இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது.
IND vs WI Test Tamil News: வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், டொமினிகாவில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால், இந்தியா தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
Advertisment
இந்நிலையில், இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 20ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றாலும், இந்தியாவின் நம்பர் 1 டெஸ்ட் இடத்திற்கு ஆபத்து உள்ளது.
இங்கிலாந்தில் தற்போது நடந்து வரும் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் இந்தியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடிக்க முடியும். அது எப்படியென்றால், இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரை 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்ல வேண்டும். தற்போது ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
Advertisment
Advertisements
ஒருவேளை, இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தால், ஆஷஸ் தொடரை குறைந்தபட்சம் 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெல்ல வேண்டும். அதே சமயத்தில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தால், ஆஸ்திரேலிய அணி முதல் இடத்தைப் பெற இரண்டு வாய்ப்புகள் உள்ளன.
ஒன்று ஆஷஸ் தொடரின் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்து தொடரை 2-1 என ஆஸ்திரேலியா கைப்பற்றினால் முதலிடத்திற்கு முன்னேற முடியும். இரண்டாவது வாய்ப்பு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 3-2 என வென்றால் நம்பர் 1 இடத்தை ஆஸ்திரேலிய அணி பிடித்து விடும்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி 19ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil