World Cup 2023 Tamil News: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்காக நாட்டின் 12 நகரங்களில் மைதானங்கள் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த தொடருக்கான தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் அக்டோபர் 8 ஆம் தேதி அன்று சந்திக்கிறது.
கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் அக்டோபர் 14ம் தேதி சனிக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 15ம் தேதி நவராத்திரி கொண்டாட்டத்தின் முதல் நாள் என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டியின் தேதி மாற்றப்பட உள்ளது.
இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பேசுகையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அட்டவணையை சில நாடுகள் விளையாட்டின் சர்வதேச நிர்வாகக் குழுவிற்கு கடிதம் எழுதிய பிறகு அதைத் திருத்தலாம் என்று கூறினார். திருத்தப்பட்ட அட்டவணையில் போட்டிகள் நடைபெறும் இடங்கள் அப்படியே இருக்கும். ஆனால் ஆட்டங்களுக்கு இடையிலான இடைவெளிகள், அதாவது தேதிகள் சரிசெய்யப்படும் என்று அவர் கூறியிருந்தார்.
உலகக் கோப்பை அரை இறுதிக்கு எந்தெந்த அணிக்கு வாய்ப்பு?
இந்தியாவில் உலகக் கோப்பை தொடர் தொடங்க சரியாக இரண்டு மாதங்கள் உள்ள நிலையில், போட்டி தொடர்பாக ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் தங்களது கணிப்புகளையும் கருத்துகளையும் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். அவ்வகையில், உலகக் கோப்பை அரை இறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் குறித்து பிரபல வீரர்கள் தங்களின் கணிப்புகளை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் பேசுகையில், இந்தியா அதன் சொந்த மண்ணில் விளையாடுவதால் கூடுதல் சாதமாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார். "அரை இறுதிக்கு முன்னேறும் 4 அணிகளில் ஆஸ்திரேலியாவும் இடம் பிடிக்கும் என நான் கூறுவதில் ஆச்சரியமில்லை. வெளிப்படையாக கூறவேண்டும் என்றால், இந்தியா தனது சொந்த மண்ணில் விளையாடுகிறது. அதேவேளையில், இங்கிலாந்து சிறப்பான கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. இதேபோல் பாகிஸ்தானும் சிறப்பாக விளையாடி வருகிறது. எனவே, இந்த அணிகள் சிறந்த நான்கு 4 அணிகளாக இருக்கும்,” என்று அவர் கூறினார்.
மெக்ராத்தின் கணிப்பை பிரதிபலித்துள்ள உலகக் கோப்பை வென்ற இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயோன் மோர்கனின், ஆஸ்திரேலியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் சந்தித்தால், இங்கிலாந்தும் இந்தியாவும் தனக்கு அதிகம் விருப்பமான அணிகள் தெரிவித்துள்ளார். “போட்டி முடிவுக்கு வரும்போது, இங்கிலாந்து இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை, இந்தியாவும் இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. மேலும் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக நான் பார்க்கக்கூடிய மற்ற அணிகள் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆகும். இரண்டும் மிக வலுவான அணிகள் மற்றும் பெரிய போட்டிகளுக்கு வரும்போது இரண்டு அணிகளும் போட்டியாளர்களாக இருப்பார்கள்" என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.