இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில், பெங்களூருவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து புனேவில் நடந்த 2வது போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது. தற்போது தொடரில் 2-0 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் வருகிற வெள்ளிக்கிழமை (நவம்பர் 01) முதல் தொடங்கி நடைபெறவுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India summon 35 net bowlers, most of them spinners, ahead of third Test vs New Zealand
இந்த நிலையில், இந்தப் போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, இந்திய அணி நிர்வாகம் நேற்று புதன்கிழமை 35 சுழற்பந்து வீச்சாளர்களை உள்ளடக்கிய 35 நெட் பவுலர்களை வரவழைத்துள்ளது. இந்தியாவின் பயிற்சி அமர்வின் போதுநெட் பந்துவீச்சாளர்களை அனுமதிக்குமாறு அணி நிர்வாகம் மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் (எம்.சி.ஏ) கோரியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் புரிந்துகொள்கிறது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே தொடரை இழந்துள்ள நிலையில், ஒயிட்வாஷைத் தவிர்க்கத் தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 3வது போட்டிக்கு சுழலுக்கு உதவக்கூடிய டர்னர் என்று குறிப்பிடக்கூடிய ஆடுகளத்தை இந்திய அணி நிர்வாகம் கோரியுள்ளது. டெஸ்ட் போட்டிக்கு முன் எந்த விருப்பமான பயிற்சியும் இருக்காது என்றும், இது அனைவருக்கும் கட்டாயம் என்றும் அணி நிர்வாகம் அனைத்து வீரர்களுக்கும் முன்பே தெரிவித்திருக்கிறது.
இரண்டாவது டெஸ்டில் நியூசிலாந்தின் மிட்செல் சான்ட்னர் தொடர்ந்து இந்திய பேட்ஸ்மேன்களை தொந்தரவு செய்ததால், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி, கூடுதல் நெட் பவுலர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கடைசி நிமிட கோரிக்கை எழுந்ததாகவும் தெரிகிறது. புனேவில், இடது கை சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னர் மேட்ச்-வின்னிங் செயல்திறனை வெளிப்படுத்தினார். அவர் 157 ரன்கள் விட்டுக்குக் கொடுத்து 13 விக்கெட் வீழ்த்தினார்.
வான்கடே மைதானம் பாரம்பரியமாக சுழற்பந்து வீச்சாளர்களின் சொர்க்க பூமியாக இருந்து வருகிறது. குறிப்பாக இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் பவுலிங் போட அதிகம் விரும்பும் மைதானமாக இது இருந்து வருகிறது. இங்கு ஐந்து ஆட்டங்களில், ரவிச்சந்திரன் அஸ்வின் 18.42 சராசரியில் 38 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இது இந்த மைதானத்தில் எந்தவொரு பந்துவீச்சாளரின் அதிகபட்ச எண்ணிக்கையாகும். இங்கு விளையாடிய ஒரே ஆட்டத்தில் ரவீந்திர ஜடேஜாவும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
நேற்று செவ்வாய்க்கிழமை, ஆட்டத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, ஆடுகளம் வெறுமையாகவும், புல் இல்லாமலும் காணப்பட்டது, மைதான ஊழியர்கள் வழக்கமாக தண்ணீர் ஊற்றி, வெயிலில் உலர நீண்ட நேரம் திறந்து வைத்தனர். இது ஸ்பின்னர்களுக்கு சறுக்கலை எளிதாக்குகிறது. சீமர்கள் சில மூவ்மண்ட்களைப் பெறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“