/indian-express-tamil/media/media_files/2025/05/24/z7naIFp6C7EqhNJQzqqe.jpg)
இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. அப்படி அவர் தேர்வாகும் பட்சத்தில், இந்திய டெஸ்ட் அணியின் 37-வது கேப்டனாக அறியப்படுவார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்த தொடருக்கான தொடக்கப் போட்டி வருகிற ஜூன் 20 முதல் ஹெடிங்லி லீட்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கு முன்னதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India men’s Test captains full list: Will Shubman Gill become 37th long-format skipper?
இதனால், இங்கிலாந்து தொடரில் அவர்களுக்கு பதிலாக யார் இறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அத்துடன் புதிய டெஸ்ட் கேப்டனையும் நியமிக்க வேண்டி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு இன்று சனிக்கிழமை வெளியாகும் எனத் தெரிகிறது. இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்படலாம் என்று தெரிகிறது. அப்படி அவர் தேர்வாகும் பட்சத்தில், இந்திய டெஸ்ட் அணியின் 37-வது கேப்டனாக அறியப்படுவார்.
இந்நிலையில், இதற்கு முன்னதாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த 36 வீரர்கள் குறித்துப் பார்க்கலாம். அவ்வகையில், கடந்த 1932 ஆம் ஆண்டு முதல் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இந்தியா பங்கேற்று வரும் சூழலில், இதுவரை 589 போட்டிகளில் ஆடியிருக்கிறது. 1932 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சி.கே. நாயுடு இந்தியாவை வழிநடத்தினார்.
இருப்பினும், 20 ஆண்டுகளுக்குப் பிறகுதான், பிப்ரவரி 10, 1952 அன்று சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விஜய் ஹசாரே தலைமையில் இந்தியா முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற்றது. இந்தியாவின் முதல் வெளிநாட்டு டெஸ்ட் தொடர் வெற்றி 1967-68 சீசனில் மன்சூர் அலி கான் பட்டோடியின் தலைமையில் கிடைத்தது. அவர் இந்திய அணியை 40 டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்தி ஒன்பது ஆட்டங்களில் வென்றார்.
முகமது அசாருதீன், சவுரவ் கங்குலி, எம்.எஸ். தோனி, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய ஐந்து இந்திய கேப்டன்கள் மட்டுமே குறைந்தது 10 டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றுள்ளனர். கோலி இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாகத் தொடர்கிறார். அவர் தலைமை தாங்கிய 68 டெஸ்ட் போட்டிகளில் 40 வெற்றிகளை 58.82 வெற்றி விகிதத்துடன் இந்தியா பெற்றுள்ளது. 2008-14 க்கு இடையில் 60 ஆட்டங்களில் தலைமை வகித்த தோனி, 27 ஆட்டங்களில் வெற்றி பெற்று நாட்டின் இரண்டாவது வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக உள்ளார்.
இந்திய அணியை வழிநடத்திய இளம் கேப்டனாக சச்சின் டெண்டுல்கர் இருக்கிறார். 1996 ஆம் ஆண்டு டெல்லியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கேப்டனாக செயல்படத் தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 23.
இந்திய ஆடவர் டெஸ்ட் அணி கேப்டன்களின் முழு பட்டியல் பின்வருமாறு:-
எண். | கேப்டன் | விளையாடியது | வெற்றி | தோல்வி | டிரா/டை | வெற்றி % |
1 | சி.கே. நாயுடு | 4 | 0 | 3 | 3 | 0 |
2 | மகாராஜ்குமார் ஆஃப் விஜயநகரம் | 3 | 0 | 2 | 1 | 0 |
3 | இப்திகார் அலி கான் பட்டோடி | 3 | 0 | 1 | 2 | 0 |
4 | லாலா அமர்நாத் | 15 | 2 | 6 | 7 | 13.33 |
5 | விஜய் ஹசாரே | 14 | 1 | 5 | 8 | 7.14 |
6 | வினூ மன்கட் | 6 | 0 | 1 | 5 | 0 |
7 | குலாம் அகமது | 3 | 0 | 2 | 1 | 0 |
8 | பாலி உம்ரிகர் | 8 | 2 | 2 | 4 | 25 |
9 | ஹேமு அதிகாரி | 1 | 0 | 0 | 1 | 0 |
10 | தத்தா கெய்க்வாட் | 4 | 0 | 4 | 0 | 0 |
11 | பங்கஜ் ராய் | 1 | 0 | 1 | 0 | 0 |
12 | குல்பராய் ராம்சந்த் | 5 | 1 | 2 | 2 | 20 |
13 | நாரி காண்ட்ராக்டர் | 12 | 2 | 2 | 8 | 16.67 |
14 | மன்சூர் அலி கான் பட்டோடி | 40 | 9 | 19 | 12 | 22.5 |
15 | சந்து போர்டே | 1 | 0 | 1 | 0 | 0 |
16 | அஜித் வடேகர் | 16 | 4 | 4 | 8 | 25 |
17 | ஸ்ரீனிவாசராகவன் வேங்கடராகவன் | 5 | 0 | 2 | 3 | 0 |
18 | சுனில் கவாஸ்கர் | 47 | 9 | 8 | 30 | 19.14 |
19 | பிஷன் சிங் பேடி | 22 | 6 | 11 | 5 | 27.27 |
20 | குண்டப்பா விஸ்வநாத் | 2 | 0 | 1 | 1 | 0 |
21 | கபில் தேவ் | 34 | 4 | 7 | 23 | 11.76 |
22 | திலீப் வெங்சர்க்கார் | 10 | 2 | 5 | 3 | 20 |
23 | ரவி சாஸ்திரி | 1 | 1 | 0 | 0 | 100 |
24 | கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் | 4 | 0 | 0 | 4 | 0 |
25 | முகமது அசாருதீன் | 47 | 14 | 14 | 19 | 29.79 |
26 | சச்சின் டெண்டுல்கர் | 25 | 4 | 9 | 12 | 16 |
27 | சவுரவ் கங்குலி | 49 | 21 | 13 | 15 | 42.86 |
28 | ராகுல் டிராவிட் | 25 | 8 | 6 | 11 | 32 |
29 | வீரேந்தர் சேவாக் | 4 | 2 | 1 | 1 | 50 |
30 | அனில் கும்ப்ளே | 14 | 3 | 5 | 6 | 21.42 |
31 | மகேந்திர சிங் தோனி | 60 | 27 | 18 | 15 | 45 |
32 | விராட் கோலி | 68 | 40 | 17 | 11 | 58.82 |
33 | அஜிங்க்யா ரஹானே | 6 | 4 | 0 | 2 | 66.67 |
34 | கே.எல். ராகுல் | 3 | 2 | 1 | 0 | 66.67 |
35 | ரோகித் சர்மா | 24 | 12 | 9 | 3 | 50 |
36 | ஜஸ்பிரித் பும்ரா | 3 | 2 | 0 | 33.33 |
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.