Advertisment

பாராலிம்பிக்ஸில் இந்தியா புதிய சாதனை: 20 பதக்கங்கள் வென்று டோக்கியோ சாதனை முறியடிப்பு

பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் முதல்முறையாக 20 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.

author-image
WebDesk
New Update
Paraly

டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்தியா 19 பதக்கங்கள் வெற்றிருந்த நிலையில் பாரிஸ் பாராலிம்பிக்ஸில் இந்தியா 20 பதக்கங்களை கடந்து சாதனை படைத்துள்ளது. 

Advertisment

புதன்கிழமை தடகளப் பிரிவில் 4 பதக்கங்கள் வென்ற நிலையில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.

இந்த 20 பதக்கங்களில் இந்தியா 3 தங்கம், 7 வெள்ளி மற்றும் 10 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. இந்த 20 பதக்கங்களில் பாதி பாரா தடகளத்தில் இருந்து வந்தது, அதே நேரத்தில் பாரா பேட்மிண்டனில் இந்தியா ஐந்து பதக்கங்களைப் பெற்றது. துப்பாக்கி சுடுதல் நான்கு, வில்வித்ததில் ஒன்று எனப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.

புதன்கிழமை, ஆண்களுக்கான ஈட்டி எறிதல் F46 இறுதிப் போட்டியில், இந்தியா இரண்டு பதக்கங்களைப் பெற்றது, அஜீத் சிங் 65.62 மீட்டர் ஈட்டி எறிந்து அஜீத் சிங் வெள்ளிப் பதக்கமும், அதே நேரத்தில் சுந்தர் சிங் குர்ஜார் 64.96 மீட்டர் எறிந்து வெண்கலப் பதக்கமும் பெற்றார்.

ஆங்கிலத்தில் படிக்க:  India make history at Paris Paralympics with 20 medals as they go past Tokyo 2020’s medals haul

பின்னர், ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் T63 இறுதிப் போட்டியில், இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள் கிடைத்தது. ஷரத் குமார் (டி42) 1.88 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். அதே பிரிவில் களமிறங்கிய தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு (டி42) 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலம் வென்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment