19வயதிற்குட்பட்டோருக்கான உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் பயிற்சி ஆட்டத்தின் போது ஏற்பட்ட உடல் காயம் குறித்து, அம்மாவுக்கு தெரிந்தால் கவலைப்படுவார் என்று இளம்வீரர் மறைத்த ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
19 வயதிற்குட்பட்டோருக்கான உலககோப்பை தொடர், தற்போது தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியில், மும்பை வீரர் அதர்வா அங்கோல்கர் இடம்பெற்றிருந்தார். பயிற்சிப்போட்டியினிடையே, அதர்வாவுக்கு காயம் ஏற்பட்டதால், ஒரு வார காலம் ஓய்வில் இருக்கவேண்டுமென்று டாக்டர்கள் அறிவுறுத்தினர். தனக்கு காயம் ஏற்பட்டது தெரிந்தால், அம்மா கவலைப்படுவார் என்று அம்மாவிடம் இந்த செய்தியை, அதர்வா தெரிவிக்க மறுத்துவிட்டார்.
அதர்வாவின் தந்தை மும்பை போக்குவரத்து கழகத்தில் பணியாற்றியவர். அவரது மறைவிற்கு பின் அவரது வேலை, அம்மா வைதேகி அங்கோல்கருக்கு கிடைத்தது. அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு தன் இரண்டு பையன்களையும் வைதேகி கஷ்டம் தெரியாமல் வளர்த்து வந்தார். இந்நிலையில் தனக்கு ஏற்பட்ட இந்த சோக நிகழ்வை அம்மா அறிந்தால், மிகுந்த கவலைப்படுவார் என்று நினைத்த அதர்வா, இந்த விஷயத்தை அம்மாவிடம் தெரிவிக்க மறுத்துவிட்டார். தினமும் தொலைபேசியில் பேசிவந்தபொதிலும், இந்த விஷயத்தை அவர் தெரிவிக்கவில்லை.
உடல்நலம் தேறியபின்னரே, இந்த விஷயத்தை, அதர்வா அம்மாவிடம் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான காலிறுதி போட்டியில், இந்தியா 144 ரன்களுக்கே 6 விக்கெட்களை இழந்திருந்த நிலையில், இந்தியா 200 ரன்களே எடுத்தாலே அதிசயம் என்று நினைத்தநிலையில், 7வது விக்கெட்டுக்கு களமிறங்கிய அதர்வா, சிறப்பாக விளையாடி, இந்தியாவின் ஸ்கோரை 233 என்று உயர்த்தினார். ரவி பிஸ்னோய் - அதர்வா 61 ரன் பார்ட்னர்ஷிப்பால், இந்திய அணியின் ஸ்கோர் உயர்ந்தது. அதர்வா சிறப்பாக விளையாடி 55 ரன்கள் எடுத்தார்.
அப்பாவின் கனவை நிறைவேற்ற துடிக்கும் அதர்வாவின் துடிப்பை பாராட்டுவதா, தனக்கு ஏற்பட்ட காயத்தை கூட அம்மாவிடம் மறைத்த அதர்வாவின் நற்செயலை பாராட்டுவதா என்று அனைவரும் அதர்வாவை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.