ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தத் தொடரில் 8 அணிகள் களமாடிய நிலையில், அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் பாகிஸ்தான், இந்தியா (ஏ பிரிவு), இலங்கை, வங்கதேசம் (பி பிரிவு) ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.
முதல் அரையிறுதியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது வங்கதேசம். 2-வது அரையிறுதியில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் சாய்த்து இந்தியா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
19 வயதுக்குட்பட்டோருக்கான 11-வது ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இந்தியா மற்றும் பங்ளாதேஷ் அணிகள் இடையே துபாய் சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தியா - பங்ளாதேஷ் இடையிலான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, பங்ளாதேசஷ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜவாத் அப்ரார் மற்றும் கலாம் சித்திக் ஆலன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் கலாம் சித்திக் ஆலன் 1 ரன்னிலும், ஜவாத் அப்ரார் 20 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களம் இறங்கிய பங்ளாதேஷ் அணி பேட்டர்கள், இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பங்ளாதேஷ் வீரர்கள் எம்.டி அஜீசுல் ஹக்கீம் தமீம் 16 ரன், முகமது ஷிஹாப் ஜேம்ஸ் 40, எம்.டி ரிசான் ஹோசன் 47 ரன், தேபாசிஷ் சர்கார் தேபா 1 ரன், எம்.டி பரித் ஹசன் பைசல் 39 ரன், எம்.டி சாமியுன் பாசிர் ரதுல் 4 ரன், அல் பஹத் 1 ரன், இக்பால் ஹொசைன் எமன் 1 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
இறுதியில், பங்ளாதேஷ் அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 198 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில், யுதாஜித் குஹா, சேத்தன் சர்மா, ஹர்திக் ராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 199 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங்கிள் களமிறங்கியது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆயுஷ் மஹத்ரே, வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர். 2வது ஓவரில் பங்ளாதேஷ் வீரர், அல் பஹத் வீசிய பநணந்தில் ஆயுஷ் மஹத்ரே 1 ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். அடுத்து அந்த்ரே சித்தார்த் பேட்டிங் செய்ய வந்தார். 4.4 ஓவரில் வைபவ் சூர்ய வன்ஷி 9 ரன்னில் மருஃப் மிரிதா பந்தில் முஹமது ஷிஹாப் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இதையடுத்து, இந்திய அணியின் பேட்டர்கள், பங்களாதேஷ் அணியின் கச்சிதமான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல், நிதானமாக விளையாடினார்கள். அத்ரே சித்தார்த் 20 ரன்னிலும், கார்த்திகேயா கே.பி 21, நிகில் குமார் 0, ஹர்வன்ஷ் பங்கலியா 6, கிரண் கார்மேல் 1, முஹம்மது அமான் 36 ரன்னிலும், ஹர்திக் ராஜ் 24 ரன்னிலும் சேட்டன் ஷர்மா 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். யுதாஜித் குஹா 5 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி 35.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், பங்ளாதேஷ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஜூனியர் ஆசியக் கோப்பையை வென்றது.
பங்ளாதேஷ் அணியில் அஜிசுல் ஹகிம் தமிம், எம்டி இக்பால் ஹசன் இமான் தலா 3 விக்கெட்டுகளும் அல் ஃபஹத் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
நடப்பு சாம்பியனான இந்திய அணி 9-வது முறையாக ஜூனியர் ஆசிய கோப்பையை வசப்படுத்தும் நோக்கில் களமாடும். இந்த தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியைத் தவிர, மற்ற 2 லீக் போட்டி, அரையிறுதி என தொடர் வெற்றியை ருசித்தது. எனவே, இறுதிப் போட்டியையும் வெற்றியுடன் முடிக்க நினைத்தனர். ஆனால், பங்ளாதேஷ் அணி இந்திய அணியின் கணக்குகளை பொய்யாக்கி, கோப்பையை வென்றது.
இரு அணி வீரர்கள் பட்டியல்:
இந்திய யு19 அணி: ஆயுஷ் மத்ரே, வைபவ் சூர்யவன்ஷி, ஆண்ட்ரே சித்தார்த் சி, முகமது அமான் (கேப்டன்), கேபி கார்த்திகேயா, நிகில் குமார், ஹர்வன்ஷ் சிங் (விக்கெட் கீப்பர்), கிரண் சோர்மலே, ஹர்திக் ராஜ், சேத்தன் சர்மா, யுதாஜித் குஹா, அனுராக் கவாடே, சமர்த் நாகராஜ், முகமது எனான், பிரணவ் பந்த்.
வங்கதேச யு19 அணி: ஜவாத் அப்ரார், கலாம் சித்திகி அலீன், எம்டி அஜிசுல் ஹக்கிம் தமீம் (கேப்டன்), முகமது ஷிஹாப் ஜேம்ஸ், எம்டி ஃபரித் ஹசன் ஃபைசல் (விக்கெட் கீப்பர்), தேபாசிஷ் சர்க்கார் தேபா, எம்டி ரஃபி உஸ்ஸாமான் ரஃபி, எம்டி சமியுன் பாசிர் ரதுல், அல்ஃபஹ் மரிதா , இக்பால் ஹொசைன் எமன், எம்.டி ரிசான் ஹொசான், அஷ்ரஃபுஸ்ஸாமான் பொரென்னோ, எம்.டி.ரிபாத் பெக், சாத் இஸ்லாம் ரஸின்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.