நாடு திரும்பிய இந்திய U-19 அணி! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு (வீடியோ)

இன்று இந்திய U-19 அணி நாடு திரும்பியது. மும்பை விமான நிலையத்தில் அவர்கள் வந்து இறங்கிய போது, ரசிகர்கள் வரவேற்பு

இன்று இந்திய U-19 அணி நாடு திரும்பியது. மும்பை விமான நிலையத்தில் அவர்கள் வந்து இறங்கிய போது, ரசிகர்கள் வரவேற்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நாடு திரும்பிய இந்திய U-19 அணி! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு (வீடியோ)

நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில், இந்தியா அணி ஆஸ்திரேலியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று நான்காவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது.

Advertisment

U-19 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் இப்போட்டிக்கு முன்பு வரை இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மட்டுமே அதிகபட்சமாக தலா மூன்று முறை கோப்பையை வென்றிருந்தன. தற்போது 4-வது முறையாக இந்தியா உலகக் கோப்பையை வென்று, U-19 பிரிவில் அதிக முறை உலகக் கோப்பை வென்ற முதல் அணி என்ற புதிய சாதனையை படைத்தது. இதனால் இந்திய அணிக்கும், குறிப்பாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு பாராட்டுகள் குவிந்தது.

இந்த நிலையில், இன்று இந்திய U-19 அணி நாடு திரும்பியது. மும்பை விமான நிலையத்தில் அவர்கள் வந்து இறங்கிய போது, ரசிகர்கள் கூடி நின்று அவர்களுக்கு ஆர்ப்பரிக்கும் வரவேற்பை அளித்தனர். அந்த வீடியோ இதோ,

Advertisment
Advertisements

Rahul Dravid Prithvi Shaw

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: