Advertisment

உதயநிதி விழாவில் ஒலிம்பியன் பாஸ்கரன் அவமதிப்பு: இருக்கை மறுக்கப்பட்டதால் எதிர்ப்பு

"நாங்கள் அழைக்கப்பட்டோம், ஆனால் அவமதிக்கப்பட்டோம். நாட்டுக்காக உலகக் கோப்பையை வென்ற கிரிக்கெட் வீரர்களுக்கு இப்படி செய்வார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் இந்திய ஹாக்கி கேப்டன் பாஸ்கரன்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India ex-captain Vasudevan Baskaran takes on organisers hockey world cup Tamil News

Hockey player and former India captain Vasudevan Baskaran hockey world cup event Tamil News

Former India Hockey captain  Vasudevan Baskaran  Tamil News: உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் ஒடிசா மாநிலத்தில் வருகிற ஜனவரி 13-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி ஹாக்கி கோப்பை, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டும் காட்சிப்படுத்தப்பட்டும் வருகிறது. அவ்வகையில், இந்தியா முழுவதும் 14 நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட ஹாக்கி கோப்பை நேற்று புதன்கிழமை விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அதனை ஹாக்கி கோப்பையை, தமிழ்நாடு ஹாக்கி சங்கத் தலைவர் ஜான் மனோகரன் பெற்றுக்கொண்டார்.

Advertisment

ஹாக்கி உலக கோப்பைக்கு உற்சாக வரவேற்பு

இதன்பின்னர், உலக கோப்பை ஹாக்கி போட்டிக்கான கோப்பை தலைமை செயலகத்திற்கு கொண்டுவரப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பிக்கப்பட்டது. அவர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியிடம் வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து, ஹாக்கி கோப்பை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்திற்கு எடுத்து வரப்பட்டது. அங்கு பாரம்பரிய முறைப்படி, மேளதாளங்கள் முழங்க, கோப்பைக்கும், வீரர்களுக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஹாக்கி விளையாட்டு சங்கப் பிரதிநிதிகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னாள் வீரர்களுக்கு மேடையில் இடம் இல்லை

அப்போது விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த இருக்கை வரிசையில், முதல் வரிசையில் விளையாட்டுத்துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், சென்னை மேயர் பிரியா போன்றவர்களுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. இவர்களுக்கு பின்னால் இருந்த 2வது வரிசையில் ஓய்வுபெற்ற ஹாக்கி வீரர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டது.

இதைக் கண்டு ஆத்திரமடைந்த இந்திய அணியின் முன்னாள் ஹாக்கி பயிற்சியாளரும், தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய ஹாக்கி வீரருமான வாசுதேவன் பாஸ்கரன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, “இது என்ன கட்சி நிகழ்ச்சியா? இல்ல விருது வழங்கும் விழாவா?, முன்னாள் ஹாக்கி வீரர்களுக்கு பின் வரிசையிலா இருக்கை போடுவீங்க?, விளையாட்டைப் பற்றிய பொதுவான விஷயம் உங்களுக்குத் தெரியுமா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

இதனால் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், நீண்ட சலசலப்புக்கு பிறகு, வாசுதேவன் பாஸ்கரன் உள்பட 4 ஹாக்கி வீரர்களுக்கு முன்வரிசையில் இருக்கை போடப்பட்டது. 1980-ல் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணிக்கு பாஸ்கரன் கேப்டனாக இருந்தவர் என்பது கூட தெரியாமல் நிகழ்ச்சி
நடத்துகிறார்கள் என்று விவரம் அறிந்தவர்கள் எனத் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் ஹாக்கி வீரர்கள் அவமதிப்பு… வைரல் வீடியோ…

இதனிடையே, முன்னாள் இந்திய ஹாக்கி கேப்டன் வாசுதேவன் பாஸ்கரன் நிகழ்ச்சியை நடத்தியவர்களிடம் கேள்வி எழுப்பிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது. நெட்டிசன்கள் மத்தியில் இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்ட நிலையில், அவர்கள் கடுமையாக விமர்ச்சித்து வருகின்றனர்.

முன்னாள் இந்திய ஹாக்கி கேப்டன் கேள்வி

இந்நிலையில். இந்த நிகழ்வு தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு பாஸ்கரன் அளித்த பேட்டியில், "நாங்கள் அழைக்கப்பட்டோம், ஆனால் அவமதிக்கப்பட்டோம். நாட்டுக்காக உலகக் கோப்பையை வென்ற கிரிக்கெட் வீரர்களுக்கு இப்படி செய்வார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர், விழா ஏற்பாட்டாளர்கள் பக் பாஸ் செய்தும், ஏன் மூத்த வீரர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை என்பதற்கு பதில் இல்லை. சிலர் ஒலிம்பியன்கள் மற்றும் சிலர் உலகக் கோப்பை வென்றவர்கள். அவர்கள் உயர்மட்ட அரசியல்வாதிகளுடன் இருந்தவர்கள். ஆனால் இன்று அது வேறு கதை." என்று கூறியுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Chennai Mk Stalin Udhayanidhi Stalin Sports Hockey Indian Hockey
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment