Asian-games 2023: 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த போட்டி தொடரின் 14-வது நாளான இன்று பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் இந்தியா பதக்கங்களை அள்ளி வருகிறது.
இந்த ஆசிய விளையாட்டு போட்டியின் போது இந்தியா கடந்த 2018ல் வென்ற 70 பதக்கம் சாதனையை முறியடித்தது. இந்த நிலையில், ஆசிய விளையாட்டு போட்டி வரலாற்றில் முதல் முறையாக இந்தியா 100 பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்துள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/6a18a8c5-f74.jpg)
இன்று காலை நடந்த கபடி பெண்கள் இறுதிப் போட்டியில் இந்தியா - சீன தைபே மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்தப் போட்டியில் 26-25 புள்ளி கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தி இந்தியா தங்கப்பதக்கம் வென்றது. இதன் மூலம் ஆசிய விளையாட்டு தொடரில் இந்தியாவுக்கு 100வது பதக்கம் கிடைத்துள்ளது.
ஆசிய விளையாட்டு தொடரில் இந்தியா இதுவரை 25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தம் 100 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.
இன்று காலை நடந்த வில்வித்தை காம்பவுண்ட் பெண்கள் தனிநபர் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா - இந்தோனேசியா மோதின.146-140 என்ற புள்ளி கணக்கில் இந்தோனேசிய வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை அதிதி கோபிசந்த் சுவாமி அபார வெற்றிபெற்றார். இந்த வெற்றியின் மூலம் அதிதி கோபிசந்த் சுவாமி அபார வெற்றிபெற்றார். இந்த வெற்றியின் மூலம் அதிதி வெண்கலப்பதக்கம் வென்றார்.
வில்வித்தை காம்பவுண்ட் பெண்கள் தனிநபர் இறுதிப்போட்டியில் இந்தியா - தென்கொரியா மோதின. இதில் 149-145 என்ற புள்ளி கணக்கில் தென்கொரிய வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை ஜோதி சூரிகா தங்கப்பதக்கம் வென்றார்.
வில்வித்தை காம்பவுண்ட் ஆண்கள் தனிநபர் இறுதிப்போட்டியில் இந்திய வீரர்களான அபிஷேக் வர்மா - ஓஜஸ் பிரவீன் மோதினர். இதில் 149-147 என்ற புள்ளி கணக்கில் அபிஷேக் வர்மாவை வீழ்த்தி ஓஜஸ் பிரவீன் தங்கப்பதக்கம் வென்றார். தோல்வியடைந்த அபிஷேக் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதன் மூலம் வில்வித்தை காம்பவுண்ட் ஆண்கள் தனிநபர் பிரிவில் இந்திவுக்கு இரண்டு பதக்கம் கிடைத்தது (தங்கம், வெள்ளிப்பதக்கம்).
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“