ஜூலை 6-ம் தேதி தொடங்க உள்ள ஜிம்பாப்வே தொடருக்கான அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) திங்கள்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிவித்தபடி, இந்திய அணிக்கு ஷுப்மான் கில் கேப்டனாக இருப்பார், தற்போது டி20 உலகக் கோப்பையில் விளையாடி வரும் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா மற்றும் ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ரியான் பராக், நிதீஷ் குமார் ரெட்டி, துஷார் தேஷ்பாண்டே, கலீல் அகமது ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். டி20 உலகக் கோப்பையின் போது பெஞ்சில் இருந்து வரும் சஞ்சு. சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிங்கு சிங் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணிக்கு ரிசர்வ் வீரராக அமெரிக்காவிற்குச் சென்ற ஷூப்மான் கில், டி20 உலகக் கோப்பை ஆட்டங்களில் எதிலும் இடம்பெற வாய்ப்பில்லாததால், அணி நிர்வாகம் அவர்களுக்கு ஓய்வு கொடுக்க விரும்பியதால், வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கானுடன் இந்தியா திரும்பினார்.
🚨 NEWS
— BCCI (@BCCI) June 24, 2024
India’s squad for tour of Zimbabwe announced.#TeamIndia | #ZIMvIND
23 வயதான அபிஷேக் ஷர்மா இந்திய அணிக்கு தேர்வானது இதுவே முதல் முறையாகும். பஞ்சாப் பேட்ஸ்மேனான அபிஷேக் ஷர்மா இந்த ஐ.பி.எல்.,லில் 484 ரன்கள் எடுத்திருந்தார், மேலும் டிராவிஸ் ஹெட் உடன் இணைந்து ஐ.பி.எல்.,லில் சன்ரைசர்ஸ் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரியான் பராக் ஐ.பி.எல் சீசனில் 573 ரன்கள் குவித்துள்ளார். தேர்வாளர்கள் மற்றொரு மீடியம் ஃபாஸ்ட் பவுலரை ஆல்ரவுண்டராக சோதிக்க விரும்பினர், எனவே சன்ரைசர்ஸ் அணியின் நிதிஷ் ரெட்டியைத் தேர்ந்தெடுத்தனர். நிதிஷ் ரெட்டி பி.சி.சி.ஐ.,யின் வளர்ந்து வரும் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை வென்றார். மும்பையின் வேகப்பந்து வீச்சாளர் தேஷ்பாண்டே, நல்ல உள்நாட்டு சீசனைக் கொண்டிருந்தார், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நம்பகமான பந்துவீச்சாளராக இருந்தார்.
இந்தியாவின் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் ஜூலை 6-ம் தேதி முதல் T20I போட்டியுடன் தொடங்கும், அதைத் தொடர்ந்து ஜூலை 7-ம் தேதி 2-வது போட்டி. 3-வது போட்டி ஜூலை 10-ம் தேதியும், 4-வது போட்டி ஜூலை 13-ம் தேதியும். தொடரின் இறுதி மற்றும் 5-வது போட்டி ஜூலை 14 தேதி நடைபெறும். அனைத்து போட்டிகளும் ஹராரேயில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெறும்.
ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி: ஷூப்மான் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரின்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், அவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.