ஆஸி.,-யை புரட்டி எடுத்த ரஹானே அண்ட் கோ... தர்மசாலாவில் இந்தியாவின் செயல்பாடு எப்படி?
இமாச்சல் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் இந்திய அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் தான் விளையாடியுள்ளது. அதும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2017 ஆம் ஆண்டில் மோதியது.
இமாச்சல் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் இந்திய அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் தான் விளையாடியுள்ளது. அதும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2017 ஆம் ஆண்டில் மோதியது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெறும் தர்மசாலா மைதானத்தில் இந்தியாவின் செல்யபாடுகள்
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00
India vs England, 5th Test, Dharamsala: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில், 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது.
Advertisment
இந்த நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சல் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நாளை வியாழக்கிழமை (7 ஆம் தேதி) முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இதனையொட்டி, இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் அசாத்தியமான முன்னிலை பெற்றுள்ள நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைக்க, மற்றொரு வெற்றியுடன் தொடரை முடிக்க குறி வைக்கும். இந்தியா 8 போட்டிகளில் ஐந்து வெற்றிகளுடன், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை விட முன்னிலை பெற்று, 64.58 சதவீத புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில் இங்கிலாந்து எட்டாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெறும் தர்மசாலா மைதானத்தில் இந்தியாவின் செல்யபாடுகள் குறித்து பார்க்கலாம்.
தர்மசாலாவில் இந்திய அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் தான் விளையாடியுள்ளது. அதும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2017 ஆம் ஆண்டில் மோதியது. இங்கு கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா மோதவிருந்த நிலையில், மழை காரணமாகவும், அவுட்ஃபீல்ட் தயாராக இல்லாததாலும், போட்டி கடைசி நேரத்தில் இந்தூருக்கு மாற்றப்பட்டது.
டெஸ்ட் போட்டியைத் தவிர, இந்தியா இந்த மைதானத்தில் மூன்று டி20 (இரண்டு வெற்றி, ஒரு தோல்வி) மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் (மூன்று வெற்றி, இரண்டு தோல்வி) விளையாடியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கிய ஒருநாள் உலகக் கோப்பையின் போது நியூசிலாந்திற்கு எதிராக இந்தியாவின் கடைசி சர்வதேச ஒருநாள் போட்டி இங்கு தான் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா vs ஆஸ்திரேலியா தர்மசாலா டெஸ்ட்: 2017 போட்டியில் வென்றது யார்?
மிகவும் பரபரப்பாக நடந்த 4 போட்டிகள் டெஸ்ட் தொடரில், புனேவில் நடந்த முதல் போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்தது. அதற்கு பெங்களுருவில் நடந்த 2வது டெஸ்டில் 75 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்தியா பதிலடி கொடுத்தது. இதன்பிறகு காற்று இந்தியா பக்கம் தான் வீசும் என எதிர்பார்க்கையில், ராஞ்சியில் நடந்த 3வது டெஸ்ட் டிரா ஆகியது.
இதனால், தர்மசாலாவில் நடைபெற இருந்த 4வது டெஸ்ட் போட்டிக்கு முன், தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. அப்போதைய கேப்டன் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினார். இது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்த இக்கட்டான சூழலில், அஜிங்க்யா ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டார். கேப்டனாக அவருக்கு அதுவே முதல் டெஸ்ட்.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்யத் தேர்வு செய்த நிலையில், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தனது மூன்றாவது சதம் அடித்து மிரட்டினார். இந்தியாவின் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலியா 300 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு, ரவீந்திர ஜடேஜா, கே.எல். ராகுல் மற்றும் சேட்டேஷ்வர் புஜாரா ஆகியோரின் அரைசதங்கள் இந்தியா 32 ரன்கள் முன்னிலை பெற உதவியது. நாதன் லயன் 5 விக்கெட்டை வீழ்த்தினார்.
இதன்பிறகு நடந்த 2வது இன்னிங்சில் உமேஷ் யாதவ், ஆர். அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்த, ஆஸ்திரேலியா 137 ரன்களுக்குச் சுருண்டது. இதனையடுத்து, வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணியில் கேப்டன் ரஹானே மற்றும் கே.எல். அரை சதம் விளாசி அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெல்லவும், தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றவும் உதவினர்.
இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ரெஹான் அகமது, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோ, ஷோயிப் பஷீர், ஜாக் கிராலி, பென் டக்கெட், பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), டான் லாரன்ஸ், டாம் ஹார்ட்லி, ஜாக் லீச், ஆலி போப், ஆலி ராபின்சன் ஜோ ரூட், மார்க் வூட்.