ஜிம்பாப்வே மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. வருகிற 6 ஆம் தேதி முதல் தொடங்கும் இந்த தொடருக்கான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணியை சுப்மன் கில் வழிநடத்துகிறார். யஷஸ்வி ஜெய்வால், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரிங்கு சிங், அவேஷ் கான் உள்ளிட்ட முன்னணி வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்த தொடரின் முதல் இரு போட்டிகளுக்கான இந்திய அணியில் சாய் சுதர்சன், ஜித்தேஷ் சர்மா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. டி-20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த யஷஸ்வி ஜெய்வால், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே ஆகியோர் ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரிலும் இடம் பெற்றுள்ளனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India tour of Zimbabwe: Sudharsan, Jitesh and Harshit replace Samson, Dube and Jaiswal for the first two T20Is
ஆனால், டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி தாயகம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரின் முதல் இரு போட்டிகளுக்கு யஷஸ்வி ஜெய்வால், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே ஆகியோருக்கு பதிலாக சாய் சுதர்சன், ஜித்தேஷ் சர்மா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஐ.பி.எல் நட்சத்திரங்களான அபிஷேக் சர்மா, துருவ் ஜூரல், ரியான் பராக் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகிய வீரர்கள் இந்த தொடரில் இந்திய அணிக்காக முதன்முதலில் இடம் பிடித்துள்ளனர். முதலில் அணியில் இடம்பிடித்த ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக சிவம் துபேவை பி.சி.சி.ஐ சேர்த்தது.
ராகுல் டிராவிட் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய நிலையில், வி.வி.எஸ் லக்ஷ்மண் இடைக்கால பயிற்சியாளராக இந்திய அணியுடன் ஜிம்பாப்வேக்குச் செல்கிறார். தொடரின் அனைத்து போட்டிகளும் ஜிம்பாப்வேயின் ஹராரேயில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெற உள்ளது.
ஜிம்பாப்வேக்கு எதிரான 1வது மற்றும் 2வது டி20 போட்டிக்கான இந்திய அணி:
சுப்மன் கில் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரின்கு சிங், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், கலீல் அகமது, கலீல் அகமது, தேஷ்பாண்டே, சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் ராணா
ஜிம்பாப்வே அணி: சிக்கந்தர் ராசா (கேப்டன்), ஃபராஸ் அக்ரம், பிரையன் பென்னட், ஜொனாதன் காம்ப்பெல், டெண்டாய் சதாரா, லூக் ஜாங்வே, இன்னசென்ட் கையா, கிளைவ் மடாண்டே, வெஸ்லி மாதேவெரே, தடிவானாஷே மருமானி, வெலிங்டன் மசகட்சா, பிராண்டன் டி நௌம்சரப், பிராண்டன் மைக்சரப், ரிச்சர்ட் ங்கராவா, மில்டன் ஷும்பா.
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே டி20 போட்டிகளின் அட்டவணை பின்னவருமாறு:-
முதல் டி20 - ஜூலை 6 சனிக்கிழமை
2வது டி20 - ஜூலை 7 ஞாயிறு
3வது டி20 - புதன், ஜூலை 10
4வது டி20 - ஜூலை 13 சனிக்கிழமை
5வது டி20 – ஜூலை 14 ஞாயிற்றுக்கிழமை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“