ரோகித் சர்மாவின் காயம் குறித்து நிச்சயமற்ற தன்மையும், தெளிவின்மையும் உள்ளது. அதிக குழப்பமானதாக ஆகிவிட்டது என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது. இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,”அதிக குழப்பமானதாக ஆகிவிட்டது. மேலும் ரோகித் சர்மாவின் காயம் குறித்து நிச்சயமற்ற தன்மையும், தெளிவின்மையும் உள்ளது ” என்று தெரிவித்தார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த கோலி, “இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற தேர்வுக் குழு கூட்டத்திடம் ரோகித் சர்மா ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தில் கலந்து கொள்ள மாட்டார் எனக் கூறப்பட்டது” என்று கூறினார்.
“ஐ.பி.எல் போட்டிகளில் ஏற்பட்ட காயங்களால் அவர் ஆஸ்த்ரேலியா சுற்றுப் பயணத்தில் கலந்து கொள்ள வில்லை என்று இந்திய தேர்வுக் குழுவுக்கு மின்னஞ்சல் வந்தது. ஆனால், அதன் பிறகு ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொண்டார். எனவே, ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்திற்கு எங்களுடன் ஒன்றாக விமானத்தில் பயணிப்பார் என்று அனைவரும் நினைத்திருந்தோம். அவர் ஏன் எங்களுடன் பயணம் செய்யவில்லை என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. தெளிவின்மை தான் உள்ளது,”என்று கோலி தெரிவித்தார்.
சிட்னியில் பகல் இரவு ஆட்டமாக நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி காலை மணி 9.10க்கு தொடங்குகிறது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டுவென்டி டுவென்டி போட்டிகளிலும், நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்க உள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook
Web Title:India tour of australia virat kohli coments about rohit sharma injury
வருமான வரி சோதனை : பால் தினகரன் வீடுகளில் தங்கம் மற்றும் 120 கோடி பறிமுதல்
என் பெயரை மிஸ் யூஸ் பண்றாங்க: வீடியோவில் வருத்தப்பட்ட விஜய் டிவி நடிகை
கட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்
10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி
சென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதி