Advertisment

T20 World Cup: சஞ்சு உள்ளே, கே.எல் ராகுல் வெளியே; துணை கேப்டனாக ஹர்திக்: இந்திய அணி அறிவிப்பு

'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஏற்கனவே குறிப்பிட்டபடி, முன்னணி வீரரான கே.எல் ராகுல் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு, அவரது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
India squad for T20 World Cup in Tamil

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை ரோகித் சர்மா வழிநடத்துகிறார். அவருடன் அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Indian Cricket Team | T20 World Cup 2024: 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ள 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1 ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அறிவித்துள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: India squad for T20 World Cup

இந்நிலையில், இந்த தொடரில் பங்கேற்க உள்ள 15 வீரர்கள் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) அறிவித்துள்ளது. இந்த தொடருக்கான அணியை ரோகித் சர்மா வழிநடத்துகிறார். அவருடன் அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஏற்கனவே குறிப்பிட்டபடி, முன்னணி வீரரான கே.எல் ராகுல் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு, அவரது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இரண்டாவது விக்கெட் கீப்பருக்கான போரில், சஞ்சு சாம்சன் கே.எல் ராகுலை வீழ்த்தினார், அதே நேரத்தில் ரிஷப் பண்ட் கிட்டத்தட்ட பதினைந்து மாதங்களுக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். விக்கெட் கீப்பர்-பேட்டரான அவர் 2022 டிசம்பரில் பயங்கரமான கார் விபத்தில் சிக்கியதால் கிரிக்கெட்டிலிருந்து விலகினார். 

சஞ்சு சாம்சன் இந்த ஐ.பி.எல்-லில் 161.09 ஸ்ட்ரைக் ரேட்டில் இதுவரை 385 ரன்கள் குவித்துள்ளார். அவர் டி20 பேட்ஸ்மேனாக மாற்றப்பட்டுள்ளார். கடந்த காலங்களில் அவர் தனது பேட்டிங்கில் மிகவும் சீரானவராக இருந்தார் மற்றும் பவர்-ஹிட்டர்கள் இல்லாத ஒரு அணியில், சஞ்சு சாம்சனின் இருப்பு மிடில்-ஆர்டரில் இந்தியாவுக்கு மிகவும் பயனளிக்கும்.

மேலும், சஞ்சு சாம்சன் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறார். டி20 -களில் சுழற்பந்து வீச்சாளர்களை வெளுத்து வாங்குவதில் சிறந்தவராகவும் அவர் இருக்கிறார். பேட்டிங் வரிசையில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் களமாடி விளாசுபவராகவும் இருக்கிறார். 

ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தற்போதைய ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு, அவரது மோசமான ஃபார்ம் இருந்தபோதிலும் துணைக் கேப்டனாகத் தக்கவைக்கப்பட்டுள்ளார். 

இருப்பினும், குஜராத் டைட்டன்ஸ் கேப்டனாக ஐ.பி.எல்-லில் நல்ல ரன் இல்லாத சுப்மன் கில், கொல்கத்தா நைட் ரைடர்ஸின் பெரிய ஹிட்டர் ரிங்கு சிங்குடன் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: சஞ்சு, கில்-லுக்கு இடம் இல்லை: இந்திய டி20 உலகக் கோப்பை அணி தேர்வு எப்படி இருக்கும்?

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அதன் தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியானது வருகிற ஜூன் 5 ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.  அதைத் தொடர்ந்து, கிரிக்கெட் ரசிர்கள் பெரிதும் எதிர்பார்க்கும், கிரிக்கெட்டின் பரம போட்டியாளர்களான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஜூன் 09 ஆம் தேதி அதே மைதானத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து, ஜூன் 12 மற்றும் 15-ம் தேதிகளில் முறையே அமெரிக்கா மற்றும் கனடாவுடன் இந்தியா விளையாடுகிறது. 

டி20 உலகக்கோப்பை: இந்திய அணி 

ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

ரிசர்வ் வீரர்கள்: சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது மற்றும் அவேஷ் கான்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Indian Cricket Team T20 World Cup 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment