Ind vs Ban U19 World Cup Final 2020: 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில், வரும் ஞாயிறன்று(பிப்.9) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியாவும், வங்கதேசமும் மோதுகின்றன.
ரவி வர்மா ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த 11 நடிகைகளும் நடனக் கலைஞர்களும்!
என்னது! வங்கதேசமா என்று ஜெர்க் ஆக வேண்டாம்.
முதன் முதலாக அண்டர் 19 உலகக் கோப்பைக்கு வங்கதேசம் இம்முறை முன்னேறி இருக்கிறது.
பாண்டிங் அணிக்கு நம்ம சச்சின் பயிற்சியாளர் – அட இது நல்லா இருக்கே! (வீடியோ)
நியூசிலாந்து அணியுடனான அரையிறுதிப் போட்டியில், 212 ரன்கள் இலக்கை துரத்தி வங்கதேசம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது.
பிரியம் கார்க் தலைமையிலான நடப்பு சாம்பியனான இந்தியா, ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று ஹெவியாக நம்பப்படுகிறது.
போட்டியின் அரையிறுதியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் பங்களாதேஷின் நம்பர் 3 பேட்ஸ்மேன் மஹ்முதுல் ஹசன் ஜாய் ஆகியோர் சதம் அடித்தனர். நட்சத்திர வீரர்களான ஜெய்ஸ்வால், லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய், திவ்யான்ஷ் சக்சேனா மற்றும் கார்த்திக் தியாகி ஆகியோர் இந்திய அணியின் கோப்பை கனவுக்கு வலிமையான காரணிகளாக உள்ளனர்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பங்களாதேஷின் டாப் ஆர்டருக்கு பெரும் சவாலாக அமையும். இந்தியாவைப் பற்றிய ஒரே கவலை என்னவென்றால், இந்தத் தொடரில் அவர்களின் மிடில் ஆர்டர் இதுவரை சோதனை செய்யப்படவில்லை. அதற்கான தேவையும் ஏற்படவில்லை. ஆகையால், இந்திய அணியின் தொடக்க விக்கெட்டுகளைக் கைப்பற்ற வங்கதேசம் தீவிரம் காட்டும்.
ஸ்ட்ரீமிங் மற்றும் ஒளிபரப்பு விவரங்கள்:
பிப்ரவரி 9, 2020 அன்று (ஞாயிற்றுக்கிழமை), போட்செஃப்ஸ்ட்ரூமில் உள்ள சென்வெஸ் பார்க்கில் போட்டி நடைபெறுகிறது.
யு 19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் நேரடி ஒளிபரப்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் கிடைக்கும், அதே நேரத்தில் லைவ் ஸ்ட்ரீமிங் ஹாட்ஸ்டாரில் கிடைக்கும். மதியம் 1:30 ISTக்கு போட்டி தொடங்கும்
பிட்ச் ரிப்போர்ட்:
சென்வெஸ் பார்க்கில் உள்ள ஆடுகளம் இதுவரை ஸ்பின்னர்களுக்கு ஆதரவாக உள்ளது மீண்டும். இதனால், இறுதிப் போட்டியிலும் ஸ்பின்னர்களின் ஆதிக்கம் இருக்கும் என நம்பலாம். இந்த ஆடுகளத்தில் ரன்கள் எடுக்க பேட்ஸ்மேன்கள் தங்களின் உச்சபட்ச திறனை வெளிப்படுத்த வேண்டும்.
ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக அமைந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டி : அதிலும் அந்த ரன் அவுட் பிரமாதம்
வானிலை முன்னறிவிப்பு:
இறுதிப் போட்டிக்கு மழை அச்சுறுத்தல் இருப்பதால் ரசிகர்களுக்கு இது நல்ல செய்தி இல்லை. உலக வானிலை அறிக்கையின்படி, ஞாயிற்றுக்கிழமை, அங்கு மிதமான மழையோ அல்லது கனமான மழையோ பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி
ப்ரியம் கார்க் (இ), கார்த்திக் தியாகி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, திவ்யான்ஷ் சக்சேனா, ரவி பிஷ்னோய், துருவ் ஜூரெல் (வார), சித்தேஷ் வீர், ஆகாஷ் சிங், அதர்வா அங்கோலேகர், சுஷாந்த் மிஸ்ரா, வித்யாத்ஷாக், குமார் குஷாகிரா.
வங்கதேசம்:
தோஹித் ஹிர்தோய், ஷரிஃபுல் இஸ்லாம், டான்சிட் ஹசன், ராகிபுல் ஹசன், ஷாஹாதத் ஹொசைன், ஷமிம் ஹொசைன், அக்பர் அலி (சி & டபிள்யூ), மஹ்முதுல் ஹசன் ஜாய், பர்வேஸ் ஹொசைன் எமோன், டான்சிம் ஹசன் சாகிப், ஹசன் முராத், மிருதுன்ஜோய் நவ்ரோஸ் நபில், ஷாஹின் ஆலம்.