மகாராஷ்டிரா, கர்நாடகா,கேரளா மற்றும் வட மாநிலங்கள் உள்ள முண்ணனி கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து 60"க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்ற இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரிக் மொபிலிட்டி வாகன தயாரிப்பு போட்டி கோவையில் நடைபெற்றது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஃபிரட்டர்னிட்டி ஆஃப் மெக்கானிக்கல் அண்ட் ஆட்டோமோட்டிவ் இன்ஜினியர்ஸ் எனபடும், எஃப்.எம்.ஏ.இ அமைப்பு - கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்பு போட்டியின் 10"வது பதிப்பை கோவை செட்டிபாளையத்தில் உள்ள கரி மோட்டார்ஸ் ரேஸ் டிராக்கில் நடத்தியது.
இந்த போட்டிகளில், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா மற்றும் வட மாநிலங்கள் உட்பட இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள முண்ணனி, கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து சுமார் 60"க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றது. ஃபார்முலா மாணவர் எப்.எஸ்.எஸ் இந்தியா, எஃப்.எம்.ஏ.இ மோட்டோ என வகைபடுத்தபட்டு இந்த போட்டி ஆசியாவில் முதன்முதலாக உலகில் இரண்டாவது ஃபார்முலா கார்ட் போட்டிகளாக நடைபெற்றது.
இதில் கோ-கார்ட் வகை, மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாரத் சோலார் வாகனங்கள், 4 பிரிவுகளில் போட்டிகளில் கலந்து கொண்டது. இந்த ஆண்டு இங்கு நடைபெறும் இந்த தேசிய அளவிலான போட்டிகளில் புதியதாக எலக்ட்ரிக் மொபிலிட்டி மற்றும் நிலையான போக்குவரத்து தீர்வுகளுக்கு, முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வாகனங்களை பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாக்கி பின்னர் போட்டிகளில் கலந்து கொள்ள வைத்தனர்.
போட்டியில் கலந்து கொள்ள வந்த மாணவர் ஆதித்யா ராவ் கூறுகையில். எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஆர்வத்தை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் எலக்ட்ரிக் உதிரிபாகங்கள் கொண்டு வடிவமைக்க பட்ட வாகனங்களுக்கான போட்டிகளாக இங்கு நடைபெற்று வருகின்றது. இந்த போட்டிகள் மாணவர்களின் அதிநவீன புதிய எலக்ட்ரிக் வாகன கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. குறிப்பாக இது போன்ற போட்டிகள் வரும் காலங்களில் எலக்ட்ரிக் வாகனங்களின் வரவேற்பை மக்களிடையே ஏற்படுத்தும் என நம்புவதாக தெரிவித்தார்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“