கடுப்பேத்துறவங்களிடம் கம்முன்னு இருக்க ஜம்முன்னு வெளிநாடு பறந்தார் நடிகர் விஜய்!

வெளிநாட்டில் ஓய்வு எடுத்துவிட்டு இம்மாத இறுதியில் சென்னை திரும்புவார்

vijay airport photos and videos : நடிகர் விஜய் வெளிநாடு பறந்த செய்தி தான் இன்று டாக் ஆஃப் டவுண். பிகில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியதற்கு அரசியல் தலைவர்களிடம் இருந்து பதிலும் விமர்சனமும் வந்துக் கொண்டிருக்கும் நிலையில் தளபதி விஜய் ஜம்முன்னு விடுமுறையை கழிக்க வெளிநாடு சென்றார். விஜய் விமான நிலையத்திற்கு வந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

இரண்டு தினங்களுக்கு முன்பு தான் பிகில் ஆடியோ லாண்ட்ச் விழா பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. விழாவில் விஜய் என்ன பேசுவார்? என்பது என்பது அன்றைய தினம் ஒட்டு மொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. காரணம், சமீப காலமாக விஜய் பேசும் மேடை பேச்சுகள் மிகப் பெரிய கவனத்தை பெற்று வருவது தான். சொல்லி அடித்தப்படியே பேனர் விவகாரம், சுபஸ்ரீ மரணம் குறித்து பேசினார்.

அன்றைய தினமே, சமூகவலைத்தளங்களில் இந்த கருத்துக்கள் ட்ரெண்டாகின. குறிப்பாக அரசியல் கட்சிகளை சாடும் வகையில் விஜய் பேச்சு இருந்ததாகவும் விமர்சனங்கள் எதிரொலித்தன. இதற்கு பதில்களும் வந்துக் கொண்டிருக்கும் வேளையில் வெளிநாடு பறந்து சென்றார் விஜய்.

சர்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது அனைவருக்கும் ஞாபகம் இருக்கும். உசுப்பேத்துறவங்களிடம் உம்முன்னும், கடுப்பேத்துறவங்களிடம் கம்முன்னும் இருந்தால், வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்’ இதைத்தான் இப்போது விஜய் செய்துள்ளார். தன்னை கடுப்பேத்துறவங்களுக்கு எந்தவித பதிலும் தராமல் ஜம்முன்னு விடுமுறையை கழிக்க வெளிநாடு புறப்பட்டார். விஜய் இன்னும் சில நாட்கள் வெளிநாட்டில் ஓய்வு எடுத்துவிட்டு இம்மாத இறுதியில் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் முதல் வாரம் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

Web Title:

Actor vijay bigil audio launch vijay airport photos and videos

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close