ளோம். அதற்காக 15 ஏக்கர் நிலப்பரப்பில் பிஜு பட்நாயக் தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில், இந்தியாவிலே மிக பெரிய  ஹாக்கி மைதானம் அமைத்துள்ளோம். மற்றும் சுந்தர்கர் மாவட்டத்தில் 17 செயற்கை மைதானங்களை உருவாக்கியுள்ளோம்.  இதன் மூலம் இந்தியாவின் ஹாக்கியை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்ல உள்ளோம்.
இந்திய ஹாக்கியில் ஜாம்பவன்களாக திகழும் திலீப் டிர்கி மற்றும் சுனிதா லக்ரா இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்களை போல இன்னும் நிறைய ஜாம்பவான்களை இந்த மைதானம் உருவாக்கும் என நம்புகிறோம். அதற்கவே உலக தரம் வாய்ந்த மைதானமாக கட்டமைத்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

ஒடிஷா  மாநிலதின் மூத்த அதிகாரிகள், சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எஃப்ஐஎச்), மற்றும் இந்திய ஹாக்கி விளையாட்டு குழுமம் போன்ற உயர் மட்ட அதிகாரிகள் கொண்ட குழு நேரில் சென்று ஆய்வு செய்தது . உலக கோப்பை நடத்துவதற்கான எல்லா கட்டமைப்பு வசதிகளையும் மைதானம் பெற்றிறுப்பதாக அந்த குழு அறிவித்திருந்தது. இந்திய ஹாக்கி அணிக்கு ஒடிஷா மாநிலம் ‘ஸ்பான்சர்’ செய்து வருவது குறிப்பிட தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Web Title: India biggest hockey stadium

Next Story
தமிழக அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டன்: அணி முழு விவரம்Dinesh karthic captain for taminadu cricket team -தமிழக அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டன்: அணி முழு விவரம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com