லடாக் எல்லைப் பிரச்னை குறித்து சர்ச்சை டுவிட்; சிஎஸ்கே அணி மருத்துவர் சஸ்பெண்ட்

கிழக்கு லடாக்கில் சீன துருப்புக்களுடன் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தது தொடர்பாக சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய டுவிட் செய்ததைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது மருத்துவர் மது தொட்டப்பிலியை புதன்கிழமை சஸ்பெண்ட் செய்துள்ளது.

By: Published: June 17, 2020, 7:59:55 PM

கிழக்கு லடாக்கில் சீன துருப்புக்களுடன் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தது தொடர்பாக சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய டுவிட் செய்ததைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது மருத்துவர் மது தொட்டப்பிலியை புதன்கிழமை சஸ்பெண்ட் செய்துள்ளது.

கிழக்கு லடாக்கில் நேற்று முன் தின இரவு இந்திய – சீனா ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட வன்முறை மோதலில் இந்திய தரப்பில் 20 ராணு வீரர்கள் உயிரிழந்தனர். இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மருத்துவர் மது தொட்டப்பிலி சர்ச்சைக்குரிய வகையில் டுவிட் செய்தார். இதையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது மருத்துவரை இடைநீக்கம் செய்துதுள்ளதாக அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. சிஎஸ்கே அணி பிசிசிஐ முன்னாள் தலைவர் என்.ஸ்ரீனிவாசனினி இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது.


டாக்டர் மது தொட்டப்பிலிலின் தனிப்பட்ட டுவிட் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிந்திருக்கவில்லை. ஆனால், அவர் அணி மருத்துவர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்று சிஎஸ்கே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவருடைய டுவிட்டுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும், இது நிர்வாகத்திற்கு தெரியாமல் செய்யப்பட்டது என்றும் அது மோசமான என்றும் என்றும் தெரிவித்துள்ளது.

மருத்துவர் தொட்டப்பிலில் ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கியதிலிருந்து அணியுடன் இருந்து வருகிறார். இவர் விளையாட்டு மருத்துவத்தில் நிபுணர் ஆவார்.

செவ்வாய்க்கிழமை கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா – சீனா ராணுவத்துக்கு இடையே வன்முறை ஏற்பட்டபோது இந்திய வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வந்ததை அடுத்து, தொட்டப்பிலில் அரசை கேலி செய்யும் விதமாக ஒரு டுவிட் பதிவை வெளியிட்டிருந்தார். பின்னர் அவர் அந்த டுவிட்டை நீக்கி தனது கணக்கைப் பாதுகாப்பு குறியீடு செய்தார்.

திங்கள்கிழமை இரவு லடாக்கில் ஏற்பட்ட வன்முறையில் ஒரு கர்ணல் உள்பட 20 வீரர்கள் உயிரிழந்தனர். 1967 ஆம் ஆண்டு நாது லாவில் நடந்த மோதல்களுக்குப் பின்னர், இரு ராணுவத் துருப்புகளுக்கும் இடையிலான மிகப்பெரிய மோதல் இது. அப்போது, இந்தியா சுமார் 80 வீரர்களை இழந்தது. அதே நேரத்தில் 300க்கும் மேற்பட்ட சீன ராணுவ வீரர்கள் மோதலில் கொல்லப்பட்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Sports News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:India china border issue contorversy tweet sck team suspend its sports doctor

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X