5 Indian players who have recorded a higher Yo-Yo test score than Virat Kohli Tamil News
Yo-Yo test score Indian Cricketers Tamil News: வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமின்றி, உடற்பயிற்சி துறையிலும் முன்னாள் கேப்டன் விராட் கோலி உலகம் முழுவதும் முன்மாதிரியாக திகழ்கிறார். அவரது உடற்பயிற்சியின் தரங்கள் நம்பமுடியாதவை. மேலும், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்கள் அவரை தங்கள் உத்வேகமாகவும் முன்னோடியாகவும் கருதுகின்றனர்.
Advertisment
யோ-யோ டெஸ்ட் என்றால் என்ன?
‘யோ–யோ’ என்ற உடல்தகுதி தேர்வில் தேறும் வீரர்கள் மட்டுமே இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்கு பரிசீலிக்கப்படுவார்கள் என்ற கொள்கையை கிரிக்கெட் வாரியம் தற்போது தீவிரமாக கடைபிடித்து வருகிறது. இரண்டு கோடுகள் போடப்பட்டு அதன் நடுவில் 20 மீட்டர் தூரத்தை குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட ரவுண்டுகள் வேகமாக ஓடி முடிக்க வேண்டும். இது தான் ‘யோ–யோ’ சோதனை ஆகும்.
யோ-யோ டெஸ்டில் கோலியின் ஸ்கோர் என்ன?
Advertisment
Advertisements
யோ-யோ டெஸ்டில் கோலி 19 ஸ்கோர் எடுத்துள்ளார். யோ-யோ டெஸ்ட் என்பது உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் வீரர்களால் செய்யப்படும் உடற்பயிற்சி மதிப்பீடாகும். இந்திய அணியில், 2017 ஆம் ஆண்டு தனது கேப்டன்சியில் யோ-யோ டெஸ்டில் ஃபிட்னஸ் பாரோமீட்டராக கொண்டு வந்தவர் கோலி.
இந்திய அணியைப் பொறுத்தவரை, கோலியின் கீழ் ஒரு வீரரின் குறைந்தபட்ச ஸ்கோர் 16.1 ஆகும். இந்த கட்-ஆஃப்-ஐ விட அதிகமாக ஸ்கோர் செய்ய முடிந்த கிரிக்கெட் வீரர்கள் விராட்டின் கேப்டன்சியின் கீழ் எந்த வடிவத்திலும் இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவதற்கு மட்டுமே தகுதியுடையவர்கள்.
சுவாரஸ்யமாக, கோலியைக் காட்டிலும் சிறந்த யோ-யோ டெஸ்ட் ஸ்கோரைப் பதிவு செய்த சில வீரர்கள் உள்ளனர். அவர்களை பின்வருமாறு பார்க்கலாம்.
ஹர்டிக் பாண்டியா - யோ-யோ டெஸ்ட் ஸ்கோர் 19
மணீஷ் பாண்டே - 19.2
மயங்க் தாகர் - 19.3
அகமது பந்தே - 19. 4
மயங்க் அகர்வால் - 20.1
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil