ஆசிய விளையாட்டு: பதக்க எண்ணிக்கையில் இந்தியா புதிய சாதனை

கடந்த 2018-ம் ஆண்டு இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய போட்டியில், இந்தியா 70 பதக்கங்களை வென்றது.

கடந்த 2018-ம் ஆண்டு இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய போட்டியில், இந்தியா 70 பதக்கங்களை வென்றது.

author-image
WebDesk
New Update
India go past best ever Asiad medal tally 2023 Asian Games Tamil News

ஆசிய போட்டி வரலாற்றில் அதிக பதக்கங்கள் வென்று இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது.

Asian-games 2023 | india: 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த போட்டி தொடரின் 12-வது நாளான இன்று பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் இந்தியா பதக்கங்களை அள்ளி வருகிறது. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Asian Games 2023 Live Updates, Day 11

இந்நிலையில், ஆசிய போட்டி வரலாற்றில் அதிக பதக்கங்கள் வென்று இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற போட்டியில், இந்தியா 70 பதக்கங்களை வென்றது. அதில் 16 தங்கம், 23 வெள்ளி மற்றும் 31 வெண்கலப் பதக்கங்கள் ஆகும். 

இந்த நிலையில், தற்போது இந்திய ஆசிய விளையாட்டு போட்டியில் 16 தங்கம், 27 வெள்ளி, 31 வெண்கலம் என மொத்தம் 74 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது. இதன்மூலம் முந்தைய சாதனையை இந்தியா முறியடித்துள்ளது. 

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Asian Games

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: